பேரணியில் கலந்துக்கொள்பவர்களுக்கு 10 கட்டளைகள்..
>> Saturday, November 24, 2007
நாளை நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்துகிறோம்.
1. நீங்கள் பயணிக்கும் பொழுது உங்களை நிறுத்தி மேலும் செல்ல காவல் துறையினர் தடை விதித்தால், நீங்கள் மாரான் புனித நடை அல்லது தைப்பூச ரதத்தினுடன் நடப்பதாக எண்ணிக் கொண்டு திரளாக நடந்து வாருங்கள்.
2. அனைவரும் சாலை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
3. வரும்பொழுது, எந்த ஒரு ஆயுத்தத்தையும், அல்லது மற்றவர்களுக்கு ஆபத்தாக அமையும் எந்தவொரு பொருளையும் கொண்டு வர வேண்டாம், அதோடு கல்விசார் நிலையங்களில் பயிலும் மாணவர்கள் உங்களுடைய கல்விநிலையத்தின் அடையாள அட்டையை அணிந்துவர வேண்டாம்.
4. முடிந்தால் புகைப்படக் கருவி, நிழற்படக் கருவி போன்றவற்றைக் கொண்டு வாருங்கள்.
5. அனைவரும் கண்டிப்பாக தங்களுடைய அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்.
6. ஆரஞ்சு நிற உடை காவல் துறையினரை அதிகம் ஈர்க்கும் என்பதால் அதனை மறைத்தோ அல்லது அணியாமலும் வரலாம்.
7. பேரணியின்போது கலகத்தை ஏற்படுத்த சிலக் கைக்கூலிகள் வரம்பை மீறிச் செயல்படக் கூடும், அதோடு இறுதியாக நமக்குக் கிடைத்தத் தகவலின்படி சில குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் கையில் மஞ்சள் நிறத் துணியை அணிந்திருக்கக் கூடும், எனவே ஜாக்கிரதை.
8. பேரணியில் திரண்டிருக்கும்பொழுது, கலவரத்தைத் தடுக்க ஒரு வழியாக அனைவரும் நிற்கும் இடத்திலேயெ அமர்ந்துவிட வேண்டும்.
9 எந்த ஒருக் காரணத்தினாலும் கலகத் தடுப்புக்காரர்களிடமோ, அல்லது காவல் துறையினரிடமோ வம்பு வழக்கில் ஈடுபட வேண்டாம்.
10. மகஜர் சமர்ப்பிக்கப்பட்டு, வழக்கறிஞர்கள் கூட்டம் களையலாம் என அறிவித்ததும் அனைவரும் உடனடியாக அமைதியான முறையில் களைந்துவிட வேண்டும்.
உங்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.
எனவே சிந்தித்துச் செயல்படுங்கள்.
வாழ்க இந்தியச் சமுதாயம்!!!
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment