கேவலமாக இருக்கிறது அரசாங்கத்தின் நடவடிக்கைகள்..

>> Friday, November 23, 2007


இந்து உரிமைப் பணிப்படை நடத்தவிருக்கும் அமைதிப் பேரணியைத் தடுப்பதற்கு காவல்துறையினர் திட்டமிட்டு வேலைகளில் இறங்கிவிட்டனர். இன்று காலையில் 10.30 மணியளவில் வழக்கறிஞர் உதயக்குமார் அவர்களை, பங்சாரில் உள்ள அவரின் அலுவலகத்தில் காவல்துறையினர் Sedition Act என்ற சட்டத்தின்கீழ் கைது செய்து ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் வைத்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் மற்ற வழக்கறிஞர்களான P.வேதமூர்த்தி, V.கணபதி ராவ் போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு முன்பு கோலாலம்பூரில் பல இடங்களில் சாலை தடுப்புக்கள் குறிப்பாக Taman Ahmad Dato Razali, Ampang, Shah Alam, Sungai Besi, Kajang, Puchong, Bukit Raja, Bukit Tinggi, Klang, Kampung Pandan, Pandan Indah, Kampung Cheras Ampang, Jalan Duta போன்ற இடங்களில் போடப்பட்டுள்ளன.
வழக்கறிஞர் உதயக்குமார் அவர்கள் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்படுவதாகத் தெரியவருகிறது. இதற்குக் காரணம் வருகின்ற 25-ஆம் திகதி அவரும், அவரின் சகாக்களும் பிரிட்டிஷ் தூதரகத்திற்குச் செல்லக் கூடாது என அரசாங்கம் பயன்படுத்திய கேவலமான உத்தி. சுயநலம் இன்றி நாடு நன்றாக நிர்வகிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் இந்து உரிமைப் பணிப்படையினருக்கு எவ்வளவு தொல்லைகளும் சவால்களும் வந்தாலும் பயம் இல்லை. குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். அதனால்தான் இந்த அமைதிப் பேரணியைத் தடுக்க அரசாங்கம் தடங்கல்கள் கொடுத்துக்கொண்டே வருகின்றது. ஆனால் நம் இந்தியர்கள் இதற்கு பயப்படுவார்கள் என்ற எண்ணம் நமக்கில்லை, அஞ்சாத சிங்கம் இந்தியர்கள்.

இதற்கிடையில் மற்றுமொரு செய்தியில்,ராவாங்கிலிருந்து திருமதி கலா என்பவர் 4 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களுடன் கோலாலம்பூருக்குள்ள நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் காப்பாரில் உள்ள தபால் நிலையத்தில் இந்து உரிமைப் பணிப்படைக்கு உரிய எந்தவொரு கடிதமும் அங்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை என தெரியவந்துள்ளது.சித்ரா என்பவர் நேற்று புத்ரா ஜயாவில் உள்ள சுங்கத் துறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.

மற்றுமொரு சம்பத்தில் நேற்று மாலை 4.10 மணியளவில் இந்து உரிமைப் பணிப்படையின் சேவகரான புகைப்படக்காரர் தனேந்திரன் பூச்சோங் ஜாயா காவல் துறையினர் ஜாலான் பூச்சோங்கில் நடத்திய சாலைத் தடுப்பைப் படம் பிடித்தப்பொழுது கைது செய்யப்பட்டடுள்ளார்.

மலேசியர்களே இதுதான் 50 ஆண்டுகளில் நாம் பெற்ற சுதந்திரமா? நினைத்துப் பாருங்கள்.. கலவரம் செய்ய வேண்டும் என்பது நம் நோக்கம் இல்லை, அமைதியான வழியைக் கையாண்டு உண்மையை உணர்த்தி மனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதெ நம்முடைய எண்ணம். இந்த காந்தீயவாதிகளுக்கு அம்னோ அரசாங்கம் கொடுத்த மரியாதையைப் பார்த்தீர்களா? இதிலிருந்தே அம்னோவின் சூழ்ச்சி, அது கையாளும் கேவலமான உத்திகள், காவல் துறையை, சட்டத்துறையை, இராணுவத்துறையை என இன்னும் எத்தனையோ துறைகளை தன்னகத்தே அடக்கிக் கொண்டு நம்முடைய வாயை மூட பார்க்கிறார்கள். இந்த மனித உரிமை மீறல்கள் வெளிநாடுகளுக்குத் தெரிய வேண்டும். இதற்குத் தக்க பதிலடி அம்னோ அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டும்..

காவல் துறை அமைதி பேரணித் தொடர்பாக எச்சரிக்கும் படக்காட்சி.
சகோதரர்களே எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நாம் அனைவரும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவோம். மறவாமல் அமைதிப் பேரணியில் கலந்துக் கொள்ள வாருங்கள். நான் கேள்விப்பட்டதில் சில இடங்களில் இந்திய இளைஞர்கள் ஆயுதங்களைக் கொண்டு வர இருப்பதாகவும் கலகத் தடுப்புக்காரர்கள் தாக்கினால் தாங்களும் அவர்களைத் தாக்கவிருப்பதாகவும் அறியப்பட்டன. தயவுச் செய்து நம் தலையிலேயே நாம் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ள வேண்டாம். இது அமைதிப் பேரணி, போர் அல்ல..!!

அனைவரும் வெற்றுக் கையோடு வருவதையே நாம் வரவேற்கிறோம்.. நம்மிடம் ஆயுதங்களைப் பார்த்தால் கலகத் தடுப்புக்காரர்கள் சுலபமாக நம்மைக் களைப்பதற்கு வழிபிறந்துவிடும். எனவே மீண்டும் நம் இளைஞர்களுக்கு எச்சரிக்கை.. உங்கள் பாதுக்கப்பிற்கு ஏதேனும் தடங்கல்கள் வந்துவிடக் கூடாது என்பதே நம்முடைய எண்ணம்...

அமைதிப் பேரணியில் கலந்துக் கொள்ளும்போது சாலைவிதிமுறைகள் அனைத்தையும் ஒழுங்காக பின்பற்றவேண்டியது நம் கடமை. பிரிட்டிஷ் தூதரகத்தின்முன் அனைவரும் கூடியிருக்கும்பொழுது கலவரம் ஏற்படுத்துவதற்கு யாரேனும் கைகூலிகள் முனையலாம். எனவே அங்கு கூடியுருக்கும்பொழுது அனைவரும் அமர்ந்துவிட வேண்டும். கலகம் நடக்காமல் இருக்க இது சிறந்த வழி.

இதுத் தொடர்பாக மேலும் தகவல்களுக்கு "கோழைகளின் அராஜகம்" எனும் கட்டுரையைப் படிக்கவும்.

அமைதிப் பேரணியில் வழக்கறிஞர் P.உதயக்குமார் அவர்களால் கலந்துக்கொள்ள இயலவில்லையென்றால் மற்ற வழக்கறிஞர்கள் மற்றும் பல தொண்டூழிய நிருவனங்கள் நமக்குப் பக்க பலமாக இருப்பார்கள், எனவே சகோதரர்களே உங்களுடைய வரவு பொன்னேட்டில் பதிக்கப்பட்ட பெயராகிவிட்டது.

முக்கியக் குறிப்பு :
ஆரஞ்சு நிற உடை அணிந்து வருபவர்களை காவல்துறையினர் கைது செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளது,கோலாலம்பூரினுள் நுழையும் ஒவ்வொரு வாகனமும் பரிசோதனைக்குள்ளாகும். உங்கள் கைத்தொலைப்பேசிகளில் அமைதிப் பேரணி தொடர்பாக ஏதேனும் குறுந்தகவல்கள் இருந்தால் தயவு செய்து ஞாயிறு அன்று அழித்துவிடவும், காரணம் உங்கள் கைத்தொலைப்பேசியும் பரிசோதனைக்குள்ளாகலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன.எனவே, சகோதரர்கள் அனைவரும் கவனமாக நடந்துக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

அனைவரும் ஒன்று திரண்டு மாபெறும் மக்கள் சக்தியை உருவாக்குவோம்.

இந்திய சமுதாயம் வாழ்க!!
மலை நாடு வாழ்க!!

போராட்டம் தொடரும்...

மலேசியாத் தொடர்பாக 2004-இல் வெளியான மனித உரிமை அறிக்கை.

Malaysian Political Tension Simmers With Indian Flavour : பதிவிறக்கம்

உலகின் முக்கிய செய்தி ஊடகங்களுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கலாம். இதன்வழி அமைதிப் பேரணியில் வன்முறை நடப்பதற்கான வாய்புக்கள் குறையும்.

CNN

Al Jazeera

International Herald Tribune

BBC News

Fox News

Asia News Network

MediaCorp News (Channel News Asia)

Time Magazine (Asia Edition)


Indian Media

Sify

NDTV

News Channel India

Hindustan Times


Tamil Media

Dinamalar

DinaThanthi

Sun News

Makkal TV

Chennai Online

Vijay TV

Tamil Canadian

தகவல் ஊடகங்களின் முகவரிகள் கொடுத்தவர் : www.raajarox.com

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP