மீண்டும் 3 பேரணிகளுக்கு தயாராகின்றனர் மலேசியர்கள்...
>> Thursday, November 29, 2007
மலேசிய மண்ணில் சுதந்திரம் என்பது எந்த அளவில் நாம் அனுபவிக்கின்றோம் என சிந்தித்துப் பார்த்தால் " கொடுத்ததை வைத்து சந்தோசப்பட்டுக்கொள், அதிகம் கேட்காதே!! கொடுத்ததைப் பற்றிக் கேள்வி எழுப்பாதே!! " என்றுதான் இருக்கிறது.
ISA சட்டத்தைக்கூறி மக்களின் வாயை மூடுவதும், மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து அடுத்த மாதம் இன்னும் மூன்று அமைதிப் பேரணிகள் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளன.
1. வருகின்ற டிசம்பர் 9-ஆம் திகதியன்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் தனது வருடாந்திர மனித உரிமை நாளுக்கான பேரணியை நடத்தவுள்ளது. இப்பேரணியில் BERSIH அமைப்பும் கலந்துக் கொள்ள தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
2. இதனை அடுத்து டிசம்பர் 11-ஆம் திகதி அமைப்பு நாடாளுமன்றத்தின் முன்பு மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கான வயது வரம்புத் தொடர்பான கேள்வியை எழுப்பும் வகையில் பேரணி நடக்கவுள்ளது. இதற்கிடையில் இன்று மக்களவையில் தேர்தல் ஆணையத்தின் தலைவரான அப்துல் ரஷீட் அப்துல் ரகுமானை 1 வருடத்திற்கு மீண்டும் தலைவர் பொறுப்பில் அமர்த்த கருத்து கொண்டுவரப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ஆம் திகதியுடன் பதவி பொறுப்பிலிருந்து வேளியேறும் அவரை மீண்டும் ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது.
3. மூன்றாவது பேரணியானது, நாட்டின் எதிர்க்கட்சிகளும், மற்றும் சில தனியார் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து அடுத்த வருடம் ஜனவரி ஒன்றாம் திகதி முதல் டோல் கட்டணம் உயர்வதை எதிர்த்து போராடவுள்ளனர். இப்பேரணி நடக்கவிருக்கும் திகதி இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.
type="text/javascript">mkinitv_client("PKR_2911.wmv");
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment