இண்ட்ராஃப் குரல் - 21/01/2009

>> Thursday, January 22, 2009

இண்ட்ராஃப் - மலேசிய இந்தியர்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துக!


சுபாங் செயா காவல்நிலையத்தில், 22 வயதே கொண்ட குகன் எனும் இளைஞன் காவல்த்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்த சமயம் உயிரை விட்டிருக்கிறான். என்ன நடக்கிறது மலேசிய இந்தியர்களுக்கு? பேசாமல் 'நாசிக்கள்' யூதர்களைக் கொன்று குவித்ததைப்போல, அம்னோ அரசாங்கத்தின் ஊனக் கண்களுக்கு மூன்றாம் தர குடிமக்களாகத் தென்படும் ஒட்டுமொத்த மலேசிய இந்திய சமுதாயத்தையும் கைது செய்து கொன்றுவிட வேண்டியதுதானே..! விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த குகனைக் கொடுமைப்படுத்திய கொடூரத்தைப் பாருங்கள். இச்செய்தியை அம்னோவின் ஊடகமானநியூஸ் ஸ்ட்ரேட்ச் டைம்ஸ்' போன்ற நாளிதழ்கள் நியாயப்படுத்தும் விதத்தையும் பாருங்கள். இந்நவீன உலகத்தில்கூட, வேண்டத்தகாத ஓர் இனமாக மலேசிய இந்திய சமுதாயம் கருதப்பட்டு தொடர்ந்தாற்போல் பல கொடுமைகளைச் சந்தித்துதான் வருகிறது. மனிதநேயம் என்பது இன, மத, மொழி, நிறம் ஆகியவற்றைச் சார்ந்ததா என்ன? அல்லது தொடர்ந்து அரசு எந்திரங்கள் புரிந்துவரும் குற்றங்களை மூடி மறைத்து நம்மை அடக்க நினைக்கும் அம்னோ அரசாங்கத்தை வேடிக்கப் பார்த்துதான் கொண்டிருப்போமா?

மிருகங்களாயும் அடிமைகளாயும் பார்க்கபடுவதைவிடுத்து, மனிதனாக பிறந்துவிட்ட நமக்கு அரசியலமைப்பு சட்டங்கள் வழங்கும் சம உரிமைகளை பெறுவதற்குக்கூடவா அருகதை இல்லாமல் போய்விட்டது? ஏன், மலேசிய இந்தியர்கள் எனும் வரும்பொழுது மட்டும், எந்தவொரு சட்டமாகட்டும் , அரசியலுரிமையாகட்டும் பாராபட்சமாகச் செயல்படுகின்றன?

நாம் என்ன தவறு செய்துவிட்டோம், இதுபோன்ற பாராபட்சங்களை எதிர்நோக்குவதற்கு? எங்கள் முன்னோர்கள் இந்நாட்டிற்கு செய்த சேவைகள் மகத்தானவையல்லவா?

அண்மையில், உடலில் கொதிநீர் ஊற்றப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட பிரபாகரனுக்கே இன்னும் முறையான நீதி கிடைக்காத பட்சத்தில் தற்போது ஒரு மலேசிய இந்திய இளைஞனின் உயிர் காவல்நிலையத்தில் பலியாகியிருக்கிறது. அவரோடு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சாலமன் எனும் இளைஞன் எங்கு இருக்கிறார் என்றே யாருக்கு தெரியவில்லை. அவரும் பிணமாகத்தான் திரும்பி வருவாரா என்ற கேள்விகள் எழுகின்றன. அவரை காவல்த்துறையினர் விடுவித்தனரா அல்லது அவர் எங்கு உள்ளார் என இவர்கள் அறிவார்களா என்பது குறித்து இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. இவ்விடயத்தில் காவல்த்துறையினரின் வெளிப்படையற்ற போக்கும், பொறுப்பற்றத்தனமும் வெளிப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டங்களுக்கு மதிப்பளிக்காது, தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் காவல் நிலையத்திலும் வெளியிலும் நடைப்பெற்றுக் கொண்டுதான் வருகிறன. இதன்வழி அம்னோ காவல்த்துறையினரைப் பாதுகாப்பதில் மும்முரமாக இருந்து வருவதோடு, அவர்கள் புரியும் அட்டூழியங்களையும் நியாயப்படுத்த முனைகிறது. இத்தகைய சர்வாதிகார போக்கு நாட்டில் சம உரிமை மற்றும் நீதிக்கு அடிப்படையாக விளங்கிவரும் சனநாயக் கொள்கைகளை அவமதிப்பதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களையும் ஆதரிப்பதாக அமைந்துவிடுகிறது.

திரு.பொ.வேதமூர்த்தி
இண்ட்ராஃப் தலைவர்


குகனின் மரணம் குறித்து ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் மக்கள் சக்தியுடன் இணைந்து சில தன்னார்வத் தொண்டூழிய அமைப்புகளும், ம.இ.கா உறுப்பினர்களும் சேர்ந்து சுமார் 80 பேர் சுபாங் செயா மாவட்டக் காவல்த்துறை அலுவலகத்தின் முன்புறம் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.



அங்கு 8 கலகத் தடுப்புப் படையினரின் லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மறியலில் ஈடுபட்டோர் அனைவரும் கைகளில் பதாகைகளையேந்தியிருந்தனர்.


பார்ப்பவர்களின் மனங்களைப் பாதிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இளகிய மனமுடையவர்களுக்கு சற்று கவனம் தேவை!

மலேசியாகினி
படச்சுருள்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

சுப.நற்குணன்,மலேசியா. January 22, 2009 at 8:52 AM  

நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம்; பொதுமக்களின் நலனைப் பொத்திப் பாதுகாக்கிறோம்; கடமையைப் பாரடசமின்றி நேர்மையுடன் செய்கிறோம் என்று கொக்கரிக்கும் மலேசியக் காவல்துறை இதற்குச் சரியான பதிலைச் சொல்ல வேண்டும்.

வேலிகள் பயிரை மேயும் நாச வேலைகள் இங்கு நீண்ட காலமாகவே நிறைய நடந்துவருகின்றன. பெரிய தலைவர்கள் இதற்கெல்லாம் குரல் எழுப்பாமல் வேடிக்கை பார்ப்பது விந்தையாக உள்ளது.

நீதியின் பெயரால் சட்டத்தின் பெயரால் ஒரு சமுதாயத்தின் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு மாறி இப்போது உயிர்களே பறிக்கப்படுவது மாந்தநேயமற்ற செயல் மட்டுமல்ல ஈனச்செயலும்தான்.

காசாவிலும், இலங்கையிலும் அப்பாவி மக்களின் இன்னுயிர்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதற்கும் இதற்கு துளிகூட வேறுபாடு கிடையாது.

அகிலத்தை திருத்த ஆளாய் பறப்பவர்கள் முதலில் சொந்த நாட்டைத் திருத்தினால் நல்லது.

Anonymous January 22, 2009 at 11:30 PM  

காசாவிலும், இலங்கையிலும் அப்பாவி மக்களின் இன்னுயிர்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதற்கும் இதற்க்கும்
துளிகூட வேறுபாடு கிடையாது.
உண்மைதான் நற்குணன் ..இப்படித்தான் ஆரம்பித்தார்கள் முதலில் இலங்கையில் ..
தமிழனை கைவைக்கும் இவர்கள் சீனர்களிடம் தயங்குவது ஏன்?
தமிழனை அடித்தால் கேட்க நாதி இருக்காது என்று அவர்களுக்கு தெரியும் ..
கவலைபடவேண்டம் உறவுகளே ... ஈழம் அமையும் ..அப்போது எல்லோருக்கும் தெரியும் நாம் யாரென்று..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP