வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது!!
>> Friday, November 16, 2007
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, சென்ற புதன்கிழமைதான் மலேசிய இந்து சங்கம், (JAKIM), மற்றும் காவல்துறையினர் புக்கிட் ஆமானில் மத மாற்றம், ஆலயங்கள் உடைப்பு போன்ற பிரச்சனைகளை விவாதித்தனர். அதற்கு ஒரு நல்ல தீர்வு அமையும் என்று எண்ணியிருந்த வேளை மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையாகிவிட்டது.
அடுத்ததாக சுங்கை பட்டாணியில் முத்தையா ஆலயம் வருகின்ற 29-ஆம் திகதி நவம்பரில் உடைப்படபோவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மீண்டும் ஓர் ஆலய உடைப்பு சம்பவம் நம்முடைய பொறுமையை அதிக அளவில் சோதிப்பதாகவே உள்ளது. அம்னோ ஆட்சி புரியும் அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் மீது வீசும் எறிகணைகளை தகர்த்தெறிந்தாக வேண்டும்.
இந்தச் சமூகம் யாரை நம்பி ஓட்டுப்போட்டு அரசாங்க அரியணைகளில் அமர்த்தி அழகு பார்த்ததோ, அதற்குப் பலனாக என்ன கிடைத்தது பார்த்தீர்களா? கொச்சையாக சொன்னால் " வெச்சான் பாரு ஆப்பு"
"நம் சமுதாயம் இந்த நாட்டுக்கு தேவை இல்லை. முடிந்தால் இந்த நாட்டைவிட்டுச் செல்லலாம், இந்த சமுதாயத்தால் இந்த நாட்டிற்கு எந்த ஒரு நன்மையும் இல்லை" இதுபோன்ற இழி சொற்களை மலாக்கா மந்திரி புசார் அண்மையில் இந்திய மக்கள் முற்போக்கு கட்சி நடத்திய கூட்டத்தில் கூறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது, அதோடு ஆத்திரத்தையும் மூட்டுகிறது.
மக்கட் தொகையில் நாம் நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு குறைந்துக்கொண்டேபோவது நம்முடைய பலவீனங்களில் ஒன்று. மலேசியாவில் மூன்றாவது நிலைப்போய் தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்நிய தொழிலாளிகள் நம்மை முந்தி விட்டார்கள்.
இனி என்ன செய்வதாய் உத்தேசம்?
தயவுசெய்து இந்நாட்டைவிட்டுப் போவதை மட்டும் யாரும் கனவில் கூட காணாதீர்கள்.
இது நாம் பிறந்த மண். இதற்கு ஒரு விடிவுக்காலத்தை ஏற்படுத்தி இங்கேயெ நம்முடையே வேர்களை ஆழப் பாய்ச்சி நிலைத்தடுமாறாமல் நின்றுக்காட்டுவோம்!!
வாழ்க ஜனநாயகம்!!
வாழ்க தமிழ்ச் சமுதாயம்!!
Al-Jazeeraவின் மலேசிய இந்தியர்கள் தொடர்பான செய்திகள்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment