'ஜெரிட்' குழுவிற்கு மலாக்கா மக்கள் சக்தி ஆதரவு!

>> Thursday, December 11, 2008

நேற்று 10/12/08 மலாக்காவிற்கு வந்திருந்தஜெரிட்' இயக்கத்தின் மிதிவண்டி பயணக்குழுவை மலாக்கா மாநில மக்கள் சக்தியினர் வரவேற்றனர். அடிப்படை சம்பளம், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை ஒழித்தல், ஊராட்சித்துறையில் முறையான தேர்தல் என இன்னும் பல வேண்டுகோள்களை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கும் வகையில்ஜெரிட்' இயக்கத்தினர் நாடுதழுவிய நிலையில் மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மலாக்காவை வந்தடைந்த இக்குழுவில் இளையோர்களின் பங்கெடுப்பு தன்னை மிகவும் பெருமைக் கொள்ளச் செய்வதாக மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் திரு.செயதாசு. குறிப்பிட்டார். இனம், சமயம் எனப் பாராது மக்கள் நலனுக்காக இளையோர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்திருக்கும் இந்நூதனப் போராட்டத்தை நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் வரவேற்கவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். குறிப்பாக மக்கள் சக்தியினர் இவர்களை வரவேற்று உற்சாகப்படுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

வெறும் பேச்சில் வல்லவர்களைவிட இச்செயல் வீரர்கள் பலபடிகள் மேல்..Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP