ஷா கிரிட் கோகுலால் கோவிந்ஜி வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்..!!!
>> Wednesday, April 9, 2008
நேற்று (08-04-2008) மாலை 3.30 மணியளவில் பினாங்கு இந்திய வலைப்பதிவர்களான நான், இராஜா, கோபிராஜ் மற்றும் உமாபரன் ஆகியோர் ஷா கிரீட் கோகுலால் கோவிந்ஜிக்கு எதிராக பினாங்கு பட்டாணி சாலையில் அமைந்துள்ள பினாங்கு காவல்துறை தலைமையகத்தில் ஒரு புகார் செய்தோம். இந்நிகழ்வில் இந்து உரிமைப் பணிப்படையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன், பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஷண்முகநாதன் அவர்களும் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.
அதன்பின் பினாங்கு மாநில 2-ஆம் துணை முதலமைச்சர் பேராசிரியர் திரு.இராமசாமி் அவர்களையும் சந்தித்து ஷா கிரீட்டின் கருத்தரங்கு படக்காட்சிகள் அடங்கிய ஒரு குறுவட்டை ஒப்படைத்து, அவரிடம் இதுத் தொடர்பாக கலந்துரையாடினோம்.
அதே வேளையில் மலாக்கா தெங்கா காவல் நிலையத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்ட மக்கள் சக்தியினர் முன்னால் மலாக்கா தமிழ் பள்ளிகளின் கண்காணிப்பாளரான திரு.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஷா கிரீட்டிற்கு எதிராக நேற்று புகார் செய்தனர். ஓலைச்சுவடி நிருபர் திரு.கலையரசுவும் அங்குச் சென்றிருந்தார்.
இன்று (09-04-2008) மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமி்ழ் நேசன், 'ஸ்டார்', 'சைனா பிரஸ்' ஆகிய நாளேடுகளில் இப்புகார் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
புகார் செய்யப்பட்ட படிவம்
புகாரில் இணைக்கப்பட்ட இரு படிவங்கள்
மக்கள் ஓசை செய்தி
மலேசிய நண்பன் செய்தி
தமிழ் நேசன் செய்தி
'ஸ்டார்' ஆங்கில நாளேட்டின் செய்தி
'சைனா பிரஸ்' செய்தி
மலேசிய நண்பன் செய்தி (மலாக்கா)
'மலாக்கா தெங்கா' காவல் நிலையத்தில்...
இவ்விடயம் தொடர்பாக இன்றும் நாளையும் நாடு தழுவிய நிலையில், இந்துக்கள் ஷா கிரீட்டிற்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் அறிவிக்கின்றன.
இனி யாரும் கைவசம் அப்படக்காட்சிகளை வைத்திருந்தால் தயவு செய்து 'யூ டியூப்'ப்லோ அல்லது மற்ற எந்தவொரு இணையத்தளத்திலோ பதிவேற்றம் செய்ய வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.
இவ்விடயம் தொடர்பாக வெளிவந்த மற்றுமொரு பதிவு.. இங்கே சுட்டவும் : இந்துக்களை கேலி செய்வதா?
தற்போது அடிக்கடி காவல் நிலையத்தில் விசாரணையின் பேரில் அழைக்கபடுகிறேன். காவல்துறையினர் எந்நேரமும் ஷா கிரீட்டை கைது செய்துவிடுவர் என காவல்துறையினர் கூறுகின்றனர். என்னை விசாரணை செய்யும் காவல் அதிகாரி அனைத்து படக்காட்சிகளையும் பார்த்துவிட்டு ஷா கிரீட் இ.சா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவன் என கருத்து கூறினார்.
தற்போதைய நிலவரப்படி ஈப்போவில் மக்கள் சக்தியினர் இப்படக்காட்சிகளைக் கண்டு வெகுண்டு எழுந்ததன் காரணமாக, ஈப்போ சுற்றுவட்டார காவல் நிலையங்களில் ஷா கிரீட்டிற்கு எதிராக புகார்கள் செய்யப்படும் என ஈப்போ அன்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment