சமூகத் தன்னார்வத் தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர்!
>> Thursday, December 18, 2008
எதிர்வரும் தைப்பூசத் திருநாளில் (07/02/09 , 08/02/09) பினாங்குத் தீவு மக்கள் சக்தியினர் சமுதாயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முனைந்துள்ளனர். பினாங்கில் பிரசித்திப்பெற்ற செட்டிப்பூசம் நடைப்பெறும் நாளன்றும் (07/02/09 சனிக்கிழமை), மறுநாள் தைப்பூசத் திருநாளன்றும் (08/02/09 ஞாயிற்றுக்கிழமை) பினாங்குத் தீவு மக்கள் சக்தியினர் தண்ணீர்மலையில் சமூகச்சேவைப் பந்தல் ஒன்றினை ஏற்படுத்தவுள்ளனர்.
இச்சமூகச் சேவைப் பந்தலில் வழங்கப்படவிருக்கும் சேவைகள் பின்வருமாறு :-
இச்சேவைகளை வழங்குவதற்காக சமூக நல இலாகா அதிகாரிகள் மக்கள் சக்தியினருடன் இணைந்து அன்றைய தினங்களில் பணியாற்றவுள்ளனர். இச்சேவையில் ஒன்றிணைந்து தோல்கொடுப்பதற்கு பல நல்லுள்ளங்களிடமிருந்து உதவிகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. குறைந்தது 75 தன்னார்வத் தொண்டூழியர்களாவது இச்சேவைக்குத் தேவைப்படுகின்றனர்.
இரு தினங்களிலும் உதவிநாடி வருபவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து தேவையான பாரங்களைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு தொண்டூழியர்கள் உதவி புரிய வேண்டும். இதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
கால அட்டவணையின்படி பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும். ஓய்வு நேரங்களும் நிச்சயம் உண்டு.
ஒருவேளை, நீங்கள் பலகாலங்களாகவே சமுதாய முன்னேற்றத்திற்காக ஏதேனும் ஒருவகையில் உதவி புரிந்திட வேண்டும் என்றெண்ணம் கொண்டிருந்திருப்பீர்கள். அவ்வாய்ப்பு இன்று உங்கள் கதவைத் தட்டுகிறது. ஏன், நீங்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? உங்களின் உதவிகள் வழி பலரின் எதிர்கால வாழ்வு மலரவிருக்கிறது. பிறப்புப் பத்திரம் கிடைக்கப்பெற்ற குழந்தைக்கு கல்வி, அடையாள அட்டை கிடைக்கப்பெற்ற இளைஞனுக்கு முறையான வேலை, உதவிகள் கிட்டிய தனித்து வாழும் தாய்மார்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு, ஆதரவற்ற முதியோர்களுக்கு அரவணைப்பு, அங்கவீனர்களுக்கு மறுவாழ்வு என உங்களின் வியர்வையில் அவர்களின் எதிர்காலம் உயரப்போகிறது.
அண்ணன் உதயகுமார் கூறியதுபோல இனி நாம் நம்மை சமுதாயக் கடமைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான முதற்படிதான் இச்சமூகச் சேவைப் பந்தல்!
இம்மகத்தான சேவையில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள கீழ்கண்ட கைப்பேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும்.
2009-ஆம் ஆண்டு சமூகத் தொண்டுகள் புரியும் ஆண்டாக மலரட்டும்...

- முறையான பிறப்புப்பத்திரம் மற்றும் அடையாள அட்டையிள்ளாதவர்களுக்குத் தேவையான உதவிகள்.
- தனித்துவாழும் தாய்மார்களுக்கான உதவிகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள்.
- குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஏற்ற நலனுதவிகள்
- கைவிடப்பட்ட அல்லது குடும்ப பராமறிப்பற்ற முதியோர்களுக்கான நலனுதவிகள்.
- அங்கவீனர்களுக்கான / உடல் ஊனமுற்றோருக்கான நலனுதவிகள்.
- தேர்தல் வாக்காளர்களாக பதிவு செய்யாதவர்களுக்கு வாக்காளர் பதிவு
இச்சேவைகளை வழங்குவதற்காக சமூக நல இலாகா அதிகாரிகள் மக்கள் சக்தியினருடன் இணைந்து அன்றைய தினங்களில் பணியாற்றவுள்ளனர். இச்சேவையில் ஒன்றிணைந்து தோல்கொடுப்பதற்கு பல நல்லுள்ளங்களிடமிருந்து உதவிகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. குறைந்தது 75 தன்னார்வத் தொண்டூழியர்களாவது இச்சேவைக்குத் தேவைப்படுகின்றனர்.
இரு தினங்களிலும் உதவிநாடி வருபவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து தேவையான பாரங்களைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு தொண்டூழியர்கள் உதவி புரிய வேண்டும். இதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
கால அட்டவணையின்படி பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும். ஓய்வு நேரங்களும் நிச்சயம் உண்டு.
ஒருவேளை, நீங்கள் பலகாலங்களாகவே சமுதாய முன்னேற்றத்திற்காக ஏதேனும் ஒருவகையில் உதவி புரிந்திட வேண்டும் என்றெண்ணம் கொண்டிருந்திருப்பீர்கள். அவ்வாய்ப்பு இன்று உங்கள் கதவைத் தட்டுகிறது. ஏன், நீங்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? உங்களின் உதவிகள் வழி பலரின் எதிர்கால வாழ்வு மலரவிருக்கிறது. பிறப்புப் பத்திரம் கிடைக்கப்பெற்ற குழந்தைக்கு கல்வி, அடையாள அட்டை கிடைக்கப்பெற்ற இளைஞனுக்கு முறையான வேலை, உதவிகள் கிட்டிய தனித்து வாழும் தாய்மார்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு, ஆதரவற்ற முதியோர்களுக்கு அரவணைப்பு, அங்கவீனர்களுக்கு மறுவாழ்வு என உங்களின் வியர்வையில் அவர்களின் எதிர்காலம் உயரப்போகிறது.
அண்ணன் உதயகுமார் கூறியதுபோல இனி நாம் நம்மை சமுதாயக் கடமைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான முதற்படிதான் இச்சமூகச் சேவைப் பந்தல்!
இம்மகத்தான சேவையில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள கீழ்கண்ட கைப்பேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும்.
- 012 5637614 ( திரு.கலை )
- 012 7162884 ( சரஸ்வதி )
- 012 5557522 ( திரு.மாறன் )
- 019 4586587 ( திரு.சுரேசு )
2009-ஆம் ஆண்டு சமூகத் தொண்டுகள் புரியும் ஆண்டாக மலரட்டும்...
4 கருத்து ஓலை(கள்):
சிறந்த பணி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..
நண்பா, இந்த தகவலை எனது facebook இல் வெளியிட அனுமதிப்பிர் என நம்புகிறேன்.
மாதவன்
அன்பின் மாதவன்,
இத்தகவலை தாராளமாக எடுத்து போடுங்கள்.. சமுதாயப் பணிக்கு தொண்டூழியர்கள் கிடைப்பின் மெத்த மகிழ்ச்சியே..
விரைவில், உங்கள் ராட்டினம் வலைப்பதிவு தமிழ் வலையுலகில் வலம்வர என் வாழ்த்துகள்..
நன்றி.
Post a Comment