காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை!

>> Wednesday, January 21, 2009

சீருடை அணிந்த ரௌடிகளின் அராஜகம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது! இம்முறை குகன் /பெ ஆனந்தன் எனும் 22 வயது இளைஞர், காவல்நிலையத்தில் காவல்த்துறையினரால் நேற்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்புதான் பிரபாகர் என்பவர் காவல் நிலையத்தில் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டு சுடுநீர் ஊற்றப்பட்டு உடல் வெந்த நிலையில் மீண்டு வந்த கதையை நாம் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

குகன் என்பவர் சொகுசு வாகனங்கள் திருட்டு குறித்து விசாரணைக்காக சுபாங் செயா காவல் நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார். விசாரணை என்பது கேள்விகளோடு நின்றுவிடுவதில்லை! காவல்த்துறையினரின் எழுதாச் சட்டமான அடிஉதையையும் பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் பிரேதப் பரிசோதனையின்வழி தெரிய வருகிறது. விசாரணை நடைப்பெற்றுக் கொண்டிருந்த வேளை, குகன் " தாகமாக இருக்கிறது, குடிக்கத் தண்ணீர் வேண்டும்" எனக் கேட்டாராம். தண்ணீரைக் குடித்தவுடன் திடீரென இறந்துவிட்டதாக காவல்த்துறையின் தரப்பு காரணம் கூறுகிறது. குகனுக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால், ஒருவேளை அதனாலேயே இறந்திருக்கலாம் என காவல்த்துறையினர் கூறுகிறார்களாம்!

இன்று குகனின் குடும்பத்தினரோடு இணைந்து மக்கள் சக்தியின் சார்பில் திரு.செயதாசு, வழக்கறிஞர் திரு.சுரேந்திரன் மற்றும் காப்பார் நாடாளுமன்றப் பிரதிநிதி திரு.மாணிக்கவாசகம் ஆகியோர் சுபாங் செயா செக்சன் 18 மாவட்ட காவல்த்துறை அலுவலகத்தில் புகார் ஒன்றினை கொடுக்கவுள்ளனர். ஊடகவியலாளர்கள் செய்தியைப் பதிவதற்கு அழைக்கப்படுகிறார்கள். மேல் தகவல்களுக்கு தயவு செய்து திரு.செயதாசு அவர்களைத் தொடர்புக் கொள்ளவும்.

திரு.செயதாசு 012-6362287

இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி சென்னையில் மலேசிய இந்தியர்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்தபொழுது, நம் நாட்டு அருமை அரசியல்வாதிகள் அவருக்கெதிராக கண்டனங்களுக்கு மேல் கண்டனம் விட்டுக் கொண்டிருந்தார்களே..!

இப்பொழுது உண்மை நம் கண் முன்னேயே நிகழ்கிறது! அதனையும் நிராகரிக்கப்போகிறார்களா இந்த குருட்டு அரசியல்வாதிகள்!?Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

4 கருத்து ஓலை(கள்):

வடுவூர் குமார் January 21, 2009 at 12:23 PM  

கொடுமை.
குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

து. பவனேஸ்வரி January 21, 2009 at 12:43 PM  

என்ன கொடுமை இது? தட்டிக்கேட்க ஆளில்லை என்ற நினைப்பில் இவ்வாறு ஆட்டம் போடுகிறார்களா? இன்னும் எத்தனைக் காலங்கள்தான் இக்கொடுமைகளைச் சகித்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் வாழ்வது?

VIKNESHWARAN January 21, 2009 at 1:56 PM  

:(

K.USHA January 21, 2009 at 8:45 PM  

ஏன் தட்டிக் கேட்க யாருமே இல்லையா? என்ன சார் இது? எங்கே நாம் ஓட்டுப் போட்ட நம் நலன்விரும்பிகள்?....வாயை திறந்து பேச வேண்டிய நேரம் இது....நம் உயிரை எடுப்பதற்கு இவர்கள் யார்?என்ன சார், எல்லாம் கண்ணுக்கு முன்னே நடக்குது வெட்ட வெளிச்சமாய்....நம் இனத்தார்கள் மனம் துடிக்கவில்லையா? நாம் எல்லாம் அவ்வளவு சுயநலவாதிகளா நாம் உண்டு நம் வேலை ண்டு என்று வாயை மூடிக்கொண்டு இருக்க? ஐயோ இது கொடுமை...கொடுமை...அராஜகம்...அராஜகம்....

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP