எங்க‌ளுக்கு ச‌ம‌ய‌ சுத‌ந்திர‌ம் கிடைக்குமா..?

>> Tuesday, April 22, 2008

ப‌ண்டார் ம‌லாக்கா பாலாய் ப‌ஞ்சாங் எனுமிட‌த்தில் 6 உறுப்பின‌ர்க‌ள் கொண்ட‌ ஓர் முஸ்லீம் இந்திய‌க் குடும்ப‌ம் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்து வ‌ழிப்பாட்டு முறைக‌ளை க‌டைப்பிடித்து வ‌ந்துள்ள‌ன‌ர். பிற‌ப்பில் தாய் த‌ந்தைய‌ர் இந்துவாக‌ இருந்து பின் ம‌த‌ம் மாறிய‌தால், அவ‌ர்க‌ள‌து 6 பிள்ளைக‌ளும் முஸ்லீம் ம‌த‌த்தைத் த‌ழுவ‌ நேர்ந்த‌து. இப்போது அக்குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் அனைவ‌ரும் முஸ்லீம் ம‌த‌த்திலிருந்து அதிகார‌ப் பூர்வ‌மாக‌ இந்து ம‌த‌த்திற்கு மாறிட‌ வேண்டும் என‌ ஆசைப்ப‌டுகிறார்க‌ள். அத‌ற்காக‌ ஜ‌ன‌நாய‌க‌ செய‌ல் க‌ட்சியியைச் சார்ந்த‌ ஆயேர் குரோ ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் திரு.கூ அவ‌ர்க‌ளின் உத‌வியை இக்குடும்ப‌ம் நாடியுள்ள‌து. இவ‌ர்க‌ள‌து ஆசை நிறைவேறுமா? இவ்விட‌ய‌ம் தொட‌ர்பாக‌ அர‌சாங்க‌ம் என்ன‌ முடிவு எடுக்க‌வுள்ள‌து என‌ பொறுத்திருந்து பார்ப்போம்...

ப‌குதி 1



ப‌குதி 2

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

16 கருத்து ஓலை(கள்):

Anonymous April 24, 2008 at 9:22 PM  

வீடியோவை கவனமாக பார்த்தால் சில வினாக்கள் எழுகிறது.

பேட்டியளிப்பவர் தனது பெற்றோர்கள் மதம் மாறக்காரணம் தனது தாத்தா என்று கூறிவிட்டு - பிறகு தனது தந்தையின் நன்பர்கள்தான் காரணம் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை.

நன்பர்கள் கூறினார்கள் என்பதற்காக எதையும் செய்யும் அப்பாவியாக தெரியவில்லை மதம் மாறிய அந்த கயவன். அவனை கயவன் என்று ஏன் அழைகிறேன் என்றால் - JB யில் இன்னுமொரு திருமணம் செய்து அவனுக்கு 13 குழந்தைகள் இருப்பதாக பேட்டியளித்தவர் கூறுகிறார். இஸ்லாமிய பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இந்து வழிபாடு செய்துகொண்டிருந்தவர்களை முஸ்லிம் என்று மலேசிய அரசின் ஆவணங்கள் மட்டும்தான் கூறுமே தவிர - அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல.

இந்துவாக மாற அவர்களுக்கு வாழ்த்துக்கள்..அறியா வயதில் அப்பன் குத்திய மத முத்திரை அழித்து - இந்து மதம் நுழையும் அவர்களை ‘பூ நூல்' அனிவித்து கௌரவித்து வரவேற்க வேண்டும். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு நேரும் அவல நிலை அவர்களுக்கு நேராமல் தடுக்க வேண்டும்.

சட்ட உதவிக்கு கீழ்கண்ட நிறுவனத்தை அனுகலாம். இந்த அமைப்பு.
Sisters In Islam,
No. 7, Jalan 6/10,
46000 Petaling Jaya Selangor
MALAYSIA

Tel: (603) 7785 6121/ 7784 2733/ 7784 4357
Fax: (603) 7785 8737
Email: sistersinislam@pd.jaring.my

அமிழ்தினியன்,
சுங்கைபாக்கப்

Anonymous April 24, 2008 at 9:42 PM  

நன்பரே!
நான் பாஸ் ஆதரவாளன். நிபோங் தெபாலை சேர்ந்த இஸ்லாமியன்.
தங்களது பதிவின் நோக்கம் பற்றி எனக்கு எழுந்த சந்தேகங்களை கீழே தந்திருக்கிறேன்.

மதம் மாற்றம் விசயத்தில் - சமீபத்தில் பாதிக்கப்பட்ட ரேவதி என்ற இந்து சகோதரிக்காக, மலேசியாவில் உள்ள பல்வேறு இஸ்லாமிய மனித உரிமை ஆர்வலர்களும், இஸ்லாமிய பெண்கள் அமைப்புகளும் வீதியில் இறங்கி போராடி இருக்கிறார்கள். இன்னும் சில இஸ்லாமியத் தலைவர்கள் அந்த சகோதரிக் காக குரல் கொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கு பிறகும் இந்த விவகாரத்தை உலக மக்கள் பார்வைக்கு கொண்டு வந்திருப்பதும் ஓர் இஸ்லாமிய நாட்டின் தொலைக்காட்சி ஸ்தாபனம்தான்! 'அல்ஜஸீரா' என்கிற அந்தத் தொலைக்காட்சி ஸ்தாபனம் வளைகுடா வில் உள்ள கத்தாருக்குச் சொந்தமானது. இஸ்லாமியர்களின் இத்தனை செயல்பாடும் தங்களுக்கு தெரிந்திருக்கும். தற்போதைய இந்தப்பிரசினைக்கு அவர்களது சொந்தப் பெற்றோர்கள்தான் என்பதும் உங்களுக்கு புரிந்திருந்தும், இஸ்லாமியனையும், இஸ்லாத்தையும் மனம் போனப்படிக்கு தடித்த வார்த்தைகளால் திட்டித் தீர்த்திருக்கும் வீடியோவை தனக்களது பதிவில் இடலாமா? அனவர் இப்ராஹீம் என்ற இஸ்லாமியன் மட்டும் இல்லா விட்டால் - HINDRAF க்கு அடையாளம் கிடைத்திருக்குமா என்பதை சற்று யோசித்து பாருங்கள்.


முகமது யூசுப் பின் முகமது காசிம்,
நிபோங் தெபால்

Sathis Kumar April 25, 2008 at 1:25 AM  

ஐயா அமிழ்தினிய‌ன் அவ‌ர்க‌ளுக்கு க‌னிந்த‌ வ‌ண‌க்க‌ம்,

தாங்க‌ள் ஒரு ப‌யனான‌ த‌க‌வ‌லை இங்கு ப‌கிர்ந்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி. இத்த‌க‌வ‌ல்க‌ள் கூடிய‌ விரைவில் அக்குடும்ப‌த்தின‌ருக்கு கொண்டு சேர்க்க‌ப்ப‌டும். த‌ற்போது அக்குடும்ப‌த்தில் தாயார் ம‌ட்டுமே இருக்கின்றார் என்றும், அவ‌ர் ம‌ன‌நோய்க்கு ஆளாகியிருப்ப‌தாக‌வும் தெரிய‌ வ‌ருகிற‌து. எது எப்ப‌டியிருப்பினும், இக்குடும்ப‌த்தின் ஆறு உறுப்பின‌ர்க‌ளும் சுய‌புத்தியோடு யாருடைய‌ வ‌ற்புறுத்த‌லுக்கும் ஆளாகாது, விருப்ப‌ப்ப‌ட்டு தேர்ந்தெடுக்கும் ச‌ம‌ய‌த்திற்கு அவ‌ர்க‌ள் மாறிட‌ அவ‌ர்க‌ளுக்கு சுத‌ந்திர‌ம் உண்டு. இத‌ற்கு ம‌லேசிய‌ அர‌சின் ச‌ட்ட‌விதிமுறைக‌ள் ஒரு த‌ட‌ங்க‌லாக‌ இருக்க‌க் கூடாது. அய்க்கிய‌ நாட்ட‌வையின் மனித‌ உரிமை ஆணைய‌ம் த‌னிம‌னித‌ருக்கு உரிய‌ உரிமைக‌ள் என‌ வ‌ரைய‌றுத்துள்ள‌ ச‌ட்ட‌த்தின் கீழ் குடிமை உரிமை பிரிவில் 'ம‌த‌ம் ம‌ற்றும் அர‌சிய‌ல் ந‌ம்பிக்கைக‌ள் உட்ப‌ட‌ க‌ருத்து கொண்டிருக்க‌ உரிமை' என‌ தெளிவாக‌க் குறிப்பிட்டுள்ள‌து. என‌வே, இவ்விட‌ய‌த்தில் ம‌லேசிய‌ அர‌சாங்க‌ம் க‌ன்ணிய‌மாக‌ ந‌ட‌ந்துக் கொள்ள‌ வேண்டும் என‌ கேட்டுக் கொள்கிறோம்.

ந‌ன்றி ஐயா.

@ச‌தீஷ் குமார்

Sathis Kumar April 25, 2008 at 2:19 AM  

ஐயா முகமது யூசுப் பின் முகமது காசிம் அவ‌ர்க‌ளே, த‌ங்க‌ளுக்கு என்னுடைய‌ க‌னிந்த‌ வ‌ண‌க்க‌ம்.

முத‌லாவ‌தாக‌, நான் ஒரு ச‌ம‌ய‌ வெறிய‌னோ அல்ல‌து பிற‌ ம‌த‌த்தின‌ரை புண்ப‌டுத்துப‌வ‌னோ அல்ல‌, பிற‌ ச‌ம‌ய‌த்த‌வ‌ரின் ம‌ன‌தை புண்ப‌டுத்தும் நோக்கில் இப்ப‌ட‌க்காட்சிக‌ள் ப‌திவேற்ற‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை முத‌லில் த‌ங்க‌ளுக்கும் ம‌ற்ற‌ வாச‌க‌ர்க‌ளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். ச‌ம‌ய‌ ரீதியில் ஏற்ப‌டும் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ளை ந‌ம‌து அர‌சாங்க‌மோ ச‌ரி, அர‌சாங்க‌த்தை ந‌ம்பியிருக்கும் ஊட‌க‌ங்க‌ளோ ச‌ரி ம‌க்க‌ளுக்கு உண்மை நில‌வ‌ர‌ங்க‌ளைக் எடுத்துக் கூறுவ‌தில் த‌ய‌க்க‌த்தோடு செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. மூடி ம‌றைத்து பிர‌ச்ச்னைக‌ள‌ க‌லைவ‌து என்ப‌து ம‌லையேறிவிட்ட‌ கால‌மிது.

தாங்க‌ள் குறிப்பிட்டுள்ள‌துபோல‌ திரும‌தி.ரேவ‌தி விட‌ய‌த்தில் ப‌ல‌ இசுலாமிய‌ இய‌க்க‌ங்க‌ள், ம‌ற்றும் த‌ன்னார்வ‌ தொண்டு இய‌க்க‌ங்க‌ள் உத‌விக் க‌ர‌ங்க‌ள் நீட்டிய‌து ம‌றுக்க‌ முடியாத‌ ஒரு கூற்றாகும். இருப்பினும் அதிகார‌த்தை கையில் வைத்திருக்கும் அர‌சாங்க‌த்தின் அப்போதைய நிலைப்பாடு குறித்து ந‌ம‌க்கு நிர‌ம்ப‌வே ச‌ந்தேக‌ம் எழுகின்ற‌து. இதேப்போன்று எவ‌ரெட்டு மூர்த்தியின் ச‌ட‌ல‌த்தை கைப்ப‌றிய‌து முத‌ல் லீனா சோய் என‌ இன்றுவ‌ரை இந்நாட்டில் உள்ள‌ ப‌ல‌ ச‌ம‌ய‌த்த‌வ‌ர்க‌ளின் ச‌ம‌ய‌ விட‌ய‌ங்க‌ளில் இசுலாமிய‌ ச‌ட்ட‌ங்க‌ள் பாய்வ‌தை அனைவ‌ரும் எதிர்த்துக் கொண்டுதான் வ‌ருகிறார்க‌ள். கால‌ப்போக்கில் ச‌ம‌ய‌ சுத‌ந்திர‌ம் அற்ற‌ நாடாக‌ ந‌ம் ப‌ல்லின‌ ம‌க்க‌ள் வாழும் ம‌லைய‌க‌ம் மாறி வ‌ருவ‌தைக் க‌ண்கூடாக‌க் காண‌முடிகின்ற‌ கூற்றை ம‌றுக்க‌முடியாது.

இத்த‌கைய‌ அநியாய‌ங்க‌ளைப் ப‌ட‌ம் பிடித்து ம‌க்க‌ளுக்கு தெரிவித்துக் கொண்டிருந்த‌ அல்‍‍ ச‌சீராவின் இன்றைய‌ நிலைமை என்ன‌? உண்மைக‌ளை ப‌ட‌ம் பிடித்துக் காட்டிய‌தால் அல் ச‌சீராவை ம‌லைய‌க‌த்தில் த‌டை செய்த‌ன‌ர். அல் ச‌சீரா ஒளியேற்ற‌ப்ப‌டும் கால‌ங்க‌ளில் அத‌ன் ஒளிப‌ர‌ப்பு 2 ம‌ணிநேர‌ங்க‌ளுக்கு முன்பே ல‌ங்காவியில் த‌ணிக்கை செய்ய‌ப்ப‌ட்ட‌ள்ள‌வா ந‌ம் பார்வைக்கு ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌ன‌. இவ‌ற்றிற்கு இசுலாமிய‌ ம‌த‌த்தைக் கார‌ண‌மாக‌ காட்ட‌வில்லை, ஆனால் அல் அடாரி எனும் இசுலாமிய‌ கொள்கைக‌ளை பின்ப‌ற்றுகிறோம் பேர்வ‌ழி என்று ச‌ம‌ய‌த்தை கேட‌ய‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தி பிற‌ சம‌ய‌த்த‌வ‌ர்க‌ளின் ச‌ம‌ய‌ சுத‌ந்திர‌த்தில் மூக்கை நுழைக்கும் அம்னோவின் அர‌சிய‌ல் சாண‌க்கிய‌த் த‌ண‌த்தை வேரோடு பிடுங்கி எறிய‌வே இன்று ம‌க்க‌ள் அனைவ‌ரும் கொதித்தெழுந்துள்ள‌ன‌ர்.

இந்து உரிமைப் ப‌ணிப்ப‌டைக்கு அடையாள‌ம் கொடுத்த‌வ‌ர் இசுலாமிய‌ரான‌ அனுவார் இபுராகிம் எனும் த‌ங்க‌ளுடைய‌ கூற்று ந‌கைப்பிற்குரிய‌து. இந்துராப்பிற்கு அடையாள‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ளே ம‌க்க‌ள் ச‌க்தியின‌ர். த‌னிப்ப‌ட்ட‌ ம‌னித‌ர் கொடுத்து வ‌ர‌வில்லை இந்த‌ அடையாள‌ம், த‌னிப்ப‌ட்ட‌ ந‌ப‌ரால் கிடைக்கும் அடையாள‌மும், அங்கீகார‌மும், புக‌ழும் எங்க‌ளுக்குத் தேவையும் இல்லை. ம‌க்க‌ள் ச‌க்தி நினைத்தால் அந்த‌ அனுவார் இபுராகிமும் ம‌ண்ணைக் க‌வ்வுவ‌த‌ற்கு த‌யாராக‌ வேண்டிய‌துதான். ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் உரிமைக்காக‌ போராடும் இந்துராப் இய‌க்க‌த்திற்கு அர‌சிய‌ல், ம‌த‌ம் போன்ற‌ முலாம் பூச‌ வேண்டாம்.

த‌டித்த‌ வார்த்தைக‌ளால் இசுலாமிய‌ ம‌த‌த்தை திட்டி தீர்த்திருக்கிறார் எனும் த‌ங்க‌ளுடைய‌ ம‌ற்றுமொரு குற்ற‌ச்சாட்டை நான் ம‌றுக்கிறேன். அவ‌ர்க‌ளாக‌ விரும்பி ஏற்றுக் கொள்ளாத‌ ச‌ம‌ய‌த்தில் இனியும் இருக்க‌ அவ‌ர்க‌ளுக்கு விருப்ப‌மில்லை என்ப‌தை அவ‌ர்க‌ள் தைரிய‌மாக‌வும் வெளிப்ப‌டையாக‌வும் கூறி இருக்கிறார்க‌ள். சா கிரீட்டு எனும் இசுலாமிய‌ ச‌ம‌ய‌ போத‌க‌ர் இந்து ச‌ம‌ய‌த்தை காரி உமிழ்ந்த‌தைவிட‌வா இக்குடும்ப‌த்தின‌ரின் பேச்சுக‌ள் இசுலாமிய‌ ச‌ம‌ய‌த்திற்கு எதிராக‌ அமைந்துவிட்ட‌ன‌? சா கிரீட்டு விட‌ய‌த்தில் தாங்க‌ள் காத்த‌ மௌன‌ம் இன்று ம‌ட்டும் புகைந்தெழுவ‌து எதற்கென்று என‌க்குத் தெரிய‌வில்லை.

ஐயா, ஓலைச்சுவ‌டியைப் பொறுத்த‌ம‌ட்டில் நியாய‌த்திற்கு ம‌ட்டுமே அது குர‌ல் கொடுக்கும், ஓர் இந்து த‌வ‌று புரிந்தாலும் அதைத் த‌ட்டிக் கேட்ப‌த‌ற்கு ஓலைச்சுவ‌டி த‌ய‌ங்காது. ஒட்டுமொத்த‌ த‌மிழ் குமுகாய‌ம் என‌ வ‌ரும்பொழுது, அங்கே இந்து, கிருத்துவ‌ன், இசுலாமிய‌ன் என‌ யாரையும் பிரித்து பார்ப்ப‌தில்லை. ம‌த‌ ந‌ல்லிண‌க்க‌த்தையே நாம் விரும்புகிறோம். என‌வே, இக்குடும்ப‌த்தினர் த‌ங்க‌ளுடைய‌ நிலைப்பாட்டினை எடுத்துரைத்த‌ வித‌த்தை க‌ண்ட‌ன‌த்திற்குள்ளாக்கி விட‌ய‌த்தை பெரிதுப‌டுத்த‌ வேண்டாம். முடிந்தால் த‌ங்க‌ளுக்குத் தெரிந்த‌ ஏதேனும் இசுலாமிய‌ இய‌க்க‌ங்க‌ளின் வ‌ழி, இக்குடும்ப‌த்தின‌ர் முறையாக‌வும் ச‌ட்ட‌ரீதியாக‌வும் ம‌த‌ம் மாறுவ‌த‌ற்கு உத‌வ‌ முடியுமா என‌ விசாரித்துப் பாருங்க‌ள். த‌னி ம‌னித‌ சுத‌ந்திர‌த்திற்கு முன்னுரிமை கொடுப்போம்.

ந‌ன்றி.

@ ஓலைச்சுவ‌டி ஆசிரிய‌ன்

Anonymous April 25, 2008 at 12:47 PM  

சதீஸ் அய்யா,
மலேசியவில் உள்ள இந்தியர்கள் - எத்தனை தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்தி கொண்டவர்கள் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். அவர்களால் தேசிய அரசியலில் மாற்றம் கொண்டுவர ஒருபோது இயலாது - கெஅடிலான் மற்றும் பாஸ் இல்லாவிட்டால். மலாய இனத்தவரில் ஒரு பகுதியினர் அம்னோவுக்கு எதிராக திரும்பியதால்தான் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டது. பெரும்பான்மை மலாய் இனத்தவரின் சிந்தனையில் - ஆளும் அம்னோவின் பாரபட்ச சட்டதிட்டங்களுக்கு எதிராக எடுத்த முடிவுதான் பரிசான் நேசனலின் தோல்வி. குருவி உட்கார பனம்பழம் விழுந்தது என்று சொல்வார்களே அது போல இருக்கிறது - இந்துராப்தான் தேசிய முன்னனியின் தோல்விக்கு காரணம் என்பது.

இந்து சாமிவேலுவை தோற்கடித்தது இஸ்லாமிய அன்வரின் ஆதரவு பெற்ற ஒரு இந்திய கிறித்துவர்தானே. இதில் எங்கே ‘இந்து' ‘இந்துத்வா' வருகிறது?

சரி விவாத விடயத்திற்கு வருவோம். மதமாற்ற உரிமைப்பற்றிய தங்களின் கருத்துக்கு என்னுடைய தார்மீக ஆதரவு எப்போதும் உண்டு.
இந்துராப் இந்தியாவிலிலுள்ள மதவெறி அமைப்புக்களான இந்து முன்னனி - பா.ஜ.க போன்ற சிறுபான்மை எதிர்ப்பு-அழிப்பு இயக்கங்களின் ஆதரவுடன் களத்தில் இருப்பது - 'மாமக்' என்றழைக்கபடும் இந்திய முஸ்லிம்களை அன்னியப்படுத்தியிருக்கிறதே. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட ‘இன ஒழிப்பு' போல ஏதாவது ஒரு நிகழ்வு நமது மலேசியாவில் இந்து சகோதரகளுக்கு எதிராக ஏற்பட்டதுண்டா? அப்படியிருக்க நமது நாடு - உலக நாடுகளின் முன் தலை குனியும்படி ‘இன அழிப்பில்' ஈடுபட்டதாக நீங்கள் (ஹிந்ராப்) சொன்னது சரியா?
சாதியால் - உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பிறப்பு - மத திணிப்பால் பிளவுபட்ட இந்தியர்களை ஒன்றினைக்க நேர்மையான் எத்தனையோ வழிகள் இருக்க ‘மத எதிர்ப்பு' - ‘மத துவேசம்' என்ற பெயரில் 'இந்து' சாயம் பூசி - நாட்டின் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிப்பது நியாயமா?.

இந்தியாவில் - தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு எதிராக - உயர்சாதி இந்துக்களல் நடத்தபடும் தாக்குதல்கள் பற்றிய விழிப்புணர்வு கொண்டு வாருங்கள். மலாய் காரனுக்கு - சளைத்தவனில்லை என்று மார் தட்டுமுன் - நாம் இந்துக்கள் (பறையர்-பள்ளர்-கவுண்டர்-வேளாளர்- செட்டியார்) இவர்கள் அனைவரும் ஒருவரை மற்றொருவர் சமமாக நடத்தப்படுகிறோமா என்று யோசித்துப்பாருங்கள். நாம் பிறந்து-வளர்ந்த இத்தேசம் விட்டு - இந்திய சென்றால் ‘தாழ்த்தப்பட்ட' சமுதாயத்தை சார்ந்தவன் என்கின்ற ஒரே காரணம் காட்டி - தேங்காய் மூடியில் 'தே தண்ணீர்' வழங்கும் கடைகள் இருக்கின்றன, கோவிலுக்குள் விட மறுகிறார்கள் - சமி ஊர்வலம் வரும்பொது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களின் வசிபிடத்திற்கு வர மறுக்கிறது. அய்யா பெரியார் தோன்றிய தமிழகத்திலேயே நடைபெறுகிறது என்றால் - பார்ப்பன -பனியா ஆதிகம் நிறைந்த வட இந்தியாவை நிணைத்துப்பாருங்கள். அதனால் ம்லாய் இனத்தவரின் அடக்குமுறைக்கோ - ஆதிக்கத்துக்கோ கட்டுப்பட்டு - பணிந்து வாழவேண்டும் என்று நான் சொலவில்லை. அய்யா பெரியார் சொன்ன ‘சுய மரியாதையோடு' வாழ வேண்டும்..

மத்மாற்ற உரிம கோரும் - நீங்கள் சாதி மாற்ற உரிமைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்..

தொடரும்..

நட்புடன்..
முகமது யூசுப் பின் முகமது காசிம்,
நிபோங் தெபால்

Anonymous April 25, 2008 at 2:18 PM  

நண்பர் முகமது அவர்களுக்கு... நீங்கள் வீன் தர்கம் செய்கிறீர்கள். எதனால் இந்த கொலை வெறி... காரசாரமாக விவாதம் பிரச்சனையை தான் தூண்டிவிடும். இப்பதிவில் இஸ்லாத்து மதத்தை தவறாக கூறப்பட்டுள்ளதாக எதை சொல்கிறீர்கள். அப்படி இருந்தால் இப்பதிவாளர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஷா கீரிட்டு விவகாரத்தை மனதில் வைத்துக் கொண்டுதானே இப்படி பேசுகிறீர்கள். நீங்கள் ஜாதி விவகாரங்களை பேசியிருப்பது தேவையற்ற ஒன்று.
பெரியாரிடம் பத்திரிக்கையாளர் கேட்கிறார். "நீங்கள் மத ஒழிப்பு மற்றும் ஜாதி ஒழிப்பு இவற்றுள் எதற்கு அதிக முக்கியதுவம் கொடுக்கின்றீர்கள் என்று" அதற்கு பெரியார் சொல்கிறார், மதம் ஒழிந்தால் ஜாதி தானாக ஒழிந்துவிடும் என்று.

நீங்கள் தொடரும் என குறிப்பிட்டுள்ளது மீண்டும் தர்க்கம் சொய்வீர்கள் என குறிக்கிறது.

Anonymous April 25, 2008 at 4:29 PM  

சகோதரர் முகமது காசிம் & விக்னேஸ்க்கும் ஆகியோருக்கு,

ஆங்கிலேயர்களால் அடிமைத்தொழிலாளிகளக தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள் நாம் என்பதை இருவரும் மறந்து விடாதீர்கள். உவகையோடு தாய்மண் விட்டு மலேசியா வர பல காரணங்கள் உண்டு. பிறக்க ஒரு நாடு - பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நாம் என்ன விதி விலக்கா என்று கலைஞர் கருனாநிதியின் ‘பராசக்தி' வசனம் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. உற்றார்-உறவினர் - சுற்றம்-நட்பு என அனைத்தையும் ‘ஊரிலேயே' விட்டு வந்த நாம் - 'சல்லிக்காசு' பொறாதா சாதிய அடையாளத்தையும் - மத அடையாளத்தயும் இன்னும் சுமந்து திரிகிறோம். நம்மைப்போல இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் 'தமிழர்கள்' என்று தங்களை அடையாளமிட்டு தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.ஆனால் நாம் ஏன் நம்மை ‘தமிழன்' என்று அழைத்துக்கொள்ளமல் ‘ஹிந்து' என்று அழைத்துக்கொள்கிறோமோ தெரியவில்லை.

சகோதர நிபோங் தெபால் முகமது யூசுப் - கொஞ்சம் பொறுமையாக சிந்திக்க வேண்டும் - உங்களின் முன்னோர்கள் இந்துக்கள் (தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட இந்துக்கள்) என்பதை. சாதிக்கொடுமையும் - உயர்சாதியினரின் ஆதிக்கமும்தான் உங்களைப்போன்ற -தீண்டத்தகாத- பிற்படுத்தப்பட்ட -தாழ்த்தப்பட்ட இந்துக்களை ‘இசுலாமிய' மதம் நோக்க வைத்தது. உன்மை. அய்யா பெரியார் கூட இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்று கூறியிருக்கிறார். உயர்சாதி பார்ப்பனரின் - ஆதிக்கத்திலிருந்து மீள - சுயமரியாதையோடு வாழ இசுலாமிய மதத்திற்கு போக சொல்லி வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதுவும் எனக்கு தெரியும். நீங்கள் சொல்கிற இரட்டைகுவளை முறை - தீண்டாமை எல்லாமே நானும் கேள்விபட்டு இருக்கிறேன்.

நீங்கள் சொன்ன மாதிரி ‘‘தாழ்த்தப்பட்ட' சமுதாயத்தை சார்ந்தவன் என்கின்ற ஒரே காரணம் காட்டி - தேங்காய் மூடியில் 'தே தண்ணீர்' வழங்கும் கடைகள் இருக்கின்றன, கோவிலுக்குள் விட மறுகிறார்கள் - சமி ஊர்வலம் வரும்பொது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களின் வசிபிடத்திற்கு வர மறுக்கிறது' - அனைத்தையும் ஒத்துகொள்கிறேன்..உண்மை என்பதால்.

நாடு விட்டு வந்த நாம் - நமக்குள் சண்டைப்போட்டுக்கொள்ளலாமா? நாம் நம்மை தமிழ் இந்துவாக - தமிழ் முஸ்லிமாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர்த்து - தமிழர்களாக அடையாளப்படுத்தி வாழ்வதுதான் நன்மை. தயவு செய்து விவாதம் பெரிதாகி நம்க்குள் பிரிவு வளர வழி செய்ய வேண்டாம்..

மலேசிய தமிழன்
Sungai Dua

Anonymous April 25, 2008 at 7:01 PM  

சகோதரர் சதீஸ்குமார் அவர்களுக்கு,
இறைவன் மீது ஆனையாக கூறுகிறேன் நான் இந்து மத விரோதி அல்ல. தவறாக புரிந்துகொள்ளாதீர்கள்.
நான் படித்தது - பார்த்தது - பார்ப்பது ஆகியவைகளின் அடிப்படையில்தான் HINDRAF பற்றி சில வினாக்களை முன்வைத்தேன். நானும் நமது மலேசிய நலம் நாடும்
இந்திய முஸ்லிம் நன்பர்கள் சிலரும் இந்துராபின் - இந்திய மதவெறி அமைப்புக்களான இந்து முன்னனி - BJP ஆகியவற்றுடனான 'கள்ள' தொடர்புகள் பற்றி பத்திரிக்கை மற்றும் இணையம் மூலம் (இங்கேயும் தமிழகத்தி;லும்) வெளியான தகவல்களை திரட்டி நமது மக்கள் முன்னியின் - முக்கிய அங்கமாக விளங்கும்
மூன்று அரசியல் கட்சிகளின் தலைமக்கும் - அவர்களை வழி நடத்தி - அரசியல் பாதையை நிர்ணயிக்கும் நமது எதிர்கால பிரதமர்
அன்வர் இப்ராஹிமின் பார்வைக்கு நேரில் சந்தித்து கவனத்தை கொண்டு வரப்பபோகிறோம்.

சகோதரர் விக்னேஸ் அவர்களுக்கு,
நான் ஜாதி விவகாரங்களை பேசியிருப்பது தேவையற்ற ஒன்று. - என்று கூறியிருகிறீர்கள்.

ஏன் இந்த இணையப்பக்கத்துக்கு தன்னை ‘இந்து' என்று எண்ணிக்கொண்டு வரும் தமிழன் படித்துவிட்டு தான் தமிழனா? தாழ்த்தப்பட்டவனா?
அல்லது இந்துவா என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவான் என்ற பயமா? நீங்களே சிந்தித்திருப்பீர்களே?

ஏன் தப்பித்து ஒட பார்க்கிறீர்கள்? சாதி யாருக்கு தேவையற்றது? உங்களுக்கா? HINDRAF க்கா? அல்லது இந்து மதத்திற்கா?
இந்து என்று தற்காலிக முத்திரை குத்தி ஓட்டு வாங்கி - மலேசியாவையும் - ஒரு கலவர பூமியாக மாற்ற திட்டமா?
உங்களிடம் ஒரு சின்ன கேள்வி. HINDRAF ஆதரவு கேட்ட இராம கோபால அய்யரும்
நீங்களும் இந்துக்கள்தானே? அப்படியென்றால் அவரை எதற்கு பிரம்மனின் தலையிலிருந்து பிறந்த்தாகவும் - மலேசியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட
பெரும்பான்மை தமிழர்களை பிரம்மனின் காலில் இருந்து உருவானதாக கூறுகிறார்கள்? ஒரு பேச்சுக்காக அனைவரும் சரிசமம் என்றால் இந்து
முன்னனி இராமகோபலன் அனிந்திருக்கும் பூ நூலை போல - உங்களால் இந்துக்கள் என்று ‘HINDRAF ஆல் முத்திரைக்குத்தப்பட்ட மலேசிய
தமிழர்கள் அனைவருக்கும் அணிவிக்க முடியுமா?

சகோதரர் விக்னேஸ்வரன்,
மதம் ஒழிந்தால் ஜாதி தானாக ஒழிந்துவிடும் பெரியார் சொன்னதாக கூறுகிறீர்களே. உங்களின் அடிப்படை பொது அறிவுக்கு எட்டிய வகையில் -
அக்கம் பக்கத்தில் பார்த்ததை நெஞ்சை தொட்டு சொல்லுங்களேன் எந்த மதத்தில் சாதி இருக்கிறது? இணையத்தில் உலகெல்லாம் உலா வந்து பெற்ற அறிவை வைத்து சொல்லுங்கள்
எந்த மதம் சாதியத்தை அங்கீகரித்திருக்கிறதென்று?.

யாரும் யாருக்காகவும் மன்னிப்பு கேட்க அவசியமில்லை. சதீஸ்குமார் தன் கருத்தை எழுதினார் பதிலுக்கு என் கருத்துக்களை எழுதினேன்.
அவ்வளவுதான். 'மக்கள் முன்னனியில்' அங்கம் வகிக்கும் இந்திய முஸ்லிம்களின் விருப்பப்படி HINDRAF ன் எல்லை தாண்டிய ‘மதவெறி' அமைப்புகளுடான
தொடர்பு பற்றி மக்கள் முன்னனியின் தலைவர்களின் பார்வைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்கட்சி சதியென்று கூறி பிரச்சினையை திசை திருப்ப கூடாது
என்பதற்காக 'மக்கள் முன்னனியின்' அங்கம் வகிக்கும் கட்சிககளுக்குள்ளேயே இப்பிரச்சினையை கொண்டு வந்து - விவாதித்து முடிவு காண எண்ணுகிறோம்.

சகோதரர் மலேசிய தமிழன்,
தங்களின் புரிதலுக்கும் - அறிவுரைக்கும் நன்றி. என்னுடைய மூதாதையர்கள் இந்துக்கள்தான். சரியாக சொன்னீர்கள்.
விஷயத்துக்கு வருவோம். HINDRAFன் இந்திய மதவெறி அமைப்புக்களுடான தொடர்பு பற்றிய என்னுடைய மதிப்பீடுகள் பற்றிய தங்களின் கருத்துக்களை
அறிய ஆவலாக உள்ளேன். ஹிந்து மதத்தின் அங்கமாக இருக்கும் சாதிய கொடுமைகளை சுட்டிக்காட்டியது - விக்னேஸ்வரன் சொல்வது போல 'தேவையற்றதா?'.

சதீஸ்குமார், விக்னேஸ் மற்றும் மலேசிய தமிழன் ஆகியோருக்கான பொதுக்கேள்வி..

நமது இந்திய தமிழர்களுக்கு அதிக கண்ணியம் அளிப்பது யார்? நமது மலேசிய அரசின் அரசியல் சட்டமா? அல்லது வர்னாசிரமம் போற்றி -பறையர்- பள்ளர்களை தீண்டாதவர்களாக முத்திரைகுத்தி விலங்கினும் கேவலமாக கொடுமைபடுத்தும் இந்து தர்மமா? தயவு செய்து இந்தக்கேள்விக்கான பதிலை எனக்காக அளியுங்கள்.

நட்புடன்,

முகமது யூசுப் பின் முகமது காசிம்,
நிபோங் தெபால்

Anonymous April 25, 2008 at 8:10 PM  

டேய்... பிச்சு....

Anonymous April 25, 2008 at 9:49 PM  

இக்குடும்ப‌த்தின் ஆறு உறுப்பின‌ர்க‌ளும் சுய‌புத்தியோடு யாருடைய‌ வ‌ற்புறுத்த‌லுக்கும் ஆளாகாது, விருப்ப‌ப்ப‌ட்டு தேர்ந்தெடுக்கும் ச‌ம‌ய‌த்திற்கு அவ‌ர்க‌ள் மாறிட‌ அவ‌ர்க‌ளுக்கு சுத‌ந்திர‌ம் உண்டு. - சதீஸ்குமார்

அய்யா சதீஸ்குமார்,
HINDRAF க்கு தார்மிக ஆதரவு தந்த தமிழக மதவெறி அமைப்பான ‘இந்து முன்னனி' - செல்வி செயலலிதா ஆட்சியில் ‘ கட்டாய மதமாற்ற சட்டம்' என்ற பெயரில் - உயர்சாதியினரின் ஆதிக்கப்பிடியிலிருந்து வெளியேற நிணைத்த மக்களை கட்டிப்போட சட்டம் கொண்டு வந்தபோது - வெடி வெடித்து - மிட்டாய் பகிர்ந்து கொண்டாடியது இராம கோபாலன் கும்பல் தன் என்று இன்னுமொரு தகவலையும் தருகிறேன். BJP - செயலலிதாவி இந்து மதக்காவலராக சித்தரித்து புகழாரம் சூட்டியது..

பா.ஜ.க ஆட்சி செய்யும் வட மாநிலங்களில் ‘மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்துகொண்டிருக்கிறார்களே, இதைப்பற்றிய உங்களின் கருத்து என்ன? மலேசியாவில் HINDRAF எடுத்த இதே நிலைப்பாட்டை ‘இந்து முன்னனி' மற்றும் பா.ஜ.க தலைவர்களுக்கு அறிவுறுத்தமுடியுமா? அப்படி ஒரு எண்ணம் இருந்தால் - வாயையும் - ‘அதையும்' பொத்திக்கொண்டு இருங்கள்..வாயை திறந்து ‘பிழைப்பில்' மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளாதீர்கள்..

என்னதான் ‘ஹிந்து' 'ஹிந்து'ன்னு காட்டுகத்து கத்தினாலும் - உஙகளுக்கு - பூநூல் கிடைக்காது.

என்னதான் ‘ஹிந்து' 'ஹிந்து'ன்னு
காட்டுகத்து கத்தினாலும் -
வருமானம் அதிகமாக வரும் - கோவில்களில் அய்யரை தவிர எந்தப்பயலும் ‘பூசாரியாக' முடியாது..வேண்டுமானால் நமது மலேசியாவில் இருப்பது போல் ‘பண்டாரம்' என்று அழைக்கப்படலாம்..

என்னதான் ‘ஹிந்து' 'ஹிந்து'ன்னு
காட்டுகத்து கத்தினாலும் - ஹிந்து மத தேவ பஷையான சமஸ்கிருதம் படிக்க உங்களுக்கு அனுமதி கிடையாது..

என்னதான் ‘ஹிந்து' 'ஹிந்து'ன்னு
காட்டுகத்து கத்தினாலும் - ஹிந்து வேதங்களை - நீங்களெல்லாம் படிக்க கூடாது, அப்படி படிக்க நமது மலேசிய இந்துக்கள் முயன்றால் ஹிந்து தர்மப்படி ‘காதில்' ஈயத்தை காய்ச்சி ஊற்றி விடுவார்கள்.. சாக்கிரதை..

உங்களை HINDRAF என்று பெயர் வைக்கசொன்ன வெளிநாட்டு சக்திகளிடம் - இந்து என்றால் என்ன என்று சற்று விளக்கம் கேட்டுப்பாருங்களேன்.

J.முருகன்,
Port Klang

Sathis Kumar April 25, 2008 at 10:59 PM  

ஐயா முகமது யூசுப் பின் முகமது காசிம் அவர்களுக்கு எனது கனிந்த வணக்கம்,

தாங்கள் கூற வருகின்றக் கருத்துக்கள் தலைப்பினின்று பிசகி நிற்பது தெரிகிறது. தொடர்பில்லாமல் இந்தியாவில் நடக்கும் பலவகையான கொடுமைகளை இங்கு உதாரணம் காட்டுவது எதற்கு? இந்தியாவில் ஒரு சமயத்தவன் மற்றொரு சமயத்தவனை வெட்டினால் அதற்கு இரு காரணங்கள் இருக்கும், ஒன்று அரசியல் நோக்கம் மற்றொன்று மதவெறி. நீங்கள் மதவெறியற்றவர் எனக் கூறிக் கொண்டு மதவெறியராகவே உங்களுடைய கருத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.

மனிதர்கள் செய்யும் தவற்றிற்கு சமயங்களைக் குறைக் கூறுவது மடமையாகும். அதனினும் மடமை ஒரு சமயத்தைப் பற்றின ஆழ்ந்த கருத்துக்களை அறியாது பிதற்றுவது. தங்களுடைய நடவடிக்கையானது பல்லின சமயத்தவர்களின் ஒற்றுமையை குலைத்துவிடும். நீங்கள் நம் நாட்டிற்கு ஒவ்வாத மற்ற நாடுகளின் சமய பிரச்சனைகளோடு முடிச்சுகளைப் போடுகிறீர்கள்.

தமிழன் எனும் அடையாளத்தோடு உலகளாவிய நிலையில் வாழ்கின்ற 13 கோடி தமிழ் மக்கள் பல்வகையான சமய நம்பிக்கைகளை தனி மனித சுந்தந்திரத்தோடு பின்பற்றிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

இந்துராப் இயக்கத்தின் இரகசியங்களைக் காட்டிக் கொடுக்கப் போகிறேன் பேர்வழி என எட்டப்பன் வேடம் பூண்டிருக்கும் உங்களுக்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அனுவார் இபுராகிம் ஓட்டுக்காக மக்களை நாடி சென்றாரே தவிர, மக்கள் அவரை நாடவில்லை. சிறுபான்மை எனக் கருதியிருந்தால் அவர் இந்தியர்களின் வாக்குகளைக் கவர்வதற்கு ஏன் ஆங்காங்கு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். நீங்கள் வேண்டுமென்றால் அவருக்கு இசுலாமிய சாயம் பூசி அவரை சமய வெறியராகச் சித்தரிக்கலாம். ஆனால், இந்துராப்பை பொறுத்தமட்டில் அவர் இந்தியர்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றவிருக்கும் பல்லின சமுதாயத்தின் தலைவனாகப் பார்க்கிறது. சிறைவாசத்திற்குப் பிறகு திருந்தி வந்திருக்கும் அவர், இந்துக்களுக்கு நிறைய சேவைகள் செய்யவார் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லை தாண்டிய மதவெறி அமைப்புகளுடன் இந்துராப் இயக்கம் இரகசிய தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறது எனும் தங்களுடைய கூற்று முற்றிலும் பிசகு என அறிக. இவ்விடயத்தை மக்கள் முன்னணியிடம் வேறு காட்டிக் கொடுக்கப் போகிறார்களாம் எட்டப்பர்கள். பிரிந்திருந்த இந்திய சமுதாயத்தின் இன்றைய ஒற்றுமையைக் கண்டு மனம் வெதும்புபவர்கள் செய்யும் காரியமிது. நீங்கள் குட்டிக்கரணமிட்டு கூப்பாடு போட்டாலும், அனுவார் இபுராகிம் நீங்கள் கூறப் போகும் வதந்திகளை நம்பப் போவதில்லை.

இன்று மலேசியாவில் ஒரு கூட்டம் எங்களை இந்தியர்கள், தமிழர்கள் என அழைக்காதீர்கள்.. வெட்கமாக இருக்கிறது, உடனே எங்களுக்கு பூமிபுத்திரா அங்கீகாரம் கொடுத்து மலாய்க்கார இனமாக எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என கோருகிறார்களாம். வெட்கக்கேடு..!

இந்துராப்பை பொறுத்தமட்டில் அத்தகு ஈனச்செயல்களில் அது இறங்கவில்லை. தன்மானத்தோடு மக்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே இயக்கம் இந்துராப். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என மார்தட்டிக் கொள்ளும் இயக்கம் இந்துராப். இதன் ஒற்றுமையை சமயமோ, அரசியலோ, பயங்கரவாதமோ ஒன்றும் செய்துவிட முடியாது. காரணம், மக்கள் சக்தியின் முன் எல்லாமே தூசு..

குருவி உட்கார பனம்பழம் விழுந்தது என நையாண்டியாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர்கள். உண்மைதான் ஒரு குருவி அமர்ந்தால் பனம்பழம் விழாததுதான். ஆனால் மக்கள் சக்தி எனும் மாபெரும் குருவிக் கூட்டம் ஒற்றுமை எனும் ஒரே கிளையில் அமர்ந்தால் வெற்றி எனும் கனி மடியில் விழத்தான் செய்யும்.

இனியும் உங்களுடைய வீண் தர்கங்களுக்கு ஒரு முற்றிப்புள்ளியை வைத்துக் கொள்ளுங்கள். இந்து சமயத்தைப் பற்றி ஆழமிகு கருத்துக்களை உணராது, அதன் தர்மங்களை இழிவு படுத்துவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது. ஜாதியை ஏற்படுத்தியது மனிதர்களே தவிர இந்து சமயம் அல்ல. அத்தகு கொடுமைகளுக்கு சமய சாயம் பூசி குளிர்க்காய்பவர்களைக் குறைக் கூறலாமே தவிர சமயத்தைக் குறைக் கூறுவது மடத்தனமானது. பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் மிகத் தெள்ளத் தெளிவாக கூறியிருக்கின்றார். பிறப்பால் ஒருவன் பிராமணனாகிவிட முடியாது, குணத்தாலேயெ ஒருவன் பிராமணன் ஆகிறான். பிராமணன் எனும் பதம் தூய்மையானவன் எனப் பொருள்படுகிறது. ஆனால் சாதி உண்டென்று திரிபவர்களுக்கும், அதன்பேரில் நடைப்பெறும் அக்கிரமங்களுக்கும் சமயம் ஒருபோதும் பொறுப்பேற்காது.

இனியும் வாசகர் மத்தியில் சமயம் தொடர்பான மனம்நோகும் கருத்துக்களை வெளியிட்டால் அதை நீக்கிவிட வேண்டிய பொறுப்பு என்னுடையது.

மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி, மதம் மாறிட விண்ணப்பித்த அக்குடும்பத்தினர்களுக்கு நாளை மதமாற்றம் அதிகாரப்பூர்வமாக செய்து வைக்கப்படுகிறது.

தனி மனித உரிமைக்கே முதலிடம் கொடுப்போம்...!

நன்றி

@ஓலைச்சுவடி ஆசிரியன்

Sathis Kumar April 25, 2008 at 11:35 PM  

ஐயா முருகன் அவர்களுக்கு கனிந்த வணக்கம்,

//அப்படி ஒரு எண்ணம் இருந்தால் - வாயையும் - ‘அதையும்' பொத்திக்கொண்டு இருங்கள்..வாயை திறந்து ‘பிழைப்பில்' மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளாதீர்கள்..//


நீங்கள் எப்படி 'வாயையும் அதையும் பொத்திக் கொண்டு' மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்படுகிறீர்களோ, அதேப்போல் நானும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் போலும். அதுப்போல என்னால் இருக்க முடியாது ஐயா, உடல்நலம் கெட்டுவிடும்.

'நானும் ஓர் இந்து' எனக் கூறிக் கொண்டு இந்தியாவில் வாழ முடியாது, சாதி எனும் சாக்கடை அதற்கு அணைக்கட்டு போட்டுவிடும் என சுருங்கக் கூறுவதை பல உதாரணங்களைக் காட்டிக் கூறியுள்ளீர்கள்.

உங்களை ஒன்று கேட்கிறேன், உங்கள் வீட்டின் முன் சாக்கடை பல நாட்களாக நாற்றமடிக்கிறது என்பதால் வீட்டைக் காலி செய்துவிடுவீர்களா? அல்லது சாக்கடையை சுத்தம் செய்வதில் மும்முரம் காட்டுவீர்களா?

சுத்தமே செய்ய முடியாத சாக்கடை என்பது உங்கள் வாதமாக இருப்பதால் நீங்கள் வீட்டையே வேண்டுமென்றாலும் காலி செய்து கொள்ளலாம். ஆனால், மலையகத்தைப் பொறுத்தமட்டில் இச்சாக்கடை மெல்ல மெல்ல தனது வழிப்பாதையை இழந்துக் கொண்டு வருவது கண்கூடாகக் காணமுடிகிறது. மலையகத்தை பொறுத்தமட்டில் சாதி பார்ப்பவர்கள் குறைந்து வருகின்றனர். இன்றைய தலைமுறையினர் மிகவும் ஆக்ககரமான சிந்தனையுடன் செயல்பட முனைப்புக் காட்டுகின்றனர். எனவே, இந்தியாவில் நடக்காது எனக் கூறும் விடயங்களை மலையகத்தில் நடத்திக் காட்ட முடியும். மக்கள் சக்தியின் அடுத்தக் கட்ட போராட்டமே இதுதான்.

எனவே, சமுதாயத்தின் ஓர் அங்கத்தினராக இருந்துக் கொண்டு ஆக்ககரமான வழிகளை முன்மொழியுங்கள். காரி உமிழாதீர்கள், காரணம் நீங்கள் உமிழும் தகாத வார்த்தைகள் அனைத்தும் உங்கள் முன்னோர்களின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது. போராட்ட உணர்வு என்பது இரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும், வாயையும் 'அதையும்' பொத்திக் கொண்டு மற்றவர்களையும் அதேப்போல் இருக்கச் சொல்பவர்கள், மற்றவர்களிடம் அடிபணிந்து வாழ்க்கை நடத்திய பரம்பரையில் இருந்து வந்தவர்களாக இருக்கக் கூடும். இக்கூற்றில் சாதிக்கு தொடர்பில்லை என அறிக, உலக வரலாற்றில் தாழ்த்தப்பட்டவனும் வீரங்கொண்டு எழுந்த கதையும் உண்டு, உயர்ந்தோன் என மார்தட்டிக் கொண்டவர்கள் அடி பணிந்து புறமுதுகிட்டு ஓடியவர்களும் உண்டு.

இனியும் மனிதர்கள் செய்யும் தவற்றைக் கொண்டு சமயத்தை இழிவு படுத்தும் செயலில் ஈடுபடாதீர்கள், காரணம் சமயத்தை அமைதியான முறையில் பின்பற்றுபவர்கள் இங்கு நிறையவே வாழ்கிறார்கள். இனியும் தகாத வார்த்தைகள் உங்கள் கருத்துக்களில் இடம்பெற்றால், அதை நீக்கிடும் பொறுப்பு என்னுடையது. ஆக்கப்பூர்வமான சிந்தனைப் பரிமாற்றங்களே இங்கு வரவேற்கப்படுகின்றன.

தனி மனித உரிமைகளுக்கே முன்னுரிமை..!

@ஓலைச்சுவடி ஆசிரியன்

Anonymous April 26, 2008 at 12:19 PM  

சிறைவாசத்திற்குப் பிறகு திருந்தி வந்திருக்கும் அவர், இந்துக்களுக்கு நிறைய சேவைகள் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது -

What do you mean by this? Was not our Anwar - a 'good human' before sent to jail? Was he 'anti-Indian' before put in jail? Are you justifying Mahathir's - accusation and his imprisonment of Anwar?

(Sorry for typing in English)

Shanthi Ramaiyah,
Butterworth,
Penang

Sathis Kumar April 26, 2008 at 12:52 PM  

சாந்தி ராமையா அவர்களுக்கு கனிந்த வணக்கம்,

அனுவார் இபுராகிம் கடந்த காலங்களில் (சிறை வாசத்திற்கு முன்) சில தவறுகளை அவர் செய்திருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஓரினச் சேர்க்கை, பல பெண்களிடம் பாலியல் உறவு, லஞ்சம் என பல ஆதாரங்கள் உள்ளன. இதை மற்ற அரசியல்வாதிகள் சிலர் செய்யவில்லை எனக் கூறவில்லை, எனினும் அனுவாரை பதவியிறக்க வேண்டும் என துன் மகாதீர் கங்கணம் கட்டிக்கொண்டு அவரை பதவியிலிருந்து இறக்கினார்.

அனுவார் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அனுவார் தரப்பிலிருந்து ஆதாரப்பூர்வமாக நிராகரிக்க முடியவில்லை. அண்மையில் முன்னால் சுகாதார அமைச்சர் சுவா சொய் லேக்கை வேண்டுமென்றே கீழறுப்பு செய்ய அவர் நடவடிக்கைகளை கூட இருந்தவர்களே காட்டிக் கொடுக்கவில்லையா? அதுப்போலதான் அனுவார் விடயத்திலும், அவரை பதவியிறக்க வேண்டும் எனும் நோக்கத்தில் அவரின் அந்தரங்க வாழ்க்கையில் நுழைந்து அவரே மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரங்களைத் திரட்டி, இறுதியில் அவரை சிறையில் அடைத்தனர்.

அனுவார் இபுராகிம் சிறைவாசம் புரிந்த காலக்கட்டத்தில், வான் அசீசா இசுமாயில் ஆசுத்துரேலிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டிக் கொடுக்கும் பொழுது, "உங்கள் கணவர் குற்றமற்றவர் என நீங்கள் நம்புகிறீர்களா?" என நிருபர் கேட்டதற்கு அவர் "இல்லை, நான் யாரையும் நம்பவில்லை.." என பதிலளித்தார்.

எந்த ஒரு அரசியல்வாதியையும் நாம் முழுமையாக நம்பிவிடக் கூடாது என்பதே என்னுடைய கருத்து, நம்பிக்கை வைக்கலாம் ஆனால் அதீத நம்பிக்கை வைத்து இறுதியில் ஏமாற்றமடையக் கூடாது. என்னுடைய தனிப்பட்ட கருத்து இது. சிறைவாசத்தில் நிறையப் பாடங்களைக் கற்றுக் கொண்டு இன்று அரசியலில் மீண்டும் பிரவேசிக்கவிருக்கும் அவர் மலையக மக்களுக்கு பாராபட்சமின்றி உழைப்பார் எனும் நம்பிக்கை உள்ளது. அந்நம்பிக்கையை தற்காப்பதும், தகர்த்தெரிவதும் அவர் கையில்தான் இருக்கிறது.

நன்றி.

Sathis Kumar April 26, 2008 at 2:57 PM  

வாச‌க‌ர்க‌ளுக்கு க‌னிந்த‌ வ‌ண‌க்க‌ம்,

யாரும் எந்த‌ ச‌ம‌ய‌த்த‌வ‌ரையும், இன‌த்த‌வ‌ரையும் த‌ர‌க்குறைவாக‌ க‌ருத்துக்க‌ளை வெளியிடும் பாங்கை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறேன். அநாக‌ரீக‌ சொற்களைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஓலைச்சுவ‌டி ஒரு க‌ள‌ம் அல்ல‌. த‌மிழ‌ன் என்றுக் கூறிக் கொண்டு மொழியை கொச்சையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்களுக்கு இனியும் இந்த‌த் த‌ள‌ம் முக‌ம் கொடுக்க‌ப் போவ‌தில்லை.

கொச்சை மொழிக‌ளில் வ‌சைப்பாடிக் கொண்டிருக்கும் இந்த‌ இரு பொறுப்ப‌ற்ற‌ ந‌ப‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளை நீக்குகிறேன்.

@ஓலைச்சுவ‌டி ஆசிரிய‌ன்

Unknown September 6, 2015 at 3:24 PM  

ஐயா, இந்து வேதத்தில் எங்கும் சாதி சொல்லப்படவில்லை
யஜுர் வேதத்தில் புருஷ சூக்தம் என்ற வேதத்தில் வருவது.
ப்ராமணோஸ்ய முகமாஸித்
பாஹூ ராஜன்ய :க்ருத
ஊரூ ததஸ்ய யயத் வைஸ்ய:
பத்த்ப்யாகும் சூத்ரோ அஜாயத.
மனித வாழ்க்கையில் குருவாக இருந்து கற்பிப்பதால் ப்ராமணன் முகத்திற்கு ஓப்பானவன்.
தோள் வலிமையால் நாட்டை குடிகளையும் காக்கும் சத்திரியன் தோளுக்கு நிகர்.
வியாபாரம் செய்யும் வைஸ்யன் தொடைக்கு நிகர்.
மற்றவர்க்கு உழைக்கும் விவசாயி தொழிலாலி கால் பாதங்களை போன்றவன். மனிதனால் இதில் எதை இழந்தும் வாழ முடியாது என நம் முன்னோர் கூறினர்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP