நமதுரிமைகள் சிறைக்குச் சென்ற நாள்!
>> Saturday, December 13, 2008
13 திசம்பர் 2007, மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளை மீட்டெடுக்க புயலாய் புறப்பட்ட ஐந்து இண்ட்ராஃப் தலைவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட நாள்! மிரண்டுபோன அம்னோ அரசாங்கம் தன் வெறியாட்டத்தின்வழி மலேசிய இந்தியர்களின் எழுச்சிக் குரலை ஒடுக்கி பழி தீர்த்துக்கொண்ட நாளிது! பயங்கரவாதிகள் எனும் முத்திரைக் குத்தப்பட்ட இவர்களுக்கு கமுந்திங் சிறையில் இடம் ஒதுக்கிய நாளிது!
இன்றோடு இண்ட்ராஃப் தலைவர்கள் சிறைவாசம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவை அடைகிறது. விடியலை நோக்கியப் பயணம் ஓராண்டுகளாக சிறையில் ஓய்வெடுக்கும் வேளையில், அப்பயணத்திற்கான விடுதலை நாள் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது! இந்நாளை நினைவுக்கூரும் வகையில், இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலைக்காகவும் அவர்கள் முன்னெடுத்துள்ள உரிமைப் போராட்டம் மீண்டும் புத்துணர்வு பெற்று நன்முறையில் தொடரவேண்டும் என்பதற்காகவும் இறைமையை இறைஞ்சுவோமாக.. உணர்வை இழக்காதிருப்போமாக..!
போராட்ட நினைவலைகள்..
அல்சசீரா செய்தி..
திரு.உதயகுமார் கைதாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்..
பகுதி 1
பகுதி 2
நினைவுக்கூரும் பதிவுகள் :
முக்கிய அறிவிப்பு !!! நம்முடைய 5 வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது !!! நமது அடுத்த நடவடிக்கை என்ன?
வழக்கறிஞர்கள் - குடும்பத்தினர் சந்திப்பு
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment