ஐயா பண்டிதனை நினைத்து பார்ப்போம்..
>> Wednesday, April 30, 2008
மலேசிய இந்தியர் முன்னேற்றக் கட்சித் தலைவர் (ஐபிஎப்) டத்தோ பண்டிதன், இன்று காலை எட்டரை மணியளவில் கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் காலமானார். நீண்ட காலமாக இரத்தப் புற்று நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 68. இதற்கிடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஐபிஎப் கட்சியின் இடைக் காலத்திற்கு புவான்சிறீ செயசிறீயையை தேசியத் தலைவராக டான்சிறீ பண்டிதன் மத்திய செயலவை உறுப்பினர்கள் முன்னிலையில் மருத்துவமனை சிகிச்சை அறையில் நியமித்தார் என்று ஐபிஎப் உதவித் தலைவரும் தேசியத் தகவல் பிரிவு தலைவருமான எம்.சம்பந்தன் கூறினார்.
கடந்த 12வது பொதுத் தேர்தலுக்கு முன்பிருந்தே மருத்துவமனையில் இரத்த புற்றுநோய்க் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த டத்தோ பண்டிதனைப் பற்றி பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. அவர் இறந்துவிட்டதாகவும், இயந்திரங்கள் பொறுத்தப்பட்டு மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களின் வழி செய்திகள் பரப்பட்டு வந்தன.
ஆனால், இன்றுதான் டத்தோ பண்டிதன் உயிர் நீத்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திக் கொள்வோம். குறிப்பாக அவர் மலேசிய இந்திய மக்களுக்காக நடத்திய போராட்டத்தை மனதில் நினைவில் கொண்டு அவரின் பெயர் வரலாற்றுச் சுவட்டிலிருந்து மறைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, இன்றும் இனி என்றும் வருகின்ற தலைமுறையினரின் கடமையாகும்.
மறைந்த அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
ஓம் நமசிவாய..
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment