24 மணிநேர மகா யாகம்,உண்ணா நோன்புப் போராட்டம்..

>> Wednesday, August 27, 2008


வருகின்ற ஆகசுட்டு 30-ஆம் திகதி தொடங்கி 31-ஆம் திகதி வரை, இந்துராப்பு மக்கள் சக்தி தேசிய அளவில் மகா யாகமும் உண்ணா நோன்புப் போராட்டமும் நடத்தவுள்ளது.

திகதி : 30 ஆகசுட்டு 2008 – 31 ஆகசுட்டு 2008

நேரம் : 8.00 காலை (சனி 30 ஆகசுட்டு - ஞாயிறு 31 ஆகசுட்டு)

இடம் : தேவி சிறீ மகா மாரியம்மன் ஆலயம், சாலான் பெசார், மந்தின், நெகிரி செம்பிலான்.

இந்த மகா யாகத்திற்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தது ஒரு பேருந்தாவது வர வேண்டும் என்பது தலைவர் வேதமூர்த்தியின் வேண்டுகோள். மகா யாகத்தில் கலந்துக் கொள்பவர்கள் 24 மணிநேரமும் ஆலயத்தில் இருக்கும்படியும், உண்ணா நோன்புப் போராட்டத்தில் கலந்துக் கொள்ள எண்ணம் கொண்டவர்கள், தயவு செய்து முன்கூட்டியே நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் உங்கள் பெயரைப் பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

24 மணிநேரம் இடைவிடாது இறைவவின் நாமம் உச்சரிக்கப்பட இம்மகா யாகம் நடைப்பெறும். இந்த மகா யாகத்தில் இ.சா வில் கைதான ஐந்து இந்துராப்பு தலைவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், இந்துராப்பு போராட்டத்தில் கைதான போராட்டவாதிகளுக்கும் மற்றும் 51 வருடங்களாக அம்னோ அரசாங்கத்தினால் ஒடுக்கப்பட்ட மலேசிய இந்தியர்களுக்குமாக பிராத்தனை நடைப்பெறவுள்ளது.

மேலும் தகவல்களுக்கு :-

திரு.அரிதாசு - 012-3323 490
திரு.சிவா - 019 6944 693 / 06- 7672995/6

மறவாமல் கலந்துக் கொள்வீராக....

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP