'இ.சா வை துடைத்தொழிப்போம்' கருத்தரங்கு பினாங்கில் இனிதே நடந்தேறியது..
>> Sunday, April 20, 2008
நேற்றிரவு (19-04-2008) பினாங்கு குட்டி இந்தியா அருகே உள்ள சீனர் மண்டபத்தில் "இ.சா வை துடைத்தொழிப்போம்" எனும் கருத்தை மையமாகக் கொண்டு நடைப்பெற்ற நிகழ்வில், பினாங்கு சுற்றுவட்டார மக்கள் சுமார் 2000ற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு தங்களுடைய ஆதரவை புலப்படுத்தினர். இந்நிகழ்வில் சீனர்களும், மலாய்க்காரர்களும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. முன்பே குறிப்பிட்டது போல இந்நிகழ்விற்கு பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்து தங்களுடைய எழுச்சி உரைகளை ஆற்றிச் சென்றனர். இந்நிகழ்வின் முதல் பேசாளராக ஜி.எம்.ஐ இயக்கத்தின் தலைவர் திரு.சாயிட் இப்ராகிம், கமுந்திங் தடுப்புக் காவலில் கைதிகளுக்கு எதிராக நடைப்பெறும் கொடுமைகளை அரங்கின் திரையில் படக்காட்சிகளோடு திரையிட்டு விளக்கினார்.
இவருக்குப் பின், மாநில முதல்வர் திரு.லிம் குவான் எங், மாநில துணை முதல்வர் திரு.இராமசாமி, பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் திரு.இரவீன், மனித உரிமை வழக்கறிஞர் குமார் லத்திபா கோயா, மக்கள் சக்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன் போன்றோர் தங்களுடைய பங்கிற்கு, உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி மக்களை பரவசப்படுத்தினர். திரு.வேதமூர்த்தி, திரு.உதயகுமார் ஆகிய இவ்விரு மகாத்மாக்களை ஈன்றெடுத்த தாயார் கலைவாணி அவர்கள் தமது உரையில் சபையோரை நெகிழ வைத்தார். முதலமைச்சர் உரை நிகழ்த்தியப் பின் 5 தலைவர்களின் முகமூடிகளை அணிந்த ஐந்து இளைஞர்கள் முதலமைச்சரிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தனர். அதன் பின் அவர் ஐந்து தலைவர்களை விடுவிக்கக் கோரும் பதாகையில் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்விற்கு இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி அவர்களை இணையம் வழி நேரடி தொடர்பு கொண்டு மக்களிடம் சில வார்த்தைகளைப் பேச முயற்சிக்கப்பட்டது, ஆனால் திரு.வேதமூர்த்தி அவர்கள் ஜெனிவாவிலிருந்து லண்டனுக்கு வந்துக் கொண்டிருப்பதாகவும், இன்னும் வீட்டிற்கு அவர் வந்துச் சேரவில்லை எனவும் தகவல் கிடைத்து. நிகழ்ச்சியின் இறுதிவரை அவரைத் தொடர்புக் கொள்ள முடியாமல் போனது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பு செய்தியாளர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையாகும், ஆனால் இணையத்தைத் தவிர்த்து வேறெந்த ஊடகங்களிலும் இவ்வறிக்கை இடம்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
ஊடக அறிக்கை
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment