பேருந்தை நிறுத்தினால், எங்களுக்கு நடந்துச் செல்லத் தெரியாதா?
>> Saturday, November 24, 2007
பேருந்தை நிறுத்தினால், எங்களுக்கு நடந்துச் செல்லத் தெரியாதா? காலங்காலமாக தைப்பூசத்தில் நடந்தக் கால்கள் இன்று உரிமையைத் தட்டிக் கேட்பதற்காக நடக்காதா என்ன? நடந்தே பழகிய மக்கள் நாங்கள், நாளை உரிமைக் குரல் கொடுக்க நாங்கள் நடக்க வேண்டி வந்தாலும் அது எங்களுக்குச் சந்தோசமே. நாங்கள் நடப்பதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. நாளை எங்கள் வருகை நிச்சயம்!!
வழக்கறிஞர்கள் கைதுத் தொடர்பான படக்காட்சிகள்
type="text/javascript">mkinitv_client("Hindraf_Klang_23November.wmv");
type="text/javascript">mkinitv_client("Hindraf_arrests_23November_1.wmv");
பிணையில் வெளிவந்த நம் வீர இந்திய வழக்கறிஞர்கள் மக்கள் பின் தொடர ஆலயத்திற்குச் செல்லும் படக்காட்சி
முக்கியக் குறிப்பு : சகோதரர்களே, நாளை உங்கள் பேருந்து கோலாலம்பூரினுள் செல்வது தடுக்கப்பட்டால், பேருந்தைவிட்டு இறங்கி அனைவரும் ஒன்றாக நடக்க ஆரம்பித்துவிடுங்கள். உங்கள் முருகனுக்காக வேண்டுதல் செய்வதாக மனதில் நினைத்துக்கொண்டு நடந்துச் செல்லுங்கள்.. கண்டிப்பாக பத்துமலை முருகன் உங்களைக் கைவிடமாட்டார்.. இவ்வமைதிப் பேரணியில் சில குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள், கையில் மஞ்சள் நிறத் துணியை அணிந்து வருவதாக அறியவந்துள்ளது. எனவே அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள்.. ஒவ்வொரு குண்டனுக்கும் ரிங்கிட் 5000 ஒரு அரசியல்வாதியால் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. நம்முடைய அமைதிப் பேரணியை போர்க்களமாக ஆக்குவதற்கு இந்த கைகூலிகள் செயல்படப்போவதாகத் தெரிகிறது. எனவே இவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒற்றுமையே பலம் நமக்கு, மறந்துவிடாதீர்கள்..
வாழ்க இந்திய சமுதாயம் !!
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment