புலம்பெயர் இந்தியர்களின் மாநாட்டில் இண்ட்ராஃப்!

>> Saturday, January 10, 2009


புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடானபிரவாசி பாரதீய திவாசு' இவ்வாண்டு சென்னையில் மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைப்பெற்று முடிந்தது. பலநாடுகளிலிருந்து பார்வையாளர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் வருடாவருடம் மலேசியாவைப் பிரதிநிதித்து ..காவும் அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பங்காளி இயக்கங்களுமே கலந்துக்கொள்ளும். ஆனால், இம்முறை வேறு வழியில்லை, எதிர்க்கட்சிகளும் இண்ட்ராஃப் அமைப்பின் தலைவர்களும் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டது ..காவிற்கும் அவர்களின் பங்காளிகளுக்கும் அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும்.

கடந்த மாநாடுகளில், மலேசிய இந்தியர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று தம்பட்டம் அடிப்பதற்கு சென்றுவந்துகொண்டிருந்த இக்கூட்டத்தினரின் முகத்திரை சென்னையில் இன்று கிழிந்துவிட்டது. பிரவாசி மாநாட்டிற்குச் செல்வதற்கு ஆயுத்தமாகியிருந்த வேளையில் முன்னாள் ..கா துணைத் தலைவர் டத்தோ சுப்ரா பத்திரிக்கையில் ஓர் அறிக்கை வெளியிட்டார். 'பிரவாசி மாநாட்டிற்குச் செல்பவர்கள் மலேசியாவின் பெயரைக் கலங்கப்படுத்தக் கூடாது' என்பதே அவரின் அறிக்கை. அதாவது, உண்மைகளைப் பேசாது அம்மாஞ்சி முகத்தை வைத்துக் கொண்டு, பொய்களைப் பேசிவிட்டு வந்தால் நல்லது என்பதே அவரின் அறிவுரை.

இதுபோக, கட்சித் தலைவர் என்ற பதவியைத் தவிர தற்சமயம் அரசாங்கப் பதவிகளில் ஏதும் முக்கிய பதவிகள் வகிக்காத சாமிவேலு, இந்திய சமுதாயத்தையே பிரதிநிதிப்பதுபோல் நடந்துக் கொள்வது வேடிக்கையாக உள்ளது. காலங்காலமாக இந்திய சமூகத்தினரை அம்னோவிற்கு அடிமைப்படுத்தும்கங்காணி' வேலைப் பார்த்துவந்த இவர், திரு.வேதமூர்த்தியைச் சாடி நாளிதழ்களில் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார். உண்மைகள் வெளிபட்டதனால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலோ! எதிர்க்கட்சியினரை தாங்கு தாங்கு என தாங்குவதாக இண்ட்ராஃபை குற்றஞ்சாட்டுகிறார் இந்த அம்னோ தாங்கி! இண்ட்ராஃப் எந்தவொரு கட்சியையும் பிரதிநிதிக்கவோ, ஆதரிக்கவோ கிடையாது. மக்கள் கூட்டணியே தவறு செய்தால் இண்ட்ராஃப் எதிர்த்து குரலெழுப்பும்!

இண்ட்ராஃப் என்றுமே அரசியல் சாரா மனித உரிமை இயக்கமாக இருக்க விரும்புவதை இவர் விரும்பவில்லை! அரசியலுக்குள் எப்படியாவது இழுத்து இண்ட்ராஃபின் நற்பெயரை நாறடிக்க வேண்டும்! உங்களுடைய தகிடுதித்தங்கள் மக்கள் சக்தியின் முன்பு தவிடுப்பொடியாகி விடும் என்பதை மறந்துவிடவேண்டாம்!

கடந்த 51 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள் படிப்படியாக தங்களின் அரசுரிமைகளை இழந்துவருகின்றனர்! அதனை உலக இந்தியர்களுக்கு ஆதாரப்பூர்வமாக அறியவைப்பது தன்னுடைய ஒரு கடமையெனக் கருதி 33 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை 1500 வருகையாளர்களுக்கு விநியோகித்துள்ளார் திரு.வேதமூர்த்தி.

அதனைப் பதிவிறக்கம் செய்து படிக்க இணைய இணைப்பைச் சுட்டுங்கள் :-
மலேசிய இந்தியர்கள் - ஆய்வறிக்கை

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

4 கருத்து ஓலை(கள்):

Rajaraman January 10, 2009 at 4:24 PM  

நண்பரே உங்களின் உரிமை போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.

Sathis Kumar January 10, 2009 at 5:06 PM  

இது என்னுடைய உரிமைப் போராட்டம் இல்லை, நம்முடைய உரிமைப் போராட்டம்! சிந்தனையிலும் செயலிலும் 'நாம்' எனும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே சிறந்ததாகும்.

வருகைக்கு நன்றி ராசாராமன்..

Anonymous January 11, 2009 at 11:27 PM  

இறைவன் அருளால் நல்லது கண்டிப்பாக நடக்கும்.திரு வேத மூர்த்தி சொல்லியது போல்..நம் நாட்டில் முதலீடு செய்ய வேண்டாம் என்றால் அம்னோகாரர்களுக்கு கசப்பாக உள்ளது..உள்ள நாளெல்லாம் நாம் கசந்து கொண்டிருப்பது..கண்டிப்பாக நமக்கு வசந்தம் வரும்.....

Sathis Kumar January 12, 2009 at 12:24 AM  

//@மூர்த்தி
கண்டிப்பாக நமக்கு வசந்தம் வரும்.....//

நிச்சயமாக மூர்த்தி, அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என நிரூபிக்கும் வரையில் நம் போராட்டம் தொடர வேண்டும்..!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP