தான் ஆடாமல் போனாலும் தன் சதை ஆடும்...

>> Thursday, November 29, 2007


இன்றுக் காலையில் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் கணபதி ராவ் ஷா ஆலாமில் உள்ள அவர் வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை சிரம்பான் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிரம்பானில் இந்தியர்களின் உரிமைத் தொடர்பாக சொற்பொழிவு ஆற்றியதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்தார். காலை மணி 7.15 அளவில் கைது செய்யப் பட்ட வழக்கறிஞர் கணபதி ராவ் உடனடியாக சிரம்பான் காவல் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரங்களை நடத்தியதால் அவரின் மீது Sedition Act என்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என நம்பப்படுகிறது. மற்ற வழக்கறிஞர்களும் கைது செய்யப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயந்தவர்கள் அல்ல நம் வழக்கறிஞர்கள்.இதற்கிடையில் சென்ற வார அமைதிப் பேரணியில் கலந்துக் கொண்டு கைதானவர்கள் 114 ஜாமீனில் வெளியாவதற்கு ஆளுக்கு ரிங்கிட் 3000 செலுத்த வேண்டியுள்ளது. எனவே இந்து உரிமைப் பணிப்படையினர் நம் இந்திய மக்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், உங்களால் முடிந்த தொகையை இந்து உரிமைப் பணிப்படையினரின் சேமிப்பு வங்கியில் கொடுத்து அந்த வீர இளைஞர்களை உங்கள் சகோதரர்களாக எண்ணி உதவி புரிந்து விடுதலைப் பெறச் செய்யலாம்.

இதோ இந்து உரிமைப் பணிப்படையின் சேமிப்பு வங்கியின் விவரங்கள் கீழே :

HINDRAF ENTERPRISE

RHB ACC NUMBER : 21409900063168

மேலும் தகவல்களுக்கு :-

திரு.வசந்த் : 03-2825241 அல்லது 019-3718451

திரு. கணபதி ராவ் : 012-2861776

உங்கள் உதவி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது, நம் சகோதரர்களை காப்பாற்றுவோம் வாரீர்!!

மக்கள் தொலைக்காட்சியில் வெளிவந்துள்ளச் செய்தி. சாமிவேலு பிதற்றல்..
போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP