அசத்திடாங்கய்யா நம்ம பசங்க...

>> Sunday, November 25, 2007

இன்று அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நம் அஞ்சாத சிங்கங்கள் நடத்திய போராட்டங்களை சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாள் முழுக்கச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். எத்தனை தடங்கல்கள், எச்சரிக்கைகள், மிரட்டல்கள் வந்தாலும் இதற்கெல்லாம் பயப்படாமல் கலந்துக் கொண்ட இந்தியர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அதிலும் முக்கியமாக சில ஆண்களே இந்த அமைதிப் பேரணிக்கு வருவதைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது, கொஞ்சம்கூட பயமே இல்லாமல் களத்தில் இறங்கிய நம் வீர இந்தியப் பெண்மணிகளுக்கு சிறந்தாழ்ந்த வணக்கங்கள்.

சொன்னதுப்போலவே அமைதியாகத் தொடங்கியப் பேரணியை போர்க்களமாக மாறுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் கலகத் தடுப்புக்காரர்களே!! கண்ணீர் குண்டுகள், அமிலம் கலந்த நீர்களைப் பாய்ச்சி நம்மைக் களைக்க முயன்ற கலகத் தடுப்புக்காரர்களுக்கு தோல்வியே நேர்ந்தது. சற்றும் சளைக்காத நம் இந்தியர்கள் காரியம் முடியும்வரை நின்ற இடத்தைவிட்டு நகரவே இல்லை.

இங்கு நான் எடுத்தப் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அதோடு ஒரு ஓட்டுனர் இல்லாத வாடகைக் காரை கலகத் தடுப்புக்காரர்கள் எப்படி அடித்து நொறுகினார்கள் என்றப் படக்காட்சியையும் இங்குத் தருகிறேன். இத்தகைய ஈனச் செயலில் ஈடுப்பட்ட அவர்கள் தங்கள் கைத்தொலைப்பேசிகளால் அக்காரைப் படம் பிடித்தனர். இதனைச் செய்தவர்கள் நம் இந்தியர்கள்தான் என அவர்கள் அறிவிப்புச் செய்தாலும் ஆச்சரியம் இல்லை. இந்தக் கேவலமான புத்தியுடையவர்கள் அப்படிச் செய்துவிடாமல் இருப்பதற்கு நாம் முன் நடவடிக்கை எடுத்துவிடுவது நல்லதல்லவா? இதில் கலகத் தடுப்புக்காரர்கள் எங்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியது குறிப்பிடத் தக்கது. நல்லவேளை அவர்கள் புரிந்த அட்டூழியங்களை என் புகைப்படக்கருவியில் பதிவுச் செய்துவிட்டேன். இன்னும் மேலும் பல காட்சிகள் இதோ உங்களுக்காக....

முக்கியக் குறிப்பு :மதியம் 1.30 மணியளவில் மலேசிய பிரிட்டிஷ் தூதரகத்திற்கும், பிரிட்டனில் உள்ள பிரிட்டிஷ் அலுவலகத்திற்கும் தொலை நகல் மூலம் மகஜர் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இது எந்த அளவில் உண்மை என வருங்காலங்களில் எதிர்ப்பார்ப்போம்..ஓட்டுநர் இல்லாதக் காரைச் சேதப் படுத்திய கலகத் தடுப்புக்காரர்கள்


சேதப்படுத்தியக் காரை தன் கைத்தொலைப்பேசியின் மூலம் கலகத் தடுப்புக்காரர்கள் படம் எடுத்தல். அவர்களின் உள்நோக்கம் நம் மீது பழிபோடவேண்டும் என்பதற்காக...
Al-Jazeera செய்திகள்Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP