சாயி பாபாவின் ஏமாற்று வித்தை அம்பலம்!

>> Wednesday, December 10, 2008

சமயம் என்ற போர்வையில் பல போலி சாமியார்களின் கபட நாடகங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் வருகின்றன. சரணாகதி என்றப் பெயரில் அவர்களையும் நம்பி தன் வாழ்க்கையையே அழித்துக் கொள்ளத் தயாராக இருப்பவர்களைக் கண்டுதான் மனம் வலிக்கிறது. இவர்களின் தவறான வழிகாட்டுதலினால், சமயங்கள் போதிக்கும் ஆழ்ந்த தத்துவங்கள் அடிபட்டு போகின்றன. சமயம் என்றாலே வெறி, பயங்கரவாதம், பணம் பண்ணும் குறுக்கு வழி, மூட நம்பிக்கை என பட்டம் கட்டப்பட்டு ஓரங்கட்டப்படுகிறது.

காரணம் என்ன?

சமயம் என்றாலே ஒரு மனிதனை தெய்வமாக்கும் மார்க்கம் என்று சிலர் இயம்புகின்றனர். ஆனால் ஒரு மனிதனை மனிதனாக்குவதுதான் உண்மையான சமயம். காரணம், ஒரு மனிதனை மனிதனாக்க முயல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல! மனிதனின் மனம் சமைந்து காணும் ஒரு முதிர்ந்த நிலையே ஒருவன் மனிதனாகப் பிறந்ததன் பிறவிப் பயனை எட்டிய நிலை என்று பலரும் அறிகிலர்!

நம் தமிழர்களின் சமய நம்பிக்கை பாழ்பட்டு போனதற்கு என்ன காரணம்? நம்மிடையே உள்ள அறியாமைதான் முதற்காரணம்! இரண்டாவது நம்முடைய தேவைகள்!

ஏழ்மையைப் போக்க வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், நோய் தீர வேண்டும், புதுமனை வாங்க வேண்டும், வாழ்க்கையில் துன்பங்கள் வந்து நிறைகின்றன அதனைப் போக்க வேண்டும், இறுதியாக மன நிம்மதி வேண்டும்! மனிதனுக்கான தேவைகளுக்கு ஓர் அளவே இல்லை! இவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஆக்ககரமான முயற்சிகளில் ஈடுபடுகிறோமோ இல்லையோ, சாமியார்களின் காலில் சென்று பலர் விழுந்து விடுகிறோம். நாம் காலில் விழுகின்ற அந்த ஆசாமி, பெரிய பெரிய சித்து வேலைகள் எல்லாம் செய்வார்! வானில் இறைவனின் திருவுருவத்தை காட்டுவார், நோய்களைப் போக்குவார், அவரின் திருவுருவப் படத்தில் குங்குமம், சந்தனம், திருநீறு கொட்டும் என பிறர் நமக்கு சொல்லியோ, அல்லது நம் ஊனக் கண்ணால் கண்டோ அறிந்து கொண்டு அவரிடமே சரணாகதி அடைந்து விடுவோம்!

தேவைகளின் அடிப்படையில்தான் நம்முடைய சரணாகதி அமைகிறது! இதில் இன்னுமொரு பரிதாபத்திற்குரிய விடயம் என்னவென்றால், இறைவனைக் காண வேண்டும் எனக் கூறி ஒரு புழுகு மூட்டையின் காலில் விழுந்து சரணாகதி அடைவதுதான். மனதில் வீற்றிருக்கும் மனசாட்சியிடம் ஒருபோதும் சரணாகதி அடையாதவர்களே புற உலகில் நிம்மதியைத் தேடி அலைகிறார்கள்.

மனிதனின் தேவைகளே போலி சாமியார்களின் மூலதனம் எனும் அறிவு நமக்கு வரவேண்டும்! இதுவும் ஒரு வியாபாரத்தைப் போலத்தான்!

மலேசிய இந்தியர்களைப் பொறுத்தமட்டில், நாட்டில் ஆங்காங்கே 7 நாட்கள், 14 நாட்கள் என அறைகுறை ஆன்மீகப் பட்டறைகளில் கலந்துகொள்வதை பலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இழக்கும் பணமோ ஆயிரக்கணக்கில்! இந்த அவசர உலகில் மாட்டிக் கொண்டுவிட்ட அனைவருக்கும் சமயமும் கடவுளும் விரைவு உணவு Instant Food போல உடனுக்குடன் பலனைக் காட்டிடும் ஒரு விருந்தாகவே அமைந்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஏழு நாட்களில் உடலில் மையம் கொண்டுள்ள குண்டலினி சக்தியை தட்டி எழுப்புகிறேன், ஏழு நாட்களில் கடவுளின் தரிசனத்திற்கு உன்னைத் தயார் படுத்துகிறேன், மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரச் சக்கரத்தை திறந்து வைக்கிறேன், என இன்னும் பல தகிடுதித்தங்களை நம்பி நம்மவர்கள் பணத்தை வாரி வாரி அழிப்பதை விடுத்து, வசதி குறைந்த தமிழ்ப் பள்ளிகளுக்கோ ஏழை எளியவர்களுக்கோ ஒரு வாய் அன்னம் பாலிக்க உதவினால், அதில் கிடைக்கும் சந்தோசம் போல வருமா என்று நினைத்துப் பாருங்கள்!

இந்நாட்டில் தமிழர்களாகிய நாம் நம்முடைய அரசுரிமைகளை இழந்து கொண்டு வருகிறோம். மறுபக்கம் சொந்த தன்மானத்தை போலி சாமியார்களிடம் அடகு வைத்து சீரழிகிறோம்! ஆன்மீகத் தோல் போர்த்திய புலிகள் இந்து சமயத்தில் மட்டுமல்ல கிருத்துவம், இசுலாம் என இன்னும் பல சமயங்களில் ஊடுறுவிதான் இருக்கின்றனர். மக்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும்!

இன்று இந்நாட்டில் பலமாக வேரூன்றி போன ஓர் இயக்கம் கொண்டாடும் மதகுருவின் தகிடுதித்தங்கள் விஞ்ஞான வளர்ச்சியால் அம்பலமாகியிருக்கின்றன. இதோ அதன் படக்காட்சிகள், இணையத்தில் இன்னும் நிறைய ஆதாரங்களைக் காணலாம்.

பி.கு: குறிப்பிட்டு ஒரு சாராரை மட்டும் சாடும் நோக்கமில்லை, இவரைப் போன்றே பலர் பல மதங்களைப் பயன்படுத்தி மக்களை மூடர்களாக்குகிறார்கள்!

சத்திய சாயி பாபா









Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

34 கருத்து ஓலை(கள்):

Dr.Rudhran December 10, 2008 at 10:56 PM  

thank you for this post

மு.வேலன் December 11, 2008 at 2:09 AM  

நன்மைக்காக ஏமாற்றம் இருப்பின் நன்று!

Anonymous December 11, 2008 at 10:39 AM  

god incarnate saibabu is the true good, how can these video clips be true. we have praying to him for 35years and he done good only all your picture bluffing.

Sathis Kumar December 11, 2008 at 12:16 PM  

@மு.வேலன்
//நன்மைக்காக ஏமாற்றம் இருப்பின் நன்று!//

நன்மை புரிபவராக இருப்பதனால் ஏமாற்று வித்தையை நியாயப்படுத்துவது நியாயமல்ல..

Sathis Kumar December 11, 2008 at 12:19 PM  

@spicy Goat
//we have praying to him for 35years and he done good only all your picture bluffing.//

35 வருடங்கள் அவரை வணங்கி வந்ததால் சில உண்மைகளை ஏற்றுக் கொள்ள உங்கள் மனம் மறுக்கிறது. ஒன்றும் சொல்வதற்கில்லை!

கிரி December 11, 2008 at 3:33 PM  

கடைசி வீடியோ ல நடிகர் திலகத்தையே மிஞ்சி விடும் போல உள்ளதே!!!

எதோ இப்படி செய்தாலும் நல்லதும் செய்யராறேன்னு மனதை தேத்திக்க வேண்டியதா இருக்கு. அரசியல்வாதிகள் கொள்ளை மட்டுமே அடிக்கிறார்கள், இவர் அதோடு கொஞ்சம் நல்லதும் செய்யறாரு. அவர் செய்வதை நியாயப்படுத்தவில்லை, மனதில் பட்டதை கூறுகிறேன்.

ரவி December 11, 2008 at 5:38 PM  

சரி சாய் பாபா ஏமாற்றுகிறார்..

அப்புறம் சிவன் அல்லா இயேசு இவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் ?

கடவுள் உண்மையில் இருக்கிறார் என்பதை நிரூபித்துவிட்டு, அப்புறம் பாபா படம் காட்டவும்...

Sathis Kumar December 11, 2008 at 6:13 PM  

@செந்தழல் ரவி
//கடவுள் உண்மையில் இருக்கிறார் என்பதை நிரூபித்துவிட்டு, அப்புறம் பாபா படம் காட்டவும்...//

இந்த பதிவின் நோக்கம், மக்கள் போலி சாமியார்களிடம் ஏமாந்து போய்விட வேண்டாம் என்பதற்கான சிறு எச்சரிக்கை மட்டும்தான்.

ஆர்வமிருந்தால், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதனை அறிந்து கொள்வதற்கு சுய முயற்சியில் இறங்குங்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு ஆதாரம் காட்டும்வரையில் அவல் தின்று கொண்டிருப்பேன் என்று இருக்க வேண்டிய அவசியமில்லை!!

ரவி December 12, 2008 at 4:10 AM  

சுய முயற்சியில் கடவுள் பெயில் ஆனதால் அன்பே சிவம் என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளவேண்டியதாச்சு...

பாபா படம் காட்டுகிறாரோ இல்லையோ ? பல்லாயிரக்கான இந்துக்களுக்கு மருத்துவ உதவியில் இருந்து பல்வேறு உதவிகள் செய்கிறார்...

அட்லீஸ்ட் அதுவாவது உங்கள் கண்களுக்கு தெரியுமா அல்லது உண்டியலில் காசை போட்டுவிட்டு உச்சாவை தலையில் விட்டுக்கொண்டு போய்கொண்டிருக்கிறீர்களா ?

பாபாவும் சரி, ஆதிபராசக்தி அம்மாவும் சரி, மக்கள் பணி செய்யவில்லை என்றால் இத்தனை ஆண்டுகள் நிற்கமுடியுமா ?

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு !

Sathis Kumar December 12, 2008 at 4:32 AM  

@செந்தழல் ரவி

//பாபாவும் சரி, ஆதிபராசக்தி அம்மாவும் சரி, மக்கள் பணி செய்யவில்லை என்றால் இத்தனை ஆண்டுகள் நிற்கமுடியுமா ?

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு !//

அவர்கள் நிலைத்திருப்பதற்கான காரணம் மக்களின் தேவை. மக்களின் தேவையே அவர்களின் மூலதனம்.

மக்களுக்கு தொண்டு செய்பவர்கள் பொய்வித்தை காட்டி செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேவேளையில் நான் தான் கடவுளின் அவதாரம் எனக் கூறிக் கொள்ள அவசியமுமில்லை!

தப்பை எவ்விதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது. தப்பு தப்புதான்!

உங்களைப் போன்றவர்கள் இருப்பதனால்தான் அவர்கள் உண்டியல் நிறைகிறது..!

வால்பையன் December 12, 2008 at 3:16 PM  

//மு.வேலன் said...
நன்மைக்காக ஏமாற்றம் இருப்பின் நன்று!//

அவனுங்கள சொல்லி குத்தமில்ல!
உங்கள மாதிரி ஆளுங்க இருக்குர வரைக்கும் அவனுங்க திருந்த போறதில்ல

வால்பையன் December 12, 2008 at 3:18 PM  

//பல்லாயிரக்கான இந்துக்களுக்கு மருத்துவ உதவியில் இருந்து பல்வேறு உதவிகள் செய்கிறார்...
//

அதாவது கொள்ளை அடித்து மக்களுக்கு கொடுக்கும் ராபின்ஹுட் போல ஹி ஹி ஹி

மக்கள் பணத்தை திரும்பவும் மக்களுக்கே கொடுப்பது தான் ஆன்மீகம் என்றால், நமது அரசாங்கத்தையும் சூடம் காட்டி கும்பிடலாமா?

அய்யோ ரவி நீங்களுமா இப்படி?

மு.வேலன் December 13, 2008 at 11:54 PM  

[சதீசு குமார் said...]
//இந்த பதிவின் நோக்கம், மக்கள் போலி சாமியார்களிடம் ஏமாந்து போய்விட வேண்டாம் என்பதற்கான சிறு எச்சரிக்கை மட்டும்தான்.//

நல்ல முயற்சி. நான் அவர் பக்தன் அல்ல, ஆனால் அவரின் பக்தர்கள் பலரை எனக்குத் தெரியும். அவர்கள் யாவரும் நல்வழி தவறி தீய வழி சென்றதாக ஆதாரம் இல்லை. பலரை நல்வழிக்கு இட்டுச் செல்லும் எவரும் மதிப்பிற்குரியவர்கள்தான். அதனால் அவரை நான் மதிக்கிறேன்.


[வால்பையன்] உங்கள் நாவையும் வாலையும் சற்று சுருட்டிக் கொள்வாய்யாக! அவர் ஏமாற்றுகிறார் என்று இந்த படக்காட்சியை வைத்து முடிவெடுப்பது நன்றன்று. காதால் கேப்பது பொய், கண்ணால் பார்ப்பது பொய், தீர விசாரிப்பதே மெய்.

வாழ்க வளமுடன்!

Sathis Kumar December 14, 2008 at 3:14 AM  

//நல்ல முயற்சி. நான் அவர் பக்தன் அல்ல, ஆனால் அவரின் பக்தர்கள் பலரை எனக்குத் தெரியும். அவர்கள் யாவரும் நல்வழி தவறி தீய வழி சென்றதாக ஆதாரம் இல்லை. பலரை நல்வழிக்கு இட்டுச் செல்லும் எவரும் மதிப்பிற்குரியவர்கள்தான். அதனால் அவரை நான் மதிக்கிறேன்.//

நல்வழிக்கு இட்டுச் செல்பவர்கள் முதலில் சித்து வேலைகளில் இறங்க வேண்டிய அவசியமில்லை. அந்த சித்திலும் இவர் செய்வது பொய் சித்து! அதற்கான ஆதாரங்கள் தெளிவாகவே பல படக்காட்சிகளில் நாம் காண முடியும்.

தாங்கள் அவருடைய பக்தர் இல்லையெனக் கூறுகிறீர்கள், நான் சாயி பாபாவின் ஆசிரமத்திற்கு அடிக்கடிச் சென்று அவர்களின் நடவடிக்கைகளின் கலந்து கொண்டவன் தான். நான் தான் கடவுள் எனக் கூறிக் கொள்ளும் இவர், தம் பக்தர்கள் வாயிலாக கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார்.

கிடைக்கும் பணங்களில் நல்ல காரியங்கள் செய்கிறார், இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இதே நல்ல காரியங்களை அவர்களின் பக்தர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ் சமுதாய முன்னேற்றத்திற்கும் செய்யலாம்.

இவர் செய்யும் பொய் சித்து வேலைகளை இந்திய அரசாங்கம் அறிந்திருந்தும் கண்டும் காணாமல் இருப்பதற்கு காரணம், வெளிநாடுகளிலிருந்து இவ்வமைப்பிற்கு வந்து சேரும் கோடிக் கணக்கான பணங்கள்தான்.

ஒருவேளை அவர் செய்யும் சித்துக்கள் உண்மையாகவே இருந்தாலும், அந்த சித்துகளுக்கும் ஆன்மீகத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை.

ஓர் உதாரணத்திற்கு மாதா அமிர்தானந்தமயி அவர்களை மேற்கோள் காட்டலாம். அவர் என்ன சித்து வேலைகளைக் காட்டியா கோடிக்கணக்கான மக்களின் அன்பைப் பெற்றார்.

தப்பு செய்பவர் யாராயிருப்பினும் தப்பு தப்புதான்.

வால்பையன் December 14, 2008 at 2:22 PM  

//[வால்பையன்] உங்கள் நாவையும் வாலையும் சற்று சுருட்டிக் கொள்வாய்யாக! அவர் ஏமாற்றுகிறார் என்று இந்த படக்காட்சியை வைத்து முடிவெடுப்பது நன்றன்று. காதால் கேப்பது பொய், கண்ணால் பார்ப்பது பொய், தீர விசாரிப்பதே மெய்.//


கருத்தை மட்டும் சொல்லுங்கள்,என்னிதை சுருட்ட எனக்கு தெரியும்.

இந்த போலி புரம்போக்கு சாமியார் பத்தி அமெரிக்கா தொலைகாட்சி, பத்திரிக்கை கிழித்து நாறடித்து விட்டது.

வாங்கி தின்று பழகிய இந்திய அரசியல் வெளியே சொல்ல தயங்குகிறது.

Khirithika December 18, 2008 at 4:02 AM  

அருமை. ஏமாறுவபவர்கள் இருக்கும் வரை, இன்னும் பல சாய் பாபாக்கள் வந்துகொண்டே இருபார்கள்

யட்சன்... December 18, 2008 at 11:52 AM  

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று யாரேனும் ஒருவர் இருப்பதாய் காட்டுங்கள்...உங்கள் பதிவின் சாரத்தினை ஏற்றுக்கொள்கிறேன்.

வால்பையன் December 18, 2008 at 6:48 PM  

// யட்சன்... said...

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று யாரேனும் ஒருவர் இருப்பதாய் காட்டுங்கள்...உங்கள் பதிவின் சாரத்தினை ஏற்றுக்கொள்கிறேன்.//

ஏமாற்றுவதை கூட விமர்சிக்க கூடாதா?

Sathis Kumar December 18, 2008 at 6:53 PM  

என் பதிவு வெறும் விமர்சனமல்ல, பொய்வித்தைகளின்வழி கையும் களவுமாகப் பிடிப்பட்டவரைப் பற்றிய விமர்சனம். புனிதராகக் கருதப்படுபவரும், கடவுள் என மதிக்கப்படுபவருமான இவரின் உண்மைத் திரையை கிழித்த ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன. யார் தப்பு செய்தாலும் தப்பு தப்புதான்! தப்பை நியாயப்படுத்துதல் ஆகாது!

Shakthiprabha (Prabha Sridhar) December 18, 2008 at 7:10 PM  

வணக்கம்.

எனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உண்டு, எனினும் யாரையும் பின்பற்றுபவள் அல்ல. எல்லமதத்தின் நல்ல புத்தகங்கள் படிப்பேன். யாருடைய நல்ல கூற்றும் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் ஏற்பேன்.

சாயிபாபா பற்றி எனக்குத் தெரியாது.

எனினும், இது போன்ற யூ-ட்யூப் படங்கள் அல்லது ஃபோட்டோக்கள் எல்லாம் நாமே செய்யக் கூடிய சாத்தியம் இருக்கிறது (graphics, animation சிறிது பயிற்சி உண்டு. பரிச்சயம் உண்டு).

அப்படி ஒரு தவறான படமாய் இது இருந்துவிட்டால், சம்பந்தப்பட்டவரை தவறாக விமர்சித்தவர்கள் ஆகின்றோம் அல்லவா?

அவசரப்பட்டு ஏன் விமர்சிக்கவேண்டும்.

அவரால் விளைந்துவரும் நன்மைகள் பல என்று கேள்விப்பட்டதுண்டு.

எத்தனையோ போலித் துறவிகள் ஏமாற்றும் ஆட்கள் இருக்க, இவரை ஏன் சாட வெண்டும்.

இப்படத்தின் உண்மை/பொய்மை பற்றி எனக்குச் தெரியாது. சான்றுகூறவும் முடியவில்லை.

I just thought we should WAIT before commenting on someone's credibility. esp someone who is considered holy.

my 2 cents :)

Sathis Kumar December 18, 2008 at 7:25 PM  

வணக்கம் சக்திபிரபா..

உங்கள் கருத்துகளை நான் மதிக்கிறேன். ஆனால் நான் வெறும் யூ டியூப் தளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சாயி பாபாவை விமர்சிக்கவில்லை. நான் சாயி பாபா ஆசிரமங்களில் தொண்டு புரிந்தவன் என்ற முறையில் எனக்கு அவர்களின் நடவடிக்கைகள் எனக்குத் தெரியும்.

முதலில் ஓர் ஆன்மீகவாதிக்கு சித்து அவசியமே இல்லை என்பது பல சமய அறிஞர்களின் கூற்று. மக்களுக்கு நன்மை செய்வதற்கு சித்து வேலைகளைச் செய்துதான் பிறரை ஈர்க்கவேண்டுமென்பதில்லை. அந்த சித்து உண்மையாகவே இருந்தாலும் அது தவறு என்பது என்னுடைய கருத்து.

மீண்டும் ஒருவரை உதாரணம் காட்டுகிறேன். அன்பினால் மட்டுமே உலக மக்களை தன் பக்கம் ஈர்த்த மாதா அமிர்தானந்த மயி. ஓர் உண்மையான ஆன்மீகவதிக்கு இலக்கணம் அவர்.

அன்பே சிவம் என்று நாம் உணர்ந்தால் கடவுளையும் குருமார்களையும் தேடி எங்கும் ஓட வேண்டிய அவசியமில்லை. நம் மனசாட்சிதான் நமக்கு குரு.

முதலில் நம் மனசாட்சிபடி ஒழுங்காக நடக்கிறோமா என்று சுயசோதனை மேற்கொள்வோம்..

Anonymous December 18, 2008 at 7:53 PM  

ஐந்து அப்பம் ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்த இயேசுவின் கதை. ஏசுவும் அந்தகால சாய்பாபா வா

Anonymous December 18, 2008 at 7:54 PM  

பொய்மையும் வாய்மை எனப்படும் புரைதீர்ந்த நன்மை பயக்கும் இடத்து

Anonymous December 18, 2008 at 7:59 PM  

Saibaba once said miracles are just visiting cards once you reach the address there is no need for that. How many people will visit a true Yogi and learn his teachings if he start to teach only philosophy from day one. Some people need miracles some need philosophy it all depends upon the individual. All people are not in the same stage to understand everything. one day in your life you will start to understand the meaning behind all these.

Anonymous December 18, 2008 at 8:07 PM  

More frauds

http://tinyurl.com/3mzno5

http://tinyurl.com/3h9bxn

Sathis Kumar December 18, 2008 at 8:20 PM  

@பெயரில்லா கூறியது..
//ஐந்து அப்பம் ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்த இயேசுவின் கதை. ஏசுவும் அந்தகால சாய்பாபா வா//

அவர் பகிர்ந்ததற்கான ஆதாரம் நமக்கு கிட்டவில்லை. அது கிருத்துவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஒருவேளை நான் அவர் காலத்தில் வாழ்ந்திருந்தால், அவர் சித்து வேளைகளின் அவசியமின்மையை கூறியிருப்பேன். காரணம் அதுவே பலரை ஆன்மீகத்திலிருந்து திசைத்திருப்பிவிடும் சாதனமாக அமைந்து விடுகிறது.

//பொய்மையும் வாய்மை எனப்படும் புரைதீர்ந்த நன்மை பயக்கும் இடத்து//

நன்மை புரிவதற்கு பொய் வேண்டுமென்றால் முதலில் நாம் முட்டாளாக வேண்டும், அப்படியா? வள்ளுவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப பொய்மையும் நன்மை பயக்கும் என இயம்புகிறார். ஆனால், சாயி பாபா செய்யும் பொய் வித்தையைக் கண்டு பலர் அவரைக் கடவுளின் மறு அவதாரமாகவே பார்க்கின்றனர். அவர்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

//Saibaba once said miracles are just visiting cards once you reach the address there is no need for that. How many people will visit a true Yogi and learn his teachings if he start to teach only philosophy from day one. Some people need miracles some need philosophy it all depends upon the individual. All people are not in the same stage to understand everything. one day in your life you will start to understand the meaning behind all these.//

முதலில் மனிதன் மனசாட்சிக்கு கட்டுபட்டவனாக இருப்பதே மனிதத்தின் உயர்ந்த நிலை. அதற்கு நீங்கள் குருவை நாட வேண்டியதில்லை. அப்படியே குரு தேவைப்பட்டாலும் உங்களின் தேவைகளுக்கு அடிப்படையில் குருமார்களை நீங்களே தேர்ந்தெடுக்கிறீர்கள். ஆனால், சாயி பாபாவால் கவரப்பட்டவர்கள் யார்? சித்துகளின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள். சித்துவழி தன்னுடைய தேவைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என அவரிடம் சரணாகதி அடைகின்றனர். அவர் செய்யும் பொய் சித்து வேலைகளுக்கு அவர் நன்றாகவே சப்பைக் கட்டு கட்டுகிறார். குரு ரமணர், அமிர்ந்தானந்தமயி, சாரதா தேவி, விவேகானந்தர் மக்களை எப்படி ஈர்த்தனர்? சித்து வேலைகளைக் காட்டியா? இறைமையின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அன்பின்வழி பலரை இணைத்தனர்.

21-ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டு பொய் சித்துகள் என்று தெரிந்தும் அவர் செய்யும் நன்மைகளுக்காக வாய் மூடிக் கொண்டிருக்க முடியாது. சித்து வேலைகளில் பொய்த்தனத்தைக் காட்டும் அவர், பண விடயத்தில் அப்படி நடந்து கொள்ள மாட்டார் என்பதில் நிச்சயமேதுமில்லை!

Shakthiprabha (Prabha Sridhar) December 18, 2008 at 11:19 PM  

//// முதலில் ஓர் ஆன்மீகவாதிக்கு சித்து அவசியமே இல்லை என்பது பல சமய அறிஞர்களின் கூற்று. மக்களுக்கு நன்மை செய்வதற்கு சித்து வேலைகளைச் செய்துதான் பிறரை ஈர்க்கவேண்டுமென்பதில்லை. அந்த சித்து உண்மையாகவே இருந்தாலும் அது தவறு என்பது என்னுடைய கருத்து. ////

இந்தக் கருத்தில் எனக்கும் முழுமையான உடன்பாடு உண்டு.

//// மீண்டும் ஒருவரை உதாரணம் காட்டுகிறேன். அன்பினால் மட்டுமே உலக மக்களை தன் பக்கம் ஈர்த்த மாதா அமிர்தானந்த மயி. ஓர் உண்மையான ஆன்மீகவதிக்கு இலக்கணம் அவர். ////

:respects: நிச்சயமாக.

//// அன்பே சிவம் என்று நாம் உணர்ந்தால் கடவுளையும் குருமார்களையும் தேடி எங்கும் ஓட வேண்டிய அவசியமில்லை. நம் மனசாட்சிதான் நமக்கு குரு.

முதலில் நம் மனசாட்சிபடி ஒழுங்காக நடக்கிறோமா என்று சுயசோதனை மேற்கொள்வோம்.. ////


உங்கள் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் நான் முழுமையாக உடன்பட்டாலும்... தற்போதைக்கு....தெரியாத ஒருவரைப் பற்றி (எனக்குத் தெரியாத) அல்லது ஒன்றைப் பற்றி என்னால் விமர்சித்துப் பேச முடியாது அப்படிப் பேசுவது தவறு என்று கருதுவதால் நான் விலகிக்கொள்கிறேன்.

உங்களுக்கு அவரை, அவர்க்ளைத் என்னை விட அதிகம் தெரிந்திருக்கிறது என்று புரிகிறது. நான் மேலும் என்ன சொல்ல இருக்கிறது :(

வருத்தமாய்த் தான் இருக்கிறது. :(

Anonymous December 19, 2008 at 12:35 PM  

//பொய் வித்தையைக் கண்டு பலர் அவரைக் கடவுளின் மறு அவதாரமாகவே பார்க்கின்றனர். //
புத்தர் கடவுளை மறுதலித்தார் ஆனால் மக்கள் அவரையே கடவுள் ஆக்கி விட்டார்கள் அதற்கு அவர் என்ன செய்ய முடியும் அது போல்தான் இது

//மனசாட்சிக்கு கட்டுபட்டவனாக இருப்பதே மனிதத்தின் உயர்ந்த நிலை. அதற்கு நீங்கள் குருவை நாட வேண்டியதில்லை//
அந்த அளவு தெளிவுள்ளவர்களுக்கு நீங்கள் சொல்வது சரி

//பாபாவால் கவரப்பட்டவர்கள் யார்? சித்துகளின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள்.//
தவறு எத்தனையோ பேர் மன அமைதிக்காக அங்கே செல்கிறார்கள்
அவர்களை பொறுத்தவரை அங்கே அது கிடைக்கிறது
என்னை பொறுத்தவரை சித்து வேலை தேவை இல்லை. ஆனால் சித்து வேலை
செய்வதாலேயே ஒருவர் பொய்யாகிவிட மாட்டார்

சாதாரண மனிதர்களிடம் பணம் வசூல் செய்யப்படுவதில்லை அங்கே

குற்றம் பார்க்க ஆரம்பித்தால் எங்கும் காண முடியும்

உதாரணம்
Regarding Amirthanantha mayi

http://ufarooque41.blogspot.com/2008_06_01_archive.html

Sathis Kumar December 19, 2008 at 4:54 PM  

//புத்தர் கடவுளை மறுதலித்தார் ஆனால் மக்கள் அவரையே கடவுள் ஆக்கி விட்டார்கள் அதற்கு அவர் என்ன செய்ய முடியும் அது போல்தான் இது//

புத்தரை அனைவரும் கடவுளாக்கிவிட்டால், நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லையே, அநேகர் ஏற்றுக்கொண்ட ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. புத்தரின் கொள்கை பிறழ்வுபட்டதற்கு அவரின் சீடர்களோ பக்தர்களோ காரணம் எனின் அது தவறுதான் என்பது என் நிலைப்பாடு. அதேப்போல்தான் சாயி பாபாவின் மீது நான் கொண்ட நிலைப்பாடும்.

//அந்த அளவு தெளிவுள்ளவர்களுக்கு நீங்கள் சொல்வது சரி//

மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனும் தெளிவை மனிதனுக்கு மனிதனே கற்றுக் கொடுக்கலாம். கடவுள் அவதாரம் வந்து கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.

//தவறு எத்தனையோ பேர் மன அமைதிக்காக அங்கே செல்கிறார்கள்
அவர்களை பொறுத்தவரை அங்கே அது கிடைக்கிறது
என்னை பொறுத்தவரை சித்து வேலை தேவை இல்லை. ஆனால் சித்து வேலை
செய்வதாலேயே ஒருவர் பொய்யாகிவிட மாட்டார்//

சுவாமி பிரேமானந்தா ஆசிரமத்தில் கூட மனஅமைதி கிடைக்கிறது என பலர் அங்கு தவமாய் கிடந்தார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள். மன அமைதி என்பது யாரும் யாருக்கும் கொடுக்க முடியாது, இன்ன இடத்தில்தான் அமைதி கிடைக்கும் என்றும் கிடையாது. சிலர் இமையமலையில் மன அமைதி கிட்டும் என அங்கு செல்கிறார்கள். வாழும் இடத்திலேயே தனக்குள் மனவமைதியை துயிக்க நாம் பழகிக் கொள்ளாததனால்தான் இன்ன இடத்தில் இவரிடம் சென்றால் மனவமைதி கிட்டும் என நாடிச் செல்கிறோம்.

//சாதாரண மனிதர்களிடம் பணம் வசூல் செய்யப்படுவதில்லை அங்கே//

கண்டிப்பாக பணம் இருக்கும் இடத்தில்தானே சுரண்ட முடியும். சுரண்டிய பணத்தில் பல ஏழைகளுக்கு உதவி புரிந்தாலும் அப்பணத்தில் ஒரு பத்து சதவிகிதம் தன்னுடைய பாக்கெட்டில் விட்டுக் கொண்டால் பிறர் என்ன கண்டுகொள்ளவா போகிறார்கள்..?

//குற்றம் பார்க்க ஆரம்பித்தால் எங்கும் காண முடியும்//

குற்றத்திலும் மன்னிக்க முடியாதக் குற்றம், சமுதாயத்தை மூடர்களாக்குவதுதான்.. இன்று அவரின் பழைய சீடர்கள்கூட அவரின் சித்து வேலைகளை உண்மையென நம்பிக் கிடக்கின்றனர். ஆன்மீகத்தில் நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய சுயதெடல் அங்கு அடிபட்டுப் போகிறது. பகுத்து அறியும் அறிவை மனிதன் சரணாகதி எனும் பெயரில் இழந்துவிடுகிறான்.

//உதாரணம்
Regarding Amirthanantha mayi

http://ufarooque41.blogspot.com/2008_06_01_archive.html//

சுட்டியைப் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி. இவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகள் தக்க ஆதாரங்களோடு மறுக்கமுடியாத உண்மைகளென நிரூபிக்கப்பட்டால் குற்றம் குற்றமே என்பது என் நிலைப்பாடு..

Anonymous December 19, 2008 at 5:26 PM  

//ஆன்மீகத்தில் நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய சுயதெடல் அங்கு அடிபட்டுப் போகிறது. //

உண்மை
அங்கு செல்பவர்களில் பலர் சுய தேடலுக்காக செல்வதில்லை பலரும் கடைபிடிக்க கூடிய சரணாகதி தத்துவம் சுலபமாக இருப்பதால் சரண் அடையவே செல்கிறார்கள். தங்கள் கவலைகளை பாபா தீர்ப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அதற்கு பாபா காரணமாக மாட்டார். மேலும் ஜெயகாந்தன் ஒரு முறை சொன்னது போல் மனிதனுக்கு கடவுள் தேவையோ இல்லையோ கடவுள் நம்பிக்கை தேவையை இருக்கிறது. வேறு ஒரு நம்பிக்கை நம்மால் தரமுடியாதவரை (அதாவது அவர்களது பொருள் உடல் நலம் ரீதியான தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யாதவரை) இம்மாதிரியான இறை நம்பிக்கை தேவைதான்

Sathis Kumar December 19, 2008 at 5:49 PM  

//உண்மை
அங்கு செல்பவர்களில் பலர் சுய தேடலுக்காக செல்வதில்லை பலரும் கடைபிடிக்க கூடிய சரணாகதி தத்துவம் சுலபமாக இருப்பதால் சரண் அடையவே செல்கிறார்கள். தங்கள் கவலைகளை பாபா தீர்ப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.//

எனவே சுயநல அடிப்படையில் சரணாகதி தேடி அவரிடம் செல்கிறார்கள் அல்லவா? ஆன்மீக குரு எப்பொழுது லௌகீகத் தேவைகளைப் பூர்த்தி செய்பவராக மாறினார்? லௌகீகத்தின் தேவைகளுக்கு சாயி பாபா நிவர்த்தி கொடுக்கிறார் என்றால் அவர் ஆன்மீக குருவாக இருக்க முடியாது..

//அதற்கு பாபா காரணமாக மாட்டார். மேலும் ஜெயகாந்தன் ஒரு முறை சொன்னது போல் மனிதனுக்கு கடவுள் தேவையோ இல்லையோ கடவுள் நம்பிக்கை தேவையை இருக்கிறது. வேறு ஒரு நம்பிக்கை நம்மால் தரமுடியாதவரை//

கடவுள் நம்பிக்கை தேவை என்று செயகாந்தான் யாரைக் குறிப்பிட்டு சொல்கிறார். முதலில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இறை நம்பிக்கை என்பதே மனிதனின் சுயநலத்தின் பேரிலும் அவனுக்கோர் மறைமுக பாதுகாப்பு அரண் வேண்டியோ ஏற்பட்டது. இந்த இறை நம்பிக்கை என்பது அனைவருக்கும் தேவை என்று செயகாந்தான் வலியுறுத்த முடியாது. இன்று பலர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நல்வாழ்வு வாழ்கிறார்களே, அப்படியென்றால் இறைநம்பிக்கையற்ற மனிதர்கள் மனிதர்களாக வாழவில்லையா?

//(அதாவது அவர்களது பொருள் உடல் நலம் ரீதியான தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யாதவரை) இம்மாதிரியான இறை நம்பிக்கை தேவைதான்//

ஓஹோ.. வேடிக்கையான கருத்து. அரசாங்கம் பூர்த்தி செய்யாததனால் குருமாரைத் தேடிச் செல்கிறார்களாம். நீங்கள் குறிப்பிடும் இப்படிபட்டவர்கள் உண்மையிலேயே இருந்தார்கள் என்றால் அவர்கள் பெருத்த சுயநலவாதிகளாகத்தான் இருக்க முடியும். அரசாங்கம் கொடுக்கவில்லையென்றால் போராடிப் பெற முயற்சிக்க வேண்டும். இதனின்று தப்பித்துக்கொள்வதற்காகவோ அல்லது தன்னுடைய பாதுகாப்பான வாழ்க்கையை மட்டுமே முன்னிறுத்தியோ ஆன்மீகம் என்றப் பெயரில் லௌகீக வாழ்க்கையைப் பூர்த்தி செய்து கொடுக்கும் குருமாரை நாட வேண்டும் என்ற அவசியமில்லையே..

முதலில் ஆன்மீகத்திற்கு பொய் புரட்டு அவசியமில்லை. உண்மையான அன்பு ஒன்றே மூலதனம்..

VIKNESHWARAN ADAKKALAM December 20, 2008 at 12:38 AM  

பெயரை கூட சொல்லிக்க தைரியமில்லாத வெக்கங்கெட்ட அனானிகளுக்கு பதில் சொல்லும் ஆசிரியருக்கு கண்டனங்கள் :P

Anonymous December 21, 2008 at 3:27 AM  

அனைவருக்கும் வணக்கம்.இப்பகுதிக்கு நான் புதியவன்.சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்.இங்கே குறிப்பிட்ட சில கருத்துக்களை நான் படித்தேன்.சிலர் பாபாவை 35 வருடங்களாக வணங்கி வருவதாக சொன்னார்கள்.சிலர் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை எழுதி இருக்கிறார்கள்.என்னை பொருத்தவரை நண்பர் சதிசு குமார் கூறியது நல்ல கருத்தே! பாபாவை போன்று பல சாமியார்கள் இருக்கிறார்கள். நாம் ஒன்றை மட்டும் அறிந்துகொள்ள வேண்டும்.இவர்கள் எல்லாம் நம்மை போன்ற சாதாரண மானிட பிறவிகள்தான்.நம்மை படைத்த கடவுளை வணங்குவதை விட்டு ஏன் சாதாரண மனிதர்களை வணங்க வேண்டும்?நான் சொல்வது நம் தாய் தந்தையை... என்னை பொறுத்தவரை கோவிலில் வணங்கும் தெய்வம் மனிதனால் உருவாக்கியதே.கடவுள் என்பது மனிதனின் நம்பிக்கையே.அதற்காக நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை.நம்மையும் அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்கிறது.அதைத்தான் நாம் கடவுள் என்கிறோம். அந்த சக்திக்கு ஒரு உருவத்தை கொடுத்து வணங்குகிறோம்.நாம் செய்வது அனைத்தும் நம் நம்பிக்கையே.நம்பினால் கடவுள் இல்லையேல் வெறும் கல்தான்.35 வருடங்களாக பாபாவை வணங்குகிறேன் என்று கூறுகிறார்கள்.இந்த 35 வருடங்களில் உங்கள் தாய் தந்தையரை எத்தனை தடவை வணங்கியிருக்கிறீர்கள்?அவர் மருத்துவ உதவிகள் செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.அடுத்தவர் செய்வதை நாம் விளம்பரப்படுத்துவதைவிட நாம் என்ன செய்தோம் என்று கேட்போம்.நம் பெரியோர்கள் கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே என்று சொல்லியிருக்கிறார்கள்.நம்மிடம் உள்ளதை கொடுத்து உதவினால் அதற்கு பெயர் உதவி.அதில் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. அதையே நாம் பிறரிடமிருந்து கிடைப்பதை எடுத்து மற்றவர்களிடம் கொடுப்பது உதவியல்ல.நம் இல்லங்களில் இருக்கும் சாமியார்களின் அல்லது ஆன்மீகவாதிகளின் உருவப்படத்தை அகற்றி நம் கண்கண்ட தெய்வமான நம் தாய் தந்தையரின் உருவத்தை வைத்து அவர்களை முதலில் வணங்கினால் நம் பிறப்பின் வாழ்வின் பயனை நாம் அடைய முடியும் அல்லவா? நான் யாரையும் புண்படுத்துவதற்காக எழுதவில்லை.எல்லோருடைய உணர்வுகளை நான் மதிக்கிறேன். யாருடைய மனதையாவது நான் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நன்றி.

Anonymous December 23, 2008 at 2:56 PM  

அன்புள்ள விக்னேஷ்வர்
//பெயரை சொல்லிக்க தைர்யமில்லாத //
ஆரோக்கியமான விவாதம் நடத்தும் பொழுது தேவையில்லாத தனி நபர் தாக்கும் தன்மை / குடும்பத்தினரை கெட்டவார்த்தைகளில் இழிவு படுத்தும் தன்மை (வேறு சில இடங்களில் கிடைத்த அனுபவம்)
சிலருக்கு இருப்பதனால் தான் அனானியாக எழுதவேண்டி இருக்கிறது. நான் என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன் அவ்வளவே இக்கருத்தை தான் எல்லோரும் ஏற்கவேண்டும் என்ற ஏகாதிபத்திய முறை இல்லை. இப்படியும் சிந்திக்கலாம் என்று ஒரு எண்ணம். இந்த பதிவின்கருத்துக்களில் பேரளவு எனக்கு ஒப்புதல் உண்டு. ஆனால் //அவர்கள் நிலைத்திருப்பதற்கான காரணம் மக்களின் தேவை. மக்களின் தேவையே அவர்களின் மூலதனம்.// என்ற கருத்து என்னுடைய முந்தைய கருத்தை அதாவது அவர்களது பொருள் உடல் நலம் ரீதியான தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யாதவரை) இம்மாதிரியான இறை நம்பிக்கை தேவைதான் என்பதைஆதரிப்பதாக இருக்கிறது.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP