தைப்பிங்கை நோக்கி கார்களில் ஊர்வலம்
>> Monday, April 28, 2008
படக்காட்சிகளை மின்னஞ்சலில் அனுப்பியவர் : இராவாங்கைச் சேர்ந்த சந்திரசேகர், (நன்றி)
இந்து உரிமைப் பணிப்படையின் தலைவரான பி.உதயகுமார் உட்பட ஐவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தினை முன்வைத்து நேற்று (27-04-2008)ஈப்போவிலிருந்து மக்கள் சக்தியினர் தைப்பிங் தடுப்பு முகாமை நோக்கி கார்களில் ஊர்வலம் சென்றனர்.
பேராக்கில் பல ஊர்களிலிருந்தும் காலை 10 மணி முதல் ஈப்போ சிறீ சுப்பிரமணியர் கோயில் (கல்லுமலை) வளாகத்திற்கு கார்கள் வரத் தொடங்கின. சொகூர், மலாக்கா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கார்கள் ஈப்போ கல்லுமலை கோயிலை வந்தடைந்தன. சுமார் ஒரு மணியளவில் கோயிலில் சிறப்புப் பிரார்த்தனையை முடித்துக் கொண்ட மக்கள் சக்தி ஆதரவாளர்கள் பிற்பகல் 1.30 மணியளவில் அங்கிருந்து தைப்பிங் நோக்கி 60க்கும் மேற்பட்ட கார்களில் ஊர்வலமாகச் சென்றனர்.
முன்னதாகப் பேசிய பேராக் இந்துராப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.வேதமூர்த்தி , இந்துராப்பு தலைவர்கள் உட்பட இசா சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் தைப்பிங் மெக்குசுவல் மலைக்கோவிலில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடி பிரார்த்தனையை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினார்.
நேற்று நடைப்பெற்ற இந்த ஊர்வலத்தில் வடக்கு (பினாங்கு) மற்றும் தெற்கிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கார்கள் ஊர்வலமாகச் சென்று தடுப்பு முகாம் முன் அமைதி மறியலில் ஈடுபட்டனர். 200 கலகத் தடுப்பு காவல்காரர்கள் முகாமின் முன் நிறுத்தி வைக்கப்பட்டனர். இவ்வமைதி மறியல் மாலை 4 மணியளவில் முடிவடைந்துள்ளது.
தகவல் : மக்கள் ஓசை, மலேசியா கீனி
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment