கோழைகளின் அராஜகம்..

>> Tuesday, November 20, 2007

நேற்று நம் வழக்கறிஞர்களின் அலுவலகத்தில் சட்டத்தைமீறிய முறையில் காவல்துறையினர்களால் சோதனையிடப்பட்டது. Sek 4 (1)(c) Akta Hasutan 1948 சட்டத்திற்கு எதிராக நடந்துக்கொண்டமைக்காக இந்தச் சோதனை என தெரியவந்துள்ளது. இதிலிருந்து நம் நாட்டில் மனித உரிமைகளை வெளிக்கொண்டுவர கடுமையாக போராட வேண்டியுள்ளதுஎனத் தெரிகிறது. நம்மைத் தடுப்பதற்கு இந்த அம்னோ அரசாங்கம் எந்தெந்த இழிவான வழிமுறைகள நம் மீது தொடுத்தாலும் நாம் கலங்கிவிடக் கூடாது என்பது நம்முடைய கோரிக்கை. இந்த நாட்டில் மனித உரிமை காப்பாற்றபட வேண்டும், வருகின்ற சந்ததியினர் கோழைகளாக இருந்துவிடாமல் தைரியசாலிகளாக வாழவேண்டும். அதற்கு நாம் தியாக உணர்வோடு போராடவேண்டும்.








வருகின்ற 25-ஆம் திகதியில் நடைப்பெறவுள்ள மாபெரும் கூட்டத்தைக் களைத்திட பலவகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிலர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை (Internal Security Act,ISA) நம்மீது பிரயோகிக்க சாத்தியங்கள் உண்டு என வழக்கம்போல நம் வாயைமூட தந்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த அமைதிப் பேரணி நடைப்பெற அனுமதிக்கேட்டும் அரசாங்கம் வழங்கவில்லை. எப்படி இதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்!! இருப்பினும் நம் வழக்கறிஞர்கள் மீண்டும் அனுமதிக் கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 50 ஆண்டுகள் வாயைப்பொத்தி அம்னோவிற்கு ஆதரவு தெரிவித்தது போதும். மற்ற நாடுகளைப் பாருங்கள், எவருமே எந்த ஒரு அரசாங்கத்தையும் இத்தனை வருடங்கள் ஆட்சியில் வைத்ததில்லை. நமக்கு மாற்றம் வேண்டும், மலேசியா மாற வேண்டும், மக்களை சுதந்திரத்தை முடக்கும் சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும், எனவே இது ஆரம்பம்தான்.. இதை நல்லபடியாக ஆரம்பிப்போம். அமைதிபேரணியைக் கையாள்வோம். யாரும் ஆயுதங்கள் கொண்டுவர வேண்டாம் என தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நம் கூட்டத்திலேயெ சிலப் புல்லுருவிகள் இருப்பார்கள், ஆயுதங்களைக் கொண்டு கலகம் ஏற்படுத்த முயல்வார்கள், யாவரும் கவனமாய் இருக்க வேண்டும், யாரும் உணர்ச்சிவசப்பட்டு பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள். நாம் அடித்துக் கொள்வதைப் பார்த்துதான் கலகத் தடுப்புக்காரர்கள் நம்மைக் களைக்க வசதியாக இருக்கும். எனவே, 25-ஆம் திகதி அனைவரும் மகாத்மா காந்தியின் உருவம் எடுத்துவிடுங்கள், வன்முறையைப் பயன்படுத்தாதீர்கள். அனைவரும் இக்கூட்டத்திற்கு ஆரஞ்சு நிற உடையை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கிறார்கள் இந்து உரிமைப் பணிப்படையினர். முடிந்தால் சுலோகங்கள் ஏந்திய அட்டைகளைக் கொண்டுவரலாம். மனித உரிமைகள் தொடர்பாக, மலேசிய இந்திய மக்கள் தொடர்பான பிரச்சனைகளை உங்கள் சுலோகங்கள் பிரதிபலிக்கலாம்.

பிரிட்டிஷ் தூதரகத்தின் வரைப்படம்




கோலாலம்பூருக்கு வருகின்றவர்கள் புடு ராயா அருகே LRT PUTRA (Masjid Jamek Station)-இல் இலகு இரயில் எடுத்தால் பிரிட்டிஷ் தூதரகத்திற்கு (Ampang Park Station) அருகே வந்து இறங்கி விடலாம்.



எல்லோரும் கவனமாக இருந்து இந்த அமைதிப் பேரணியை வெற்றிப்பெறச் செய்வோமாக.

வாழ்க இந்திய சமுதாயம்!!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP