"இ.சா சட்டத்தை துடைத்தொழிப்போம்...!"
>> Monday, April 14, 2008
வருகின்ற 19-04-2008 சனிக்கிழமையன்று "இ.சா சட்டத்தை அகற்றுக" எனும் கருப்பொருளில் ஒரு மகத்தான கருத்தரங்கு பினாங்கு குட்டி இந்தியா அருகே அமைந்திருக்கும் சீனர் மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.
இக்கருத்தரங்கிற்கு சிறப்பு வருகையாளர்களாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு மாநிலத்தின் 2-ஆம் துணை முதலமைச்சர் பேராசிரியர் திரு.இராமசாமி, 'இ.சா'வை துடைத்தொழிக்கும் இயக்கத்திலிருந்து அதன் தலைவர் திரு.ஷேட் இப்ராகிம், குமாரி லத்திப்பா கோயா, செயலாளர் குமாரி நளினி, வழக்கறிஞர் திரு.கர்பால் சிங், திரு.ஆர்.எஸ்.என் இராயர், திரு.இரவீன் மற்றும் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன் போன்றவர்கள் வருகை புரிவார்கள்.
இந்நிகழ்வு தொடர்பாக மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட இணைய இணைப்பைச் சுட்டி, அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு : அறிக்கையை பதிவிறக்கம் செய்து நகல் பல எடுத்து பலருக்கு விநியோகிக்கவும்.
அல்லது,
இந்நிகழ்வு தொடர்பாக மேலும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் கீழ்கண்ட நிகழ்வின் செயற்பாட்டாளர்களை கைத்தொலைபேசியின் வழி அழைக்கலாம் :
திரு.ஸ்டான்லி : 016 - 498 2125
திரு.கலை : 012 - 563 7614
திரு.செல்வா : 016 - 489 4830
குமாரி.வசந்தா : 012 - 462 8353 ( பினாங்கு ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர் )
'இ.சா'வை துடைத்தொழிப்போம்!
வாருங்கள் ஒற்றுமையாக சமர்ப்பிப்போம் நமது கோரிக்கையை...!
போராட்டம் தொடரும்...
2 கருத்து ஓலை(கள்):
இந்நிகழ்வு நாடு தழுவிய அளவில் செய்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்னும் எவ்வளவு நாட்கள் தான் வாயடைத்துக் கிடப்பது.
உண்மைதான் நண்பரே, நாடு தழுவிய நிலையில் அனைவரும் காவல் நிலையத்தில் இதுத் தொடர்பாக புகார் செய்வது நலம்...
Post a Comment