நேற்று உரிமை, இன்று மருந்து, நாளை என்ன?
>> Thursday, April 17, 2008
நேற்று எனது உரிமையை பறித்தாய் ! இன்று என் மருந்தை மறுத்தாய் ! நாளை என்ன? இப்படிப்பட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகள் இன்று ஆங்காங்கே ஒட்டபட்டிருப்பதைக் காண நேர்ந்தது. இவ்வாசகங்களுக்கு நடுவே திரு.உதயகுமார் முகத்தில் தாடியுடன் காணப்படுகிறார்.
நண்பர்களிடம் விசாரித்ததில் இப்பதாகைகள் நான்கு மொழிகளில் நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன. மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினாலும் கமுந்திங் தடுப்புக் காவலில் அவதிப்பட்டு வரும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களில் ஒருவரான திரு.உதயகுமார் அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சையும், முறையான மருந்துகளும் அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்பதாகைகள் நாடு தழுவிய நிலையில் ஒட்டப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.
இந்நிலையில் அரசாங்கம் திரு.உதயகுமார் விவகாரம் தொடர்பாக இன்னும் மௌனம் சாதிப்பது ஏன்?
அவரும் ஒரு மனிதர்தானே? ஒரு தனி மனிதன் தனக்கு முறையான சிகிச்சைக் கேட்பது தவறா? ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் ஐந்து வகையான பிரிவுகள் உள்ளன. அப்பிரிவில் 'குடிமை உரிமை' கீழ் வரும் துணைப்பிரிவு ஒன்றில் 'உயிர்வாழ்வதற்கான உரிமை', மற்றும் 'பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்' பிரிவின் கீழ் வரும் துணைப்பிரிவு ஒன்றில் 'சமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை' என்று ஐ.நா மனித உரிமை பிரகடனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா சபையின் உறுப்பினராக இருக்கும் மலேசியா, அச்சபை தனிமனித உரிமைகளுக்காக வரையறுத்திருக்கும் சட்டங்களை ஏன் பின்பற்றவில்லை....?
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment