உதயகுமாரின் நீதிமன்ற விண்ணப்பம் தள்ளுபடி..!
>> Thursday, September 18, 2008
கமுந்திங் தடுப்புக் காவலில் தமக்கு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை, அதனால் மருத்துவக் காரணங்களுக்காக தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று இண்ட்ராஃப் தலைவர் திரு.உதயகுமார் நீதிமன்றத்தில் கோரிய விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது.
தைப்பிங் மருத்துவமனையிலும் கமுந்திங் தடுப்புக் காவலிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமக்கு முறையாக மருந்து, சிகிச்சை மற்றும் சரிவிகித உணவு வழங்கவில்லை என்று திரு.உதயகுமார் தமது விண்ணப்பத்தில் குற்றஞ்சாட்டியிருப்பதன் தொடர்பில், அவரது வழக்கின் நீதிபதியான சுராயா திரு.உதயகுமாரின் குற்றச்சாட்டு ஏற்புடையதாக இல்லை எனக் கோரி விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார்.
திரு.உதயகுமாரின் உடல்நிலையை முறையாகப் பரிசோதித்து ஏற்ற மருந்துகளையும் வழங்கியதோடு உணவுத்திட்ட நிபுணரின் பரிந்துரைக்கேற்ப அவருக்கு பொருத்தமான சைவ உணவு தயாரித்து வழங்கப்பட்டதாகவும், உள்துறை அமைச்சும் முகாம் அதிகாரிகளும் பல்வேறு வாக்குமூலங்களின்வழி தெரிவித்து உள்ளனர்.
எட்வின் லிம் மற்றும் சுரேன் நிறுவனத்தினரின் மூலம் கடந்த மே 22இல் செய்த முதற்கட்ட விண்ணப்பத்தில் தம்மை உள்நாட்டு பாதுகாப்புச் சட்ட தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கக் கோரியதுடன் தமது நீரிழிவு மற்றும் நெஞ்சக நோய்களுக்கு சிகிச்சை பெறும் வகையில் தம்மை தேசிய இருதயக் கழகத்தில் சேர்க்க வேண்டுமெனக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய இருதய கழகத்தில் அரச தரப்பு மருத்துவர்கள் மூன்றாம் தரப்பினரின் நெருக்குதலுக்கு ஏற்ப தமக்கு சிகிச்சை வழங்குவார்கள் என்பதால், தாம் விரும்பும் மருத்துவர்களைக் கொண்டே வெளிநாட்டில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அது தனது உரிமை என்றும் அவர் விண்ணப்பித்திருந்தது நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது..!
உரிமையும் இழந்து இன்று முறையான சிகிச்சையும் மறுக்கப்பட்டு கமுந்திங் தடுப்புக் காவலில் வாடும் திரு.உதயகுமாரை நினைத்தால் இதயம் ஒரு கணம் கனக்கிறது.. :(
2 கருத்து ஓலை(கள்):
//உரிமையும் இழந்து இன்று முறையான சிகிச்சையும் மறுக்கப்பட்டு கமுந்திங் தடுப்புக் காவலில் வாடும் திரு.உதயகுமாரை நினைத்தால் இதயம் ஒரு கணம் கனக்கிறது.. :(//
நம் ஒட்டு மொத்த இந்தியர்களின் உரிமையைக் கோரப்போய் இன்று தமதுரிமையை இழந்து நிற்கும் இந்த ஜீவனுக்கு கடவுள் தான் வெளிச்சம் காட்ட வேண்டும்...
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்..!!
Post a Comment