மக்கள் சக்தியினரின் உண்ணாநோன்புப் போராட்டம் - நிழற்படங்கள்

>> Tuesday, December 16, 2008

கடந்த 14-ஆம் திகதி திசம்பர் மாதம் தொடங்கி, சிலாங்கூரில் சிறீ கோம்பாக் பகுதியில் அமைந்துள்ள கம்போங் சிறீ தெமெங்கோங் சிறீ மகா காளியம்மன் ஆலயத்தில் சுமார் 50 மக்கள் சக்தியினர் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தை முன்னெடுத்து இன்றுவரை தொடர்ந்து வருகின்றனர். நீரை மட்டுமே அருந்தி மேற்கொள்ளப்படும் இந்நூதனப் போராட்டமானது அரசாங்கம் மக்கள் சக்தியின் வேண்டுகோள்களை கேட்கும்வரையில் தொடரும் என திரு.செயதாசு குறிப்பிட்டார்.

உண்ணாநோன்புப் போராட்டத்தின் குறிக்கோள் :-

  • உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகியுள்ள இண்ட்ராஃப் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
  • லண்டனில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும்.
  • உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.
  • கமுந்திங் தடுப்புக் காவல் மூடப்பட வேண்டும்.
  • மலேசிய இந்தியர்களுக்கெதிரான அரசாங்கத்தின் இன ஒடுக்குதல்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
  • மலேசியாவில் சனநாயக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.

இவ்வுண்ணாநோன்புப் போராட்டத்தில் இணைய விரும்புபவர்கள் திரு.செயதாசு அவர்களைத் தொடர்புக் கொள்ளலாம். 012 6362287போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP