மக்கள் ஓசையின் உரிமம் பறிக்கப்பட்டது..!
>> Wednesday, April 16, 2008
அன்வாரின் 'பிளேக் 14' நிகழ்வை பிரசுரித்ததால் மக்கள் ஓசையின் உரிமம் அரசாங்கத்தால் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, மக்கள் ஓசை நாளிதழுக்கு அரசாங்கம் கடந்த ஆண்டு யேசு கிருத்துவர் கையில் வெண்சுருட்டும் மற்றொரு கையில் மதுபானமும் வைத்திருந்த படத்தை பிரசுரித்ததால் ஒரு மாதகால இடைநீக்கம் செய்தது. அதோடு மட்டுமல்லாமல் மக்கள் ஓசையின் உரிமம் காலாவதியாகி விட்டிருந்ததும் நமக்குத் தெரிந்ததே..
மலேசியா இன்று
நாளொன்றுக்கு 52 ஆயிரம் பிரதிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் 90 ஆயிரம் பிரதிகளும் விற்பனையாகும் மக்கள் ஓசை நாளிதழ் முறையான காரணங்கள் கூறப்படாமல் நாளையிலிருந்து தடை செய்யப் பட்டிருக்கிறது என்று அதன் நிர்வாகி எஸ். எம். பெரியசாமி இன்று மாலை 7.10 திற்கு மக்கள் ஓசை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மலேசியாஇன்றுவிடம் கூறினார்.
நண்பகல் 12 மணிக்கு தொலைநகல் வழியாக மக்கள் ஓசை தடை செய்யப்பட்டிருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று பெரியசாமி தெரிவித்தார்.
இத்தடைக்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று கேட்டதற்கு, “இண்ட்ராப், மக்கள் சக்தி ஆகியவை தொடர்பான செய்திகளை விரிவாக வெளியிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.
“இந்தியர்களைப் பற்றிய செய்திகளை ஒரு தமிழ் நாளிதழான நாங்கள் வெளியிடாவிட்டால், யார் வெளியிடுவது”, என்று பெரியசாமி வினவினார்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாத இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம் என்று கூறிய பெரியசாமி, அரசாங்கம் எங்களது மேல்முறையீட்டை பரிசீலித்து சாதகமான பதிலைத் தரும் என்று நம்புகிறோம் என்றார்.
மக்கள் ஓசையின் தலைமை ஆசிரியர் எம். இராஜேந்திரன், “நாங்கள் செய்த தவறு என்ன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல், திடீரென தடை விதித்திருப்பதால் மக்கள் ஓசையை நம்பியிருக்கும் ஊழியர்களின் கதி என்னவாகும்”, என்று கேள்வி எழுப்பினார்.
மலேசியா கினீ படச்சுருள்
2 கருத்து ஓலை(கள்):
Kaaraname sollamal kaithu seivathum kaaraname sollamal ethai vendumaanaalum seiyyalaam endra nilamai maratho?
வணக்கம் ஆஷா, தற்போது திரு.வேதமூர்த்தி அவர்கள் ஜெனிவாவில் மனித உரிமை ஆணைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இதன்வழி மலேசியாவிற்கு ஐ.நா விடமிருந்து கடும் கண்டம் வருவதோடு, மனித உரிமை மீறல்களுக்கு ஒரு முடிவும் ஏற்படும் என நம்புகிறோம்.
Post a Comment