இந்து உரிமைப் பணிப்படை இயக்கம்

>> Thursday, November 1, 2007

மக்களின், குறிப்பாக மலேசிய இந்தியர்களுக்காக உரிமைக் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் இந்து உரிமைப் பணிப்படை எனலாம். அந்த அளவிற்கு அவர்களின் பங்கு நம் சமுதாயத்திற்கு உபயோகப்பட்டிருக்கின்றது. வழக்கறிஞர் திரு P.உதயக்குமார் அவர்களின் தலைமையில் இயங்கும் இப்பணிப்படை 30-ஆம் திகதி ஷா ஆலாம் தாமான் கருப்பையாவில் அமைந்திருக்கும் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு விரைந்திருக்கின்றது.
அங்கு காவல் துறையினரின் அராஜகத்தால் பலர் அடிப்பட்டு இறுதியில் கைதும் செய்யப் பட்டனர்.. இவர்களில் நம் இந்து உரிமைப் பணிப்படை வீரர்களான வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் அவர்களின் சகாக்களும் கைது செய்யப்பட்டு நேற்று விடுதலை அடைந்தனர். இதோ சிலப் படக் காட்சிகள்.......

வழக்கறிஞர் திரு P.உதயக்குமார் மற்றும் அவரின் சகாக்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அமர்த்தப்பட்டக் காட்சி..மகா மாரியம்மன் ஆலயத்தின் முன்னால் தோற்றம்..ஆலயம் உடைப்பட்ட தோற்றம்...கலகத்தடுப்பு பிரிவினர் நீரைப் பாய்ச்சி மக்களை அப்புறப்படுத்துதல்...
ஆலயம் உடைப்பட்டது தொடர்பாக இந்து உரிமைப் பணிப்படை செய்த காவல்புகார்...இந்து உரிமைப் பணிப்படை இயக்கம் நடத்தவிருக்கும் கூட்டங்கள்.. மறவாமல் கலந்து கொள்ளுங்கள்....


Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP