மக்கள் கூட்டணி கோலாதிரெங்கானுவைக் கைப்பற்றியது!
>> Saturday, January 17, 2009
பரபரப்பாக பேசப்பட்டு வந்த கோலாதிரெங்கானு இடைத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிப் பெற்று மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளது. பாஸ் கட்சி வேட்பாளரான முகமது அப்துல் வாஹிட் எண்டுட் பாரிசானின் வேட்பாளரான அகமது பாரிட் வானையும் சுயேட்சை வேட்பாளர் அசாரூதீன் மாமாட்டையும் 2,631 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இவ்வெற்றியானது மக்கள் கூட்டணியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் தேசிய முன்னணியின்பால் இழந்துவிட்ட அவநம்பிக்கையையும் ஒருங்கே படம் பிடித்துக் காட்டியுள்ளது.
‘அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்!' எனும் பழமொழிக்கேற்ப 52 ஆண்டுகளாக மக்களை புறக்கணித்து வந்த அம்னோ அரசாங்கத்திற்கு தற்போது அடிமேல் அடி விழுந்து வருகிறது. தற்சமயம் நான்கு சட்டமன்ற இடங்கள் மக்கள் கூட்டணியின் கைவசம் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!
‘அரசன் அன்று கொல்வான்! தெய்வம் நின்று கொல்லும்!' எனும் பழமொழிக்கேற்ப 52 ஆண்டுகளாக மக்களை புறக்கணித்து வந்த அம்னோ அரசாங்கத்திற்கு தற்போது அடிமேல் அடி விழுந்து வருகிறது. தற்சமயம் நான்கு சட்டமன்ற இடங்கள் மக்கள் கூட்டணியின் கைவசம் வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!
இடைத்தேர்தல் முடிவுகள்
வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் 35 மேசைகள் கொண்ட இரவு உணவு விருந்துக்கு பாரிசான் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அவ்விருந்தில் கூட்டமே இல்லையெனவும் மலேசியாகினி செய்தி அறிவிக்கிறது. இதற்கிடையில் கோலாதிரெங்கானு இடைத்தேர்தலில் தோல்வியைக் கவ்விய பாரிசானின் வருங்கால பிரதமர் நஜீப் விரைவில் நிருபர் கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலானது உண்மையில் நஜீப்பின் ஆளுமையை பரிசோதிக்கும் ஒரு களமாக விளங்கியதை நாம் மறுக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதுபோல் நஜீப்பின் தலைமைத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இனியும் நஜீப்பிற்கு கஷ்ட காலம்தான்! திரெங்கானுவுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட 1000 கோடி பணமும் இன்னும் பிற வாக்குறுதிகளும் இனி காற்றில் பறந்த கதைதான்!
1 கருத்து ஓலை(கள்):
இந்த இடைதேர்தல் முடிவு நஜிப்பிற்கு கிடைத்த அடி மட்டும் அல்ல..... பண அரசியல்,தில்லு முல்லு, அதிகார துஷ்பிரயோகம், கள்ள ஓட்டு இன்னும் பிற திருட்டு தனங்களுக்கு விழுந்த மரண அடி...
Post a Comment