உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ராஜா பெட்ரா கைது!!!!
>> Friday, September 12, 2008
'மலேசியா டுடே' எனும் பிரபல வலைப்பதிவின் எழுத்தாளரான ராஜா பெட்ரா இன்று மதியம் 1.10 மணியளவில் சுங்கை பூலோவிலுள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
ராஜா பெட்ராவின் மனைவி மரினா லீ அப்துல்லா கூறுகையில், ராஜா பெட்ராவைக் கைது செய்ய 10 காவல்த் துறையினர் தனது வீட்டிற்கு வந்ததாகவும், இக்கைது நடவடிக்கை தொடர்பாக தாம் இன்னும் தமது வழக்கறிஞரை நியமிக்கவில்லை எனக் கூறினார்.
ராஜா பெட்ரா உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாவது இதோடு இரண்டாவது முறையாகும்.
2001-ல் 'ரீபோர்மாசி' இயக்கத்தில் போராடியதற்காக அவரோடு ஒன்பது பேர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகினர். அதன் பின் அவர் இரண்டு மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரோடு சேர்த்து கைது செய்யப்பட்ட மற்ற ஆறு 'ரீபோர்மாசி' இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கமுந்திங்கில் இரண்டு ஆண்டுகாலம் தடுத்து வைக்கப்பட்டனர்.
'மலேசியா டுடே' எனும் இணையத்தளத்தின் வழி அரசாங்கத்தைச் சாடி வந்ததாகவும், பல அவதூறுகளைக் கூறி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு பலமுறை அவர் கைதாகியுள்ளார். அண்மையில் நபிகள் நாயகத்தையும் இசுலாம் மதத்தையும் இழிவாகக் குறிப்பிட்டதாக அவர்மீது 'ஜாக்கிம்' உட்பட மற்ற சில இசுலாமிய அமைப்புகள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தன. அதன்பின் மலேசியா டுடே இணையத்தளம் தடைச்செய்யப்பட்டு நேற்றுதான் தடை நீக்கப்பட்டது.
அவரின் புதிய பதிவான 'மே 13-இன் உண்மைக் கதை பகுதி 1' கட்டுரையில் நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமானிடம் பேட்டிக் கண்டதை அவர் வெளியிட்டிருந்தார். அக்கட்டுரையில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாவதின்வழி, அவருக்கு எந்தவொரு முறையான விசாரணையும் நடத்தப்படாமல் கமுந்திங்கில் காலவரையறையற்ற தண்டனைக் காலம் அமலாகலாம்.
இன்று நம் இண்ட்ராஃப் தலைவர்களுக்கு முறையான விசாரணை, உடல்நல பாதிப்பிற்கேற்ற முறையான சிகிச்சையின்மை, சரியான உணவு, வெளிஉலகத்திலிருந்து தொடர்பு அற்ற ஒரு நிலைமை ராஜா பெட்ராவிற்கு வரக் கூடும். ஏது நடந்தாலும் சரி, கொடுங்கோல் சட்டமான உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டுவதே நாட்டுபற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு மலேசியனின் கடமையாகும். இதற்காக நாம் போராடியே ஆக வேண்டிய ஒரு சூழல் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் அம்னோ அரசாங்கத்திற்கு விரைவில் முடிவு காலம் வந்துவிட்டது.. இசுலாமிய மதத்தை இழிவாகப் பேசியதாகக் கூறப்பட்ட ராஜா பெட்ராவிற்குக் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் என்றால், அண்மையில் இந்து சமயத்தைக் கேவலமாகப் பேசிய ஷா கிரீட்டிற்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அம்னோ அரசாங்கம்..?!
சீனர்களைக் குடியேறிகள் என்று அவமானப்படுத்திய அகமது இசுமாயில் மன்னிப்புக் கோராமல் கர்வத்தோடு பேசியவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அம்னோ அரசாங்கம்..?! தமிழர்களை 'கில்லிங்' 'பரையா', தமிழர்கள் நாயிலிருந்து பிறந்தவர்கள் என்று பலவாறாக தமிழ் மாணவர்களை இழிவுபடுத்தி அடி உதைக்குள்ளாக்கிய ருசுனித்தா எனும் இனவெறி ஆசிரியைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது அம்னோ அரசாங்கம்..?!
இந்த பூச்சாண்டிகளுக்கு பயந்து இனியும் எந்த மலேசியனும் பயப்படப்போவதில்லை...!! மேலும் வலுப்படப்போகிறது எங்கள் போராட்டம்...!!
மேலும் தகவல்கள் பின் பதிவிடப்படும்...
1 கருத்து ஓலை(கள்):
ஒரு இசுலாமிய நாட்டில் மற்ற மதத்தினர் வசிப்பது கடினம் என்பதற்க்கு மற்றோரு உதாரணம் மலேசியா. இந்தியாவில் தினமலர் படம் வெளியிட்டதற்க்கு குதியோகுதி எனக் குதிகிறார்கள்.
ஒருவர் வலையில் எழுதுகிறார்... ஜனநாயக நாட்டில் பொருத்து போக வேண்டியுள்ளதாம். ஏன் சட்டம் தன் வேலை செய்யதால் போததா?பின்னர் என்ன அவன் கையையா வெட்ட வேண்டும்?
ஆனால் மற்ற மதத்தினர் உரிமையை மட்டும் எந்த முஸ்லிம் நாடும் மதிப்பதில்லை.
Post a Comment