இணையக் குறும்பர்களின் கைவரிசையா?
>> Wednesday, July 2, 2008
இன்று காலையில், பிரபல இணையத்தளமான 'மலேசியா டுடே' அனாமதேய இணையக் குறும்பர்களின் செயலால் தடைப்பட்டுள்ளது. வழக்கம்போல் இணையச் செய்திகள் இடம்பெறவேண்டிய முகப்பில், முன்னாள் பிரதமர் இராணுவ உடையில் தோற்றமளிக்கும் படம் ஒன்று தோற்றமளிக்கிறது.
"இந்த இணையத்தளம் 'காசாக் டோட் நெட்'டால் தாக்கப்பட்டுள்ளது" எனும் வாசகமும் அங்கு இடம்பெற்றிருக்கிறது. இவ்விணையத்தள உரிமையாளரான ராஜா பெட்ரா கமரூதீனைத் தொடர்புக் கொண்டு கேட்டதற்கு, 'மலேசியா டுடே' இணையத்தளத்தின் கட்டுப்பாட்டகம் சிங்கப்பூரில் செயல்பட்டு வருவதாகவும், கட்டுப்பாட்டக தொடர்பு சற்று தேக்க நிலையில் இருப்பதாகவும், அதனை மீண்டும் வழக்க நிலைக்கு கொண்டு வருவதில் கடும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் அறிவித்தார்.
இதற்கிடையில் மாலையில், ஸ்ட்ரீமிக்ஸ் சேவையில் ஏற்பட்ட சுணக்கத்தினால், தமது இணையத்தளம் தடைப்படக் காரணமாக இருந்ததாகவும், இணையக் குறும்பர்களின் கைவரிசை இல்லை எனவும் அறிவித்தார்.
கூடிய விரைவில் இவ்விணையத்தளம் மீட்டெடுக்கப்பட்டு, தனது வற்றாதச் சேவையைத் தொடங்க வேண்டும் என எதிர்ப்பார்ப்போம்.
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment