நெகிரி செம்பிலான் ஆளுநருக்கு நேரமில்லையோ..?

>> Monday, December 22, 2008

மலேசிய இந்தியர்கள் அம்னோ அரசாங்கத்தால் கடந்த 51 ஆண்டுகளாக பலவகையில் ஒடுக்கப்பட்டு வருவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக மக்கள் சக்தியினர் நேற்று சிரம்பானில் உள்ள 'இங்காப்' அரண்மனையில் நெகிரி செம்பிலான் ஆளுநரைச் சந்தித்து மகசர் ஒன்றினைச் சமர்ப்பிக்க சென்றனர்.

மக்கள் சக்தியினரின் வருகை குறித்து முறையாக கடிதம்வழி அரண்மனைக்கு திரு.வேதமூர்த்தியின்வழி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. மதியம் 3:15 மணியளவில் மக்கள் சக்தியினர் அரண்மனையைச் சென்றடைந்தபொழுது அரண்மனையின் வெளியே தடல்புடலான வரவேற்பு வழங்கப்பட்டதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படவில்லை. வேறு வேலைவெட்டியே இல்லாத கலகத் தடுப்புப் படையினரும் காவல்த்துறையினரும் அரண்மனையின் வெளியே குவிக்கப்பட்டிருந்தனர்.

அரண்மனை நிர்வாகமும் சரி, அரண்மனை பொறுப்பதிகாரி டத்தோ அப்துல்லாவும் சரி யாரும் வெளியே எட்டிக் கூட பார்க்கவில்லை. லேன்ஸ் காப்பரல் சுரீஸ் (பட்டை எண் 146288) மக்கள் சக்தியினரிடமிருந்து மகசரைப் பெற்றுக் கொண்டார். அதன்பின் ஓர் அறிவிப்பு வந்தது. ”இன்னும் 5 நிமிடங்களில் இடத்தைக் காலி செய்யாவிடின் கைது செய்யப்படுவீர்கள்!” என சீருடை அணிந்த ரௌடிகளான காவல்த்துறையும் கலகத் தடுப்புப் படையும் எச்சரிக்க மக்கள் சக்தியினர் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

அரசியல்வாதிகளிடம் ஏமாந்துபோன மக்கள் மாநில ஆட்சியாளர்களிடமாவது முறையிடலாம் எனச் சென்றால், நாயைவிடக் கேவலமாக நம்மை நடத்துகின்றனர்! நாட்டின் நிர்வாகத்தில் இந்த ஆட்சியாளர்களின் பங்குதான் என்ன? ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறி மாறி மாமன்னர்களாக முடி சூட்டிக் கொள்ளும் இவர்களிடம் மக்கள் தங்களின் பிரச்சனைகளை சொல்ல முடியாதா? இல்லை, கேட்பதற்குதான் இவர்களுக்கு நேரமில்லையா...?!போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

சாமான்யன் December 22, 2008 at 5:56 PM  

வணக்கம் சதீசு குமார்,

தமிழ்மணத்தில் என் வழைப்பதிவை சேர்க்க முயன்றபோது உங்கள் வலைப்பதிவை கண்ணுற்றேன். உங்க்ள பதிவுகளில் இருந்து நீங்கள் சமுதாயத்தின் பால் நிரம்ப ஈடுபாடு கொண்டவர் என்பது நன்றாக தெரிகிறது.

உங்கள் அளவுக்கு இல்லாவிடினும், நானும் ஒரளவுக்கு சமுதாய உணர்வு கொண்டவன் தான்.

MP சார்ல்ஸ் சந்தியாகோவின் வலைபதிவில் ஒரு பின்னூட்டம் விட்டதை பலரும் படித்துவிட்டு, என்னை தொடர்ந்து எழுதும்படி கூறியதை கேட்டு, சரி எதோ நமக்கு தெரிந்ததை எழுதுவோம் என்று ஆரம்பித்து, மலேசிய தமிழ் சமுதாயத்தை பற்றிய ஒரு கிரிட்டிக்கலான ஒரு பதிவை எழுதி பிரசுரித்திருக்கிறேன்.

பதிவை பதிப்பித்து 3 - 4 நாட்கள் ஆகின்றன, ஆனால் ஒரு காகாய், குருவி கூட வந்து எட்டி பார்த்ததாக தெரியவில்லை.

முடிந்தால் என் பதிவை எட்டி பாருங்கள். நான் எழுதியுள்ளதை படித்து விட்டு உங்களுக்கு கோபம் வரலாம். அப்படி வந்தால், நாலு சாடு சாடி பின்னூட்டம் விட்டுவிட்டு செல்லுங்கள்.

கேட்பாரற்று கிடப்பதை விட, சிறிது திட்டு வாங்குவது பாதகமில்லை என்று தோன்றுகிறது.

ப்லொக் அட்ர்ஸ்:
www.malaysia-indian.blogspot.com

சாமான்யன்

சதீசு குமார் December 22, 2008 at 10:20 PM  

அன்பின் சாமான்யன்,

பின்னூட்டம் அளித்தாகிவிட்டது. தமிழ்மணத்தில் இடுகையை சமர்ப்பிப்பதற்கு குறைந்த பட்சம் 3 இடுகைகளாவது வலைப்பதிவில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அதேவேளை பதிவுகளில் தமிழ் சொற்களின் அடர்த்தி குறைவாக இருப்பின் இடுகைகள் சமர்ப்பிக்கப்படுவதில் சற்று காலதாமதம் எடுக்கும்.

வாழ்த்துகள்..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP