மேலவையில் ஐந்து இடங்கள் தேவை, அரசியல் அமைப்பாக ஹிண்ட்ராப்பை அங்கீகரிப்பீர்.
>> Tuesday, March 25, 2008
கோலாலம்பூர், மார்ச் 25-
ஹிண்ட்ராப் தலைவர்கள் ஐவர் இசா சட்டத்தில் கைதாகி நூறு நாட்கள் ஆகிவிட்டது. இம்மாதம் 22ஆம் மற்றும் 23ஆம் தேதி இவர்கள் பற்றி நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டது என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி பத்திரிகைகளுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளார். இவர்கள் கைதாகி தடுப்பு முகாமில் இருப்பது குறித்து உலகளவில் ஆட்சேப கூட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மார்ச் 22ஆம் தேதியன்று சான் பிரான்சிஸ்கோ ஜநா பிளாசாவில் ஆட்சேப கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இசாவை அகற்றுவோம் என்று பல்வேறு கருத்தரங்குகளில் பல்லாயிரக்கணக்கான மலேசியர்கள் கலந்து கொண்டனர். எட்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மக்கள் சக்தி மூலம் ஹிண்ட்ராப் அரசாங்கத்திற்கு தெளிவான செய்தியினை அனுப்பியது. ஐம்பது ஆண்டு காலமாக இந்திய சமூகம் ஓரங்கட்டபட்டு விட்டது. 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் தேதியன்று பிரதமருக்கு வழங்கப்பட்ட 18 அம்ச கோரிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும். ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு ஒரு போதும் மிரட்டலாக இல்லை.பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பு என்பது சுத்த அபத்தமான குற்றச்சாட்டு.
ஹிண்ட்ராப் பேரணியால் இந்திய வாக்காளர்களின் ஆதரவினை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அரசாங்கம் ஹிண்ட்ராப் தலைவர்களை இசா கூட்டத்தின் கீழ் கைதுசெய்ய முடிவு எடுத்தது என்பதை இந்த கருத்தரங்கம் நன்கறியும். ஐவரும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். சட்டவிரோதமான முறையில் கைது செய்தற்காக அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தேர்தல் களத்தில் ஹிண்ட்ராப்பின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஜசெக - கெடிலான் - பாஸ் கட்சிகள் தங்களின் பணியினை ஆற்றவேண்டும். நாடாளுமன்ற மேலவையில் குறைந்தபட்சம் ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். பினாங்கு, பேரா, சிலாங்கூர் போன்ற மாநிலங்களில் துணை மந்திரிபுசார் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
ஹிண்ட்ராப் ஒரு அரசியல் அமைப்பாக பதிவு செய்யப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கபடவேண்டும். ஹிண்ட்ராப் ஒரு அரசியல் அமைப்பாக பதிவு செய்யப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும். இசா சட்டத்தை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அகற்றுவதற்கு பிரதமர் ஆவன செய்யவேண்டும்.
ஹிண்ட்ராப் மலேசிய இந்தியர்களின் புதிய உரிமைக்குரல் என்ற உண்மை நிலையினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் வேதமூர்த்தி தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். இசா சட்டம் அகற்றப்படவேண்டும் என்ற ஹிண்ட்ராப்பின் தீவிர பிரச்சாரம் தொடரும்.
தகவல் - மலேசிய நண்பன் (நன்றி)
போராட்டம் தொடரும்...
3 கருத்து ஓலை(கள்):
Anonymous said...
Hindraf ARASIAL ellai ellai endru solli vitthu ippoluthu ippadi ketpathu niyama?
HINDRAF kooda arasial nokkam kondathaagi vitthatha?
Enna verupaadu namakkum matravargalukkum?
Vethanaiyaaga irukirathu...
`THIS FORUM calls on the Government to recognize the legitimate existence and contributions of HINDRAF to the country and calls upon the Government to immediately approve the registration of HINDRAF as a Civil Rights and Political Pressure group/organization.'
The above is taken from the original text.
Obviously the person (from Malaysia Nanban) who did the translation did not understand the difference between a `political pressure group' and a `political party'.
அரசியல் அமைப்பு என்றாலே அது கட்சி என்று அர்த்தமாகிவிடாது. அரசியலில் நடக்கும் தவறுகளைத் தட்டி கேட்கும் ஒரு இயக்கம் எனும் பட்சத்தில் அதற்கும் அரசியல் நோக்கம் உள்ளது எனக் கொள்ளலாம். அரசியல் கொள்கைகளை ஒரு அரசியல் கட்சி மட்டும் கொண்டிருக்க வேண்டும் என அர்த்தமில்லை. கட்சி நிறுவாமலேயே அரசியலில் தன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தி அதன்வழி மக்களுக்குத் தொண்டு செய்யும் அமைப்பை அரசியல் அமைப்பு என்றும் கூறலாம், தவறில்லை. அதன்படி பார்த்தால் இந்து உரிமைப் பணிப்படையை அரசியல் அமைப்பு, உரிமை செயற்பாட்டுக் குழு எனப் பலவகையில் அதன் செயல்பாடுகளை விஸ்தரித்து ஒரு பேரியக்கமாக உருவாக்கலாம். அதன்வழி மக்கள்தான் நன்மைப் பெறுவர். தலைவர்கள் குணத்தில் தங்கமாகவும் கடமையில் கண்ணியமாகவும் நடந்துக் கொண்டாலே போதும், அது கட்சியாகட்டும், அல்லது பொது இயக்கமாக இருக்கட்டும், நிச்சயம் அதன் நிர்வாகத் திறமையில் மக்கள் சுபிட்சம் பெறுவார்கள்.
Post a Comment