இந்தியாவின் முதல் சந்திரனுக்கான விண்கலம்
>> Sunday, November 18, 2007

இந்திய விண் ஆய்வுக் கழகம் வருகின்ற 30-ஆம் திகதி மார்ச் மாதம் 2008-இல் சந்திராயன் - 1 எனும் விண்கலத்தை சந்திரனுக்கு பாய்ச்ச உள்ளது. Polar Satellite Launch Vehicle (P.S.L.V.) எனும் துணைக்கோளை சென்னையிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிரீ ஹரிகோட்டா விண்கல மையத்திலிருந்து பாய்ச்சவுள்ளதாக விக்ரம் சாராபாய் விண்கல மையத்தில் துணைப்பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஆதிமூர்த்தி தெரிவித்தார்.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கமானது, சந்திரனில் "Helium" எனப்படும் வாயு அதிகம் இருப்பதால் அந்த வாயுவைக் கொண்டு பூமியின் கனிமங்களில் கிடைக்கப்பெறும் சக்திகளுக்கு பதிலாக மாற்று சக்தியாக இதனைப் பயன்படுத்துவதற்கே என அவர் மேலும் கூறினார்.
அதோடு இந்தியாவின் அடுத்த கட்ட ஆராய்சியாக, விண்வெளியில் நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த விண்வெளி நிலையம் அமைக்கப்படுமாயின் இந்திய விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும் எனவும் இதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் உடன்படிக்கைப்படி வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியனின் கனவுகள் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்..





0 கருத்து ஓலை(கள்):
Post a Comment