அனைவரும் ஒன்றுக்கூடுவோம்!!

>> Tuesday, November 13, 2007


வருகின்ற 25 நவம்பர் 2007, காலை 10 மணிக்கு பிரிட்டிஷ் தூதரகத்தின்முன் 100,000 இந்தியர்கள் கூடவிருக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மலேசிய இந்தியர்கள் கல்வி மற்றும் பொருளாதார அம்சங்களில் இன்னும் பின் தங்கி இருப்பதற்கு முக்கியக் காரணம் அம்னோ தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் அரசாங்கமே. மலாய்க்காரர்களுக்கு மட்டும் பிரத்தியேக சலுகைகள் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுவருகின்றது, இந்நிலை மாற வேண்டும். அனைவருக்கும் சம உரிமை இந்நாட்டில் வழங்க வேண்டும். நம்மை ஏமாற்றி இந்நாட்டிற்கு கொண்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 100,000 மேல் இந்தியர்களின் கையொப்பம் இட்ட மகஜரை பிரிட்டிஷ் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 25-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஒன்றாக இவ்வமைதிப் பேரணியில் கலந்துக் கொள்ள அனைத்து வீரத் தமிழர்களும் முன் வர வேண்டும்.

கையொப்பப்படிவத்தைப் பெற கீழே சுட்டுங்கள்: கையொப்பப்படிவ நகல்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP