தோட்டப்புற மக்களின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியா?

>> Saturday, December 13, 2008

  • ஏழ்மை வாழ்வு!
  • ஆலய உடைப்பு!
  • குறைந்த சம்பளம்!
  • கொத்தடிமை வாழ்க்கை!
  • வசதிகளற்ற தமிழ்ப் பள்ளிகள்!
  • பிறப்புப் பத்திரம், அடையாள அட்டையின்றி சொந்த நாட்டிலேயே கள்ளக்குடியேறிகளைப் போல் வாழ்க்கை நடத்துதல்!

மலேசிய இந்தியர்களில் 40,000ற்கும் மேற்பட்டவர்கள் இன்னும் பிறப்புப் பத்திரமும், அடையாள அட்டையும் இன்றி கள்ளக்குடியேறி வாழ்க்கை நடத்துகின்றனர்.

  • மேம்பாட்டுத் திட்டங்களால் இடப்பெயர்வு!

உங்களுக்குத் தெரியுமா? ஒரு நிலத்தை மூன்றாம் தரப்பினர் தன்வசம் கையகப்படுத்தி அங்கு வாழ்ந்த மக்களை காலிசெய்ய வைப்பதற்கு சட்டம் இருக்கிறது! ஆனால் குறிப்பிட்ட ஒரு நிலத்தில் காலங்காலமாக வாழ்ந்துவரும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு நிலத்துண்டாடலை தடைச் செயவதற்கு நம் நாட்டில் சட்டமில்லை!!

தொடர்ந்து முதலாளித்துவத்திற்கே சாதகமாக சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டும் இயங்கியும் வருவதனாலும், ஆளும் வர்கத்தினர் மக்களின் நலன்களில் அக்கறையின்றி நடந்துக் கொள்வதாலும் பாதிக்கப்பட்ட தோட்டக் குடும்பங்கள்தாம் எத்தனை.. எத்தனை!

நாடு சுதந்திரமடைந்து 51 ஆண்டுகளாகியும் தோட்டப் பாட்டாளிகளின் வாழ்க்கைத்தரம் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை என்பதே நாம் கண்டுவரும் உண்மை!

மலேசியாகினியின் நிருபர் குமாரி இந்திராணி கோபால் தயாரித்த ஓர் ஆவணப்படம் உங்கள் பார்வைக்காக..



நன்றி :இந்திராணி கோபால்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

5 கருத்து ஓலை(கள்):

மு.வேலன் December 13, 2008 at 11:33 PM  

மனம் குமுறுகிறது...

மு.வேலன் December 14, 2008 at 11:31 AM  

மீண்டும் ஒருமுறை படகாட்சியை பார்த்தேன். மனம் மீண்டும் கலங்கி நின்றது...

Sathis Kumar December 15, 2008 at 6:40 PM  

நேருக்கு நேர் இவர்களைச் சந்தித்தால் இதயம் மேலும் கனக்கும். 51 வருடங்களாக சுமந்துவரும் கனத்தை இன்னும் இறக்கி வைத்தபாடில்லை..

து. பவனேஸ்வரி December 16, 2008 at 1:47 PM  

என்னக் கொடுமை இது??

து. பவனேஸ்வரி December 16, 2008 at 1:49 PM  

என்னக் கொடுமை இது?

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP