மேலும் உயர்கிறது நம் பலம்..

>> Thursday, November 22, 2007

கடந்த 18-ஆம் திகதி பினாங்கு மாநிலத்தில் குட்டி இந்தியா அருகில் உள்ள சீனர் மண்டபத்தில் சுமார் 6000 இந்தியர்கள் இந்து உரிமைப் பணிப்படை நடத்திய கருத்தரங்கிற்கு வருகைப்புரிந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இந்தக் கருத்தரங்கில் நானும் பங்கேற்று இருந்தேன். பயன்மிகு கருதுக்கள் இங்கு பரிமாறப்பட்டன. சிறப்பு வருகை புரிந்த வழக்கறிஞர்களின் தைரியத்தையும் மனோபலத்தையும் கண்டு வியந்தேன். நம் இந்தியர்களுக்காக மூன்று கட்சிகள் இருந்தும் இந்து உரிமைப் பணிப்படையைப் போல் களத்தில் இறங்கி போராடும் ஒரு இயக்கத்தை நான் காணேன். சபாஷ்!! ஒரே நாளில் மூன்று இடங்களில் கருத்தரங்குகளை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டிய இவர்களிடம் இளைஞர்களின் துடிப்பு செயல் உருவில் மாறியிருப்பதாகக் கண்டேன். இந்த தைரியம் ஒவ்வொரு மலேசிய இந்தியனுக்கும் வர வேண்டும்.

பினாங்கு கருத்தரங்கு






பட்டவெர்த் கருத்தரங்கு



அண்மையில் சில நாளேடுகளில் வழக்கறிஞர்கள் அரசியலில் வருவதற்கான ஒரு உத்தியாக இந்தக் கருத்தரங்குகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என சில அரசியல் தலைவர்களின் கருத்துக்களை பிரசுரித்திருந்தன. அதோடு எந்த முட்டாள் அரசாங்கமாவது ஒரு மனிதனுக்கு இவ்வளவு இழப்பீடு கொடுக்குமா என்றும் ஒரு அரசியல்வாதி கேட்டிருக்கிறார். நம் வழக்கறிஞர்கள் ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் இந்த இழப்பீட்டுத் தொகையை கண்டிப்பாக வாங்கித் தருவோமென அரசியல்வாதிகளைப் போல் போலி வாக்குகளைத் தர நாங்கள் விரும்பவில்லை எனக் கூறிவருகின்றனர். குறைந்தப்பட்சம் உலகத்திற்கு குறிப்பாக பிரிட்டனுக்கு இந்த மலேசியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் அம்பலமாகவேண்டும் என்பதே இந்து உரிமைப் பணிப்படையின் நோக்கமாகும். அதோடு இதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்பதே நம்முடைய நம்பிக்கை. அடிக்கடி நாளேடுகளின் வழி மறைமுக மிரட்டல்கள் நம் பேரணித் திட்டத்திற்கு வருவதன் காரணம், அம்னோ அரசாங்கம் பயந்துவிட்டதனால்தான்...

Federal Costitution பதிவிறக்கம்

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP