மீண்டும் 'மக்கள் ஓசை' ...
>> Friday, April 25, 2008
மலேசியாவில் தடை செய்யப்பட்ட மக்கள் ஓசை தமிழ் நாளிதழுக்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. இதனால் மக்கள் ஓசை பத்திரிகை சனிக்கிழமை முதல் மீண்டும் வாசகர்களின் கைகளில் தவழ இருக்கிறது.
மக்கள் ஓசை தமிழ் நாளிதழ் மலேசியாவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.தினமும் 55 ஆயிரம் பிரதிகளும் ஞாயிற்றுக் கிழமைகளில் 95 ஆயிரம் பிரதிகளும் விற்பனை நடைபெறக்கூடிய தமிழ் தினசரியாக மக்கள் ஓசை விளங்கி வருகிறது.இதில் 102பேர் பணிபுரிகின்றனர்.
1981- ல் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை 2005-ல் மக்கள் ஓசை தினசரியாக நாளிதழ் எனும் வடிவம் பெற்றது. இப்பதிரிகை காலஞ்சென்ற பத்திரிகையாளர் ஆதி.குமணனின் கனவுப் பத்திரிகையாகும்.
தேர்தல சமயத்தில் இப்பத்திரிகை எதிர்க்கட்சிக்கு ஆதரவாக ஏராளமான செய்திகளை வெளியிட்டது. இதனால் தேர்தலில் பல இடங்களை பறிகொடுத்த ஆளும் தேசிய முன்னணி மக்கள் ஓசை பத்திரிகை மீது கோபம் கொண்டது. அதனை பழி தீர்க்கும் வகையாக அதன் வருடாந்திர உரிமத்தைப் புதுப்பிக்க மலேசய அரசு மறுத்துவிட்டது. இதனால் பத்திரிகையை வெளியிடக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் மக்கள் ஓசைக்கு உத்தரவிட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக மக்கள் ஓசை பத்திரிகை நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து மலேசியாவின் பத்திரிகை சுதந்திரம் பற்றி உலகத் தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு நாடுகளும் தமது எதிர்ப்பை மலேசிய அரசுக்கு எதிராக காட்டத் தொடங்கின.
மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ சையட் ஹமிட் அல்பார், மலேசியாவின் ஊடகத் துறைக்கான வழிகாட்டு முறைகளை மக்கள் ஓசை பின்பற்றவில்லை என குற்றஞ்சாட்டினார். மக்கள் ஓசை பத்திரிகை சார்பாக கடந்த திங்கட்கிழமை அன்று உள்துறை அமைச்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனைப் பரிசீலித்த மலேசிய அரசு மக்கள் ஓசை பத்திரிகையின் வருடாந்திர உரிமத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது. மக்கள் ஓசை பத்திரிகை நிர்வாகம் ரிங்.3,000 செலுத்தி தமது வருடாந்திர உரிமத்தை புதுப்பித்துள்ளது.எனவே மக்கள் ஓசை பத்திரிகையை மீண்டும் வெளியிட அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
எனவே மலேசிய இந்திய சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தமிழ் தினசரியான மக்கள் ஓசை,சனிக்கிழமை முதல் மேலும் கூடுதலாக வாசகர் எண்ணிக்கையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம் : அதிகாலை.காம்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment