மனித உரிமைகள் எங்கே?
>> Tuesday, November 13, 2007
10/11/2007 ஆம் திகதி முறையான மற்றும் ஒழுங்கான தேர்தல் முறையைக் கையாளப் பரிந்துரைச் செய்யும் வகையில் மலேசிய நாட்டின் மாமன்னருக்கு மகஜர் சமர்ப்பிக்க BERSIH எனும் தன்னார்வ அமைப்பு கோலாலம்பூர் மாநகரித்திலிருந்து மாமன்னர் மாளிகைக்கு அமைதியாக ஊர்வலம் செல்லும்போது ஆட்சியில் இருப்பவர்கள் கலகத்தடுப்பு காவல்காரர்களைக் கொண்டு கண்ணீர்ப்புகைகளையும் நச்சு நீரினைப் பாய்ச்சியும் கூட்டத்தைக் களைத்தது மிகவும் ஆத்திரமளிக்கும் ஒரு விஷயமாகும்.
அமைதி ஊர்வலத்திற்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பதே முறை. அதனைவிடுத்து தங்களின் காட்டுமிராண்டித்தனத்தை ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் மீது காட்டியிருப்பது அவர்களின் சூழ்ச்சியை புலப்படுத்துகிறது.
மனித உரிமைகள் பறிக்கப்படும் இதுப்போன்றச் சம்பவங்களுக்கு சரியான பதிலடி இவர்களுக்கு தேர்தலின்போது வாக்களிக்காமல் இருப்பதேயாகும்.
நாம் வேற்றுமண்ணுக்கு சொந்தக்காரர்கள் கிடையாது. இது நாம் பிறந்த மண். இதற்கு நல்லது செய்வது நம் கடமை, நம்மை இங்கிருந்து விரட்டியடிக்க யாராலும் முடியாது. அதற்காக தைரியமாக உரிமைக் குரல் கொடுப்போம். கடவுளைத் தவிர யாருக்கும் பயப்படவேண்டாம். தமிழனே இங்கு நடக்கும் சம்பவங்களை உனக்கு பாடமாக எடுத்துக் கொள். விழித்தெழு! உன் வீட்டு பயிர் மேயப்படுவதற்குள் வேலியைக் கட்டிவிடு!!
படக்காட்சி 1
படக்காட்சி 2
படக்காட்சி 3
படக்காட்சி 4
அமைதி மறியல்பற்றி நாட்டின் பிரதமர் கூறும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
அமைதிக் கூட்டங்கள் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்கிறார்களே, கேட்டால் கிடைக்கிறதா?
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment