இண்ட்ராப் ஐவரின் மேல்முறையீடு...
>> Wednesday, April 2, 2008
இண்ட்ராப் ஐவர் செய்து கொண்டுள்ள மேல்முறையீடு இன்று கூட்டரசு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த ஐவரும் ஏற்கனவே செய்த மனுவை உயர்நீதி மன்றம் நிராகரித்திருந்தது.
உயர்நீதி மன்றத்தின் முடிவை எதிர்த்து அவர்கள் செய்து கொண்ட மேல் முறையீட்டை கூட்டரசு நீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
நீதிபதி அரிபின் ஜக்கரியா, ஹஷிம் யூசுப், மலாயா தலைமை நீதிபதி அலாவூதின் முகமட் ஷரீப் ஆகிய மூவரும் அந்த முறையீட்டைச் செவிமடுக்கின்றனர்.
இன்று காலை தடுப்புக்காவலில் உள்ளவர்கள் சார்பில் கர்பால் சிங், தம் வாதத் தொகுப்பை முன்வைத்தார்.பிற்பகல் ஒரு மணிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
நாளை, சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேல் தம் வாதத் தொகுப்பினைச் சமர்ப்பிப்பார். அதன் பின்னர், கர்பால் சிங் அதற்கு பதில் அளிப்பார்.
செய்திகள் - மலேசியா இன்று
படக்காட்சியை வழங்கியவர் நிருபர் திரு.கலையரசு (srivishnu80@yahoo.com)
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment