மகஜர் சமர்ப்பிக்கப்படவில்லை...
>> Wednesday, November 28, 2007
type="text/javascript">mkinitv_client("HINDRAF_Klang_2611.wmv");
விடுவிக்கப்பட்ட நம் வழக்கறிஞர்களுக்கு முதலில் நாம் சபாஷ் சொல்லிக்கொள்வோம்.
இந்து உரிமைப் பணிப்படை 200,000 கையொப்பம் இடப்பட்ட மகஜரை தொலை நகல் வழி பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அனுப்பிவிட்டதாக வெளியான செய்தி ஒரு வதந்தியென வழக்கறிஞர் உதயக்குமார் அவர்கள் தெரிவித்தார். போலீஸ் படைத் தலைவர் மூசா, பத்திரிக்கையாளர்களிடம் பேட்டிக் கொடுக்கும்பொழுது மகஜர் தொலை நகல் வழி அனுப்பப்பட்டுவிட்டதாக வதந்தியை கிளப்பிவிட்டதை எதிர்த்து வழக்கறிஞர் பேசுகையில், பணிப்படையினரே உண்மை விஷயங்களை வெளியிடுவதற்கு முன்பு மூசா தேவையில்லாமல் பொய்களைக் கூறியுள்ளதால் அவர் மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.அதோடு மகஜரை ஜனவரி மத்தியில் 10 பேர் அடங்கியக் குழு இங்கிலாந்திற்குச் சென்று நேரடியாக பிரிட்டிஷ் அரசியாரிடமே கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கிடையில், பிரிக்பீல்ட்ஸில் உள்ள சிறீ பாண்டி உணவகத்தில் இந்து உரிமைப் பணிப்படைடினரின் உறுப்பினர்கள் கலாட்டா செய்ததாகவும், உணவக ஊழியர்களைத் தாக்கியதாகவும், உண்ட உணவிற்கு பணம் செலுத்த மறுத்தனர் எனவும் TV1,TV2,TV3,TV7,BERNAMA,MALAY MAIL போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அவ்வுணவகத்திற்கு தொடர்புக் கொண்டு பேசும் பொழுது, அவ்வுணவக உரிமையாளர் தாம் அப்படிக் கூறவில்லை எனக் கூறினார். இதிலிருந்தே நம் பேரணிக்கு இழுக்கு கொண்டுவர வேண்டும் என அம்னோ அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தகவல் ஊடகங்கள் திட்டம் போட்டு வதந்தியை பரப்புகின்றன, எனத் தெரிய வருகின்றது.
தகவல் ஊடகங்கள் உண்மைகளை ஆராய்வதில் நடுநிலைமை வகிக்க வேண்டியது அதன் கடமை, அதனை மீறி செயல்படுகின்றன அம்னோ அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தகவல் ஊடகங்கள்.
Al-Jazeera செய்தி
போராட்டம் தொடரும்...
1 கருத்து ஓலை(கள்):
அன்று தேவாமணி அவர்கள் வெளிநாட்டு செய்தி ஒன்றில் இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கீழ்தரமாக பேசியது மிகவும் வேதனை அளிக்க கூடிய விசயம். அதே நபர் பார்லிமெண்டில் இந்தியர்களுக்கு சாதகமாக பேசியது, மாஇகாவினர் தேர்தலுக்காக பீடிகை போடுவதை காட்டுகிறது. இனியாவது நம் மக்கள் யோசித்து நடந்து கொள்வார்கள் என எதிர்பார்போம்.
Post a Comment