ஷா கிரிட்டிற்கு எதிராக மலாக்காவில் தொடர்ச்சியான புகார்கள்...!!

>> Thursday, April 10, 2008


கடந்த செவ்வாய் கிழமை (08-04-2008) அன்று 'மலாக்கா தெங்கா' காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட இந்துக்கள் ஷா கிரிட் கோகுலால் கோவிந்ஜி என்கிற இசுலாமிய சமய அதிகாரியின்மீது, இந்து மதத்தை கீழ்த்தரமாக பேசிய காரணத்தால் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதன் படக்காட்சி இதோ :நேற்றிரவு புதன்கிழமை (09-04-2008) மலாக்காவில் சுமார் 100 பேர்கள் ஷா கிரிட்டிற்கு எதிராக ஞாலாஸ் காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றிருக்கின்றனர். சென்றவர்களில் ஒரு சிலரை மட்டுமே காவல் நிலையத்தினுள் அனுமதித்த காவல் துறையினர் எஞ்சியவர்களை காவல் நிலையத்தின் வெளியே இருக்கவிட்டு இரும்புக் கதவை இழுத்து மூடியுள்ளனர். அதனால் அங்கு கூட்டத்தின் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் படக்காட்சி இதோ :போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP