இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் உண்ணாநோன்புப் போராட்டம்!

>> Thursday, December 11, 2008


எதிர்வரும் 13-ஆம் திகதி திசம்பர் மாதம் (சனிக்கிழமை), இண்ட்ராஃப் தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதாகி ஒரு வருடம் நிறைவையடைகிறது. இந்நாளை நினைவுக்கூரும் ஓர் அங்கமாக இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் சிலர் உண்ணா நோன்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

இண்ட்ராஃப் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.செயதாசு நிருபர்களிடம் இவ்விடயம் குறித்து அறிவிக்கையில், ”அரசாங்கம் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும்வரை இவ்வுண்ணாநோன்புப் போராட்டம் தொடரும்!” என்றார். இவ்வுண்ணாநோன்புப் போராட்டமானது இண்ட்ராஃப் தலைவர்களால் முன்மொழியப்படாவிடினும் சில ஆதரவாளர்கள் துணிந்து இப்போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அவர் கூறினார்.


இவர்கள் மாற்றத்தைக் காண வேண்டும் என்ற துடிப்புள்ளவர்கள்! எனவே, தன்னார்வ அடிப்படையில் இவர்கள் முன்வந்து அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வரை உண்ணா நோன்புப் போராட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள்!” என்று அவர் மேலும் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு வருடகாலமாக சிறையில் வாடிவரும் இவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் இன்றுவரையில் அரசாங்கத்தால் நிரூபிக்கப்படவில்லை! இதற்கிடையில் அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட செப்தெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலில் சம்பந்தப்படவர்கள் என சந்தேகிக்கப்பட்டஜெமாஆ இசுலாமியா' இயக்கத்தைச் சார்ந்த இருவரையும், மேலும் பல்வேறு குற்றங்களுக்காக கைதான நால்வரையும் கமுந்திங்கிலிருந்து விடுவித்துள்ள மலேசிய அரசாங்கம், இன்றுவரையில் இண்ட்ராஃப் தலைவர்களை தடுத்து வைத்துள்ளது.” என்று அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வுண்ணா நோன்புப் போராட்டம் பாஸ் கட்சியுடன் இணைந்து சா அலாமிலுள்ள ஓர் ஆலயத்தில் நடைப்பெறும் எனவும், அங்கு கருத்தரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திரு.செயதாசு அறிவித்தார். இந்நிகழ்வில் மக்கள் நீதி கட்சியின் துணைத் தலைவர் சேட் உசீன் அலி, வலைப்பதிவர் ராசா பெத்ரா, சனநாயகச் செயல் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, பாஸ் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மரியா மற்றும் இண்ட்ராஃப் தலைவர்களின் மனைவிமார்கள் ஆகியோர் கலந்துக்கொள்ளவிருக்கின்றனர். இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் அனுவார் இபுராகிமும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி தொலையுரையாடல் வழி இந்நிகழ்வில் பங்கெடுத்து அவருடைய கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்வதுடன், திரு.உதயகுமாரின் கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

ராஜ நடராஜன் December 12, 2008 at 1:01 PM  

சதீசு குமார்! தருமி சாரின் பதிவிலிருந்து உங்களை துரத்திக் கொண்டு வந்துள்ளேன்.

Exodus படிக்க தந்தமைக்கு நன்றி.

உங்ககிட்ட நிறைய ஓலைச்சுவடிகள் இருக்கும் போல தெரியுது!

Sathis Kumar December 13, 2008 at 12:26 PM  

நன்றி அன்பரே,

என் உணர்வுகளின் வெளிப்பாடுதான் இத்தளம்..

தொடர்ந்து வாருங்கள்..

அன்புடன்,
கி.சதீசு குமார்

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP