போராட்ட நினைவலைகள்...

>> Wednesday, December 31, 2008


பி.ப : 23.59

நேற்றோடு 2008-ஆம் ஆண்டின்டைரி' தன் இறுதி பக்கத்தை நிரப்பிக் கொண்டு நிரந்தரமாக மூடிக் கொண்டுவிட்டது. தன்னுடைய கடமையையும் ஆயுளையும் முடித்துக் கொண்ட 365 பக்க டைரியின் பக்கங்களை சற்று புரட்டிப் பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். அதில் பதிந்துவிட்ட நிகழ்வுகள் இனி காலத்திற்கும் மறந்துவிட முடியாதபடி நிலைத்து நிற்பதோடு மட்டுமல்லாது, அதன் தாக்கம் இனிவரும் காலங்களில் நாமெடுக்கும் பலவகையான முடிவுகளுக்கு அச்சாணியாக அமைந்துவிடக் கூடிய சாத்தியங்கள் இருப்பதைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். குறிப்பாக உலகளவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை அடுத்த இரண்டாண்டுகளுக்கு நம்மை வாட்டி எடுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, அனைவரும் சிக்கனம் எனும் ஆயுதத்தை கையில் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை!

சோதனைக் காலம் என உலகமே வர்ணிக்கும் இந்த 2008-ஆம் ஆண்டானது மலேசிய இந்திய சமுதாயத்தை மட்டும் விட்டுவைக்கவில்லை. எதையும் போராடினால்தான் பெற முடியும் எனும் இலக்கணம் கற்றுவிட்ட மலேசிய இந்தியர்கள் 2008-ஆம் ஆண்டில் போராடிப் பெற்றதும் இழந்ததும் ஒன்றல்ல இரண்டல்ல. சோதனை இருந்தால்தான் நம்முடைய பலம் நமக்கே தெரியும். அவ்வகையில் 2008-ஆம் ஆண்டினை ஒரு புரட்சியாண்டு என வர்ணிக்கலாம். குறிப்பாக நாட்டு நிலவரங்களை தைரியமாகவும் வெளிப்படையாகவும் கருத்து தெரிவிக்கும் பக்குவத்திற்கு இளைஞர்கள் முன்வந்தது பாராட்டிற்குரிய விடயமாகும். சிந்தனைப் பரிமாற்றங்கள் வெற்றியடைவதில் மிகச் சிறந்த ஊடகமாக சாமானிய மக்கள் தேர்ந்தெடுத்தது வலைப்பதிவுகள்தான். இவை ஏற்படுத்திய தாக்கத்தினால் நாட்டின் தலையெழுத்தே மாறிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றின் மத்தியில் மலேசிய இந்தியர்கள் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வகுத்துக்கொண்ட ஓர் ஆண்டாக 2008-ஆம் ஆண்டினை கூறலாம். சிந்தனையளவில் பல மாற்றங்களைப் பெற்றுவரும் மலேசிய இந்தியர்கள் இனி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகிறது. மலேசிய இந்தியர்கள் கடந்தாண்டு கடந்துவந்த பாதைகளை , அதிலும் குறிப்பாக மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளுக்காக போராடிவரும் இண்ட்ராஃப் இயக்கம் முன்னெடுத்த சில போராட்ட நிகழ்வுகளையும், சந்தித்த சவால்களையும் சற்று நினைவுக்கூர்வோம்.

1 சனவரி - சிங்கப்பூர் தமிழனின் 5 நாட்கள் உண்ணாவிரதம் (31 திசம்பர் முதல் 4 சனவரி வரை)
(இண்ட்ராஃபின் முதல் உண்ணாநோன்புப் போராட்ட நிகழ்வு)

18 சனவரி - ஈப்போவில் 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டம்...

21 சனவரி - லண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி

23 சனவரி - பத்துமலை தைப்பூசம் புறக்கணிப்பு. பிற முக்கிய நகரங்களில் இண்ட்ராஃபின் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி

24 சனவரி - திரு.உதயகுமார் உடல்நிலை பாதிப்பு!

28 சனவரி - ஜாசினில் உண்ணா நோன்புப் போராட்டம்

டப்லினில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக அமைதி மறியல்.

1 பிப்ரவரி - பிரித்தனில் இண்ட்ராஃபின் அமைதிப் போராட்டம்..

16 பிப்ரவரி - இண்ட்ராஃபின் இரண்டாவது மாபெரும் பேரணி

8 மார்ச்சு - நாட்டின் 13-வது பொதுத் தேர்தல், மக்கள் சக்தியின் வலிமையால் 5 மாநிலங்கள் மக்கள் கூட்டணிக்கு கைமாறின.

2 ஏப்ரல் - இண்ட்ராப் ஐவரின் மேல்முறையீடு

17 ஏப்ரல் - ஜெனிவாவில் இந்து உரிமைப் ணிப்படை, வேதமூர்த்தி .நா அதிகாரிகளை ந்தித்தார்

28 ஏப்ரல் - கமுந்திங்கை நோக்கி இண்ட்ராஃபினர் மகிழ்வுந்து பயணம்

11 மே - திரு.உதயகுமாருக்கு முறையான சிகிச்சை வழங்கக் கோரி ஈப்போ, பினாங்கு,கோலாலம்பூர் ஆகிய இடங்களில் இண்ட்ராஃபினர் அமைதி மறியல்

19 சூன் - திரு.உதயகுமார் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதி..!

5 சூலை - கமுந்திங் தடுப்பு காவலுக்கு வருகைப் புரிந்த உள்துறை அமைச்சரை சந்திக்க திரு.உதயகுமார் மறுப்பு.

3 ஆகசுட்டு - தலைநகரில் இண்ட்ராஃப் கொடி அறிமுக விழா

7 ஆகசுட்டு - 54-வது காமன்வேல்ட் மாநாட்டின்போது நான்கு இண்ட்ராபினர் கைது!

11 ஆகசுட்டு - பெட்ரோனாசு இரட்டை கோபுரத்தின் முன்புறம் 30 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் உண்ணாநோன்புப் போராட்டம்

23 ஆகசுட்டு - செபராங் ஜெயாவில் நடைப்பெற்ற யாகத்தில் கலகம். 9 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது!

30,31 ஆகசுட்டு - மந்தின், நெகிரி செம்பிலானில் 24 மணிநேர மகா யாகம்,உண்ணா நோன்புப் போராட்டம்..

31 ஆகசுட்டு - இலண்டனில் இண்ட்ராஃப் அமைதி மறியல்

8 செப்தெம்பர் - இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க மனு - நீதிமன்றம் தள்ளுபடி!

8, 9 செப்தெம்பர் - இண்ட்ராஃப் பேரணியில் கைதானவர்களின் வழக்கு விசாரணை

9 செப்தெம்பர் - உலு லங்காட் ஆலயம் உலு லங்காட் ஊராட்சி மன்றத்தினரால் உடைப்பு. மக்கள் சக்தியின் கண்டனம்

13 செப்தெம்பர் - சுங்கை பட்டாணி, கெடாவில் இண்ட்ராஃபின் முதல் தேசிய மாநாடு

22 செப்தெம்பர் - இண்ட்ராஃப் பேரணியில் கைதான 27 போராளிகளுக்கு இண்ட்ராஃப் நிதி திரட்டுதல்.

27 செப்தெம்பர் - சுதந்திர சதுக்கத்தில் இண்ட்ராஃபின் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி

4 அக்தோபர் - புத்ரா உலக வாணிப மையத்தில் நடைப்பெர்ற பிரதமரின் அரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் வருகை

15 அத்தோபர் - இண்ட்ராஃப் இயக்கத்திற்கு அதிகாரப்பூர்வ தடை

22 அத்தோபர் - இண்ட்ராஃபினர் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடம் மகசர் சமர்ப்பித்தல்

23 அத்தோபர் - புத்ரா செயாவில் 11 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கைது (குழந்தை வைஷ்ணவி உட்பட)

24 அத்தோபர் - காசாங் நீதிமன்றத்தில் 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் வழக்கு விசாரணை

7 நவம்பர் - உதயாவின் பிறந்தநாளையொட்டி நாடெங்கிலும் சிறப்புப் பிரார்த்தனைகள்

8 நவம்பர் - உதயாவின் பிறந்தநாளையொட்டி லண்டனில் அமைதி மறியல்

13 நவம்பர் - சாணக்கிய புரியில் அமைந்திருக்கும் மலேசியத் தூதரகத்தின் முன்புறம் இண்ட்ராஃபிற்கு ஆதரவாக மனித உரிமை இயக்கங்கள் அமைதி மறியல்!

செந்தூல் மாவட்ட காவல்த்துறை தலைமையகத்தில் திரு.செயதாசு, திரு.தனேந்திரன் வாக்குமூலம்

15,16 நவம்பர் - கமுந்திங்கை நோக்கிய 350 கி.மீ மெதுவோட்டப் பயணம், இண்ட்ராஃபினர் ஆதரவு.

20 நவம்பர் - உதயாவின் தாயார் மருத்துவமனையில் அனுமதி! தாயைச் சந்திக்க மகனுக்கு தடை.

25 நவம்பர் - நாடெங்கிலும் 25 நவம்பர் பேரணி முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு யாகங்கள் மற்றும் பிராத்தனைகள்

9 திசம்பர் - இண்ட்ராஃப் இயக்கத்திற்கு 2008 ஆண்டிற்கான சிறந்த மனித உரிமை விருது சுவாராம் இயக்கத்தால் வழங்கப்படு கௌரவிக்கப்பட்டது.

பிரிட்டன் பிரபுக்களின் சபையில் இண்ட்ராஃப் போராட்டம் குறித்தும் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கம்.

11 திசம்பர் - 'ஜெரிட்' இயக்கத்தின் மிதிவண்டி பயணப் போராட்டத்திற்கு மக்கள் சக்தி ஆதரவு!

13 திசம்பர் - கிள்ளானின் மக்கள் சக்தி கருத்தரங்கம்

மக்கள் சக்தியினரின் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டம்

17 திசம்பர் - திரு.செயதாசு மருத்துவமனையில் அனுமதி.

21 திசம்பர் - நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளரிடம் மக்கள் சக்தியினர் மகசர் சமர்ப்பித்தனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளைத் தவிர்த்து மாநில ரீதியில் பல நிகழ்வுகள் கடந்தாண்டு நிகழ்ந்த வண்ணமே இருந்தன. இனிவருங்காலங்களில், மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைப்பெற வேண்டும். அதற்கு மக்கள் தார்மீக ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்ப்பார்போம்.

மலர்ந்துள்ள 2009 ஆண்டு சமுதாயத் தொண்டுகள் புரியும் ஆண்டாக மலரட்டும்!

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

5 கருத்து ஓலை(கள்):

தாய்மொழி January 3, 2009 at 9:35 PM  

நாட்டின் மீது தாங்கள் அதீத பற்று கொண்டுள்ளீர்கள் என்பது தெள்ளத்தெளிவாக அறிய முடிகின்றது. எனது வாழ்த்துக்களை அன்போடு தெரிவிக்கின்றேன்..

Wayang Kulit Malaysia January 4, 2009 at 11:21 AM  

விடு பட்ட தகவல் ஒன்று: 29/12/2008 நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் மறைவை ஒட்டி நெகிரி செம்பிலான் மாநில மக்கள் சக்தியினர் மலர் வளையம் சாத்தி அஞ்சலி செலுத்தினர் http://www.makkal.org/

Sathis Kumar January 4, 2009 at 12:20 PM  

தாய்மொழி வலைப்பதிவர்களுக்கு நன்றி.

மது அவர்களே, மாநில ஆட்சியாளருக்கு மலர் வளையம் செலுத்தியது முக்கியமான நிகழ்வு இல்லை. போராட்ட நிகழ்வுகளை நினைவுக் கூர்வதே இப்பதிவின் நோக்கம்..

A N A N T H E N January 4, 2009 at 12:25 PM  

// அதிலும் குறிப்பாக மலேசிய இந்தியர்களின் அரசுரிமைகளுக்காக போராடிவரும் இண்ட்ராஃப் இயக்கம் முன்னெடுத்த சில போராட்ட நிகழ்வுகளையும், சந்தித்த சவால்களையும் சற்று நினைவுக்கூர்வோம்.//

உங்கள் டைரி வித்தியாசமாக உள்ளது, நல்ல முயற்சி

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Sathis Kumar January 5, 2009 at 2:20 AM  

@A N A N T H E N
//புத்தாண்டு வாழ்த்துக்கள்//

தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அனந்தன்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP