தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆபத்து!

>> Friday, August 29, 2008


அண்மையில் 'கல்லுக்குள் நகரம்' என்ற பதிவின் வாயிலாக தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைப் பற்றிய சில சிறப்புகளைக் குறிப்பிட்டிருந்தேன். தமிழர்களின் சிறப்பை எல்லாம் ஒருங்கே வடித்து, அதனைக் கலை விருந்தாகப் படைக்க அரும்பெரும் தொண்டாற்றிய உடையார் ஸ்ர்ராசராசதேவரையும், கலைத்தாயின் மைந்தர்களான சோழர்காலச் சிற்பிகளையும் இவ்வேளையில் நாம் நினைவுக் கூர்ந்தே ஆகவேண்டும். என்னே அவர்களின் சாதனை..!

ஐக்கிய நாட்டுச் சபையின் கீழ் செயல்பட்டுவரும் யுனேசுகோ அமைப்பின் வழி உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கற்றளி, அண்மைய காலமாக பெரும் சோதனைக்கு உட்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்ததோடு, நெஞ்சம் விம்மவும் செய்கிறது.

இக்கோயிலின் விமானத்தைப் பாருங்கள்... எவ்வளவு கலைவேலைப்பாடுகளுடன் அமைந்த உயர்ந்த கருங்கல் விமானம்..!


ஆகம விதி, சில்ப சாத்திர நுணுக்கங்கள், புராதன கணித முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒவ்வொரு கல்லும் அடித்தளத்திலிருந்து விமானம் உச்சி வரை எடைக்கு எடை, நாற்புறத்திலும் சம அளவிலான பாரம் கொடுக்கப்பட்டு ஒரு பிரமிட்டைப் போல் கட்டி எழுப்பியுள்ளனர் நம் தமிழர்கள். இப்புராதன கட்டுமானத்தின் நுணுக்கங்களை இன்றளவிலும் பொறியியலாளர்களால் முழுமையாகப் புரிந்துக் கொள்ள இயலவில்லை.

நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில், அவற்றைப் பயன்படுத்தி இக்கோயிலைக் காலங்காலமாய் நிலைத்து நிற்கச் செய்து, வருங்கால சந்ததியினர் வரலாற்றை நினைத்து பூரித்துவிடும்படி செய்ய வேண்டாமா? முக்கிய விடயங்களை அறிவிக்கும் கல்வெட்டுகளைப் பாதுகாத்து வரலாற்றைக் காக்க வேண்டாமா?

ஆனால் அண்மைய காலமாக இக்கோயிலுக்கு ஏற்பட்ட சோதனை என்ன?

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை அண்மையில் தஞ்சை பெருவுடையார் கோயிலில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபடுவதாகக் கூறி, கோயிலின் பல பகுதிகளைச் சேதப்படுத்தி, வரலாற்றைச் சிதைத்து உள்ளனர். புனரமைப்பு என்றப் பெயரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருகற்றளியைச் சேதப்படுத்தப்படும் வேளையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தஞ்சை இராசராசீச்சுரம் திருக்கற்றளியின் இரண்டாவது கோபுரமான ராசராசன் கோபுரத்துடன் இணைத்து தெற்கு - வடக்காக 125.21 மீ.நீளமும், கிழக்கு மேற்காக 241.51 மீ.நீளத்துக்கு நான்கு புறங்களிலும் திருசுற்று மாளிகை எனப்படும் சுற்று மண்டபத்துடன் கூடிய மதில் சுவர்கள் அமைந்துள்ளன. கோயிலின் வடக்குப்புற திருச்சுற்றின் ஒரு பகுதியில் சுவரின் அடித்தளம் மன்ணில் புதைந்ததுடன், அதனருகே மற்றொரு மேற்கூரையில் விரிசலும் ஏற்பட்டது அண்மையில் கண்டறியப்பட்டது.



இக்கோயிலைப் பராமரித்து வரும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை அதைச் சீரமைக்க முடிவெடுத்து, வடக்கு திருச்சுற்று மாளிகையில் அம்மன் சன்னதிக்கும், சுப்பிரமணியர் சன்னதிக்கும் இடைப்பட்ட பகுதியில் 50 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்க ரூ.59 லட்சத்தை ஒதுக்கி, முதல் தவணையாக ரூ.25 லட்சத்தை அனுமதித்து பணிகள் தொடங்கின.

பழுதடைந்த கற்களுக்கு மாற்றாக புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையிலிருந்து பெரிய கருங்கல் பாறைகள் கொண்டு வரப்பட்டன. இத்திருச்சுற்று மாளிகையில் 206 லிங்கங்கள் உள்ளன. பணி நடைப்பெறும் பகுதியில் இருந்த 23 லிங்கங்கள் அகற்றப்பட்டு பணிகள் நடைப்பெறுகின்றன.

பாதுகாப்பான வகையில் கல் தூண்களைப் பிரித்தெடுக்கத் தவறியதால் பெரும்பாலான சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய தூண்கள் துண்டு துண்டாக உடைந்து சேதமடைந்துள்ளன. இந்தத் தூண்கள் பழைய நிலையில் மீண்டும் இணைக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளன. பழங்கால கட்டிடங்களைப் பற்றிய தகவல்களும், கட்டிட நுணுக்கங்களும், அதனைப் புனரமைக்கும் வேலைகளில் சற்றும் முன் அனுபவமில்லாதவர்களால் வந்த வினை இது!

தஞ்சை பெருவுடையார் கோயில் திருச்சுற்று மாளிகையிலிருந்து பிரித்தெடுத்தபோது சிதைந்த கல்வெட்டுத் தூண்கள் (வலது) மகா மண்டபம் குமுதப்படையில் இயந்திரம் கொண்டு அறுக்கப்பட்டப் பகுதி.


இவர்களால் சேதப்படுத்தப்பட்ட தூண்களிலுள்ள கல்வெட்டில் இராசராச சோழனின் வாய்மொழி உத்தரவின் பேரில், சோழநாட்டு அமன்குடியைச் சேர்ந்த சேனாதிபதி மும்முடி சோழ பிரம்மராயன் தலைமையில் இந்தத் திருச்சுற்று மாளிகை கட்டப்பட்டது என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேச் செய்திக் குறிப்பு விமானத்தின் பின்புறமுள்ள கருவூர் சித்தர் சன்னதிக்கு அருகிலுள்ள திருச்சுற்று மாளிகை தூண் உட்பட மூன்று இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உடைக்கப்பட்ட தூண்களில் இராசராச சோழனும் அவரது மகன் இராசேந்திர சோழனும், இக்கோயிலுக்காக அளித்த செப்புத் திருமேனிகள் மற்றும் நகைகள் குறித்து கூறப்பட்டுள்ளன.



பழமையான கட்டிடங்களைப் பிரித்தெடுக்கும் போது முக்கிய ஆவணங்களாகத் திகழும் கல்வெட்டுகளைப் பாதுகாப்பது அவசியம். தூண்களுக்கு அழிவு நேரிட்டதுபோல் இக்கோயிலின் மகா மண்டபத்தின் தென்புற துணை பீடம், அதிட்டானம் ஆகிய பகுதிகளில் திருப்பணி என்ற பெயரால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அதிக எடையுள்ள கற்களைப் பிரித்தெடுக்கும் பணியில் மனித உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதால், தூண்கள் கீழே விழுந்து சேதமடைந்துள்ளன. பல லட்சம் நிதி ஒதுக்கி செலவு செய்யும் தொல்லியல் ஆய்வுத் துறை நவீன இயந்திரங்களைக் கொண்டு பணிகளைச் செய்திருந்தால் இந்த இழப்பை தவிர்த்திருக்கலாம்.

தொல்லியல் ஆய்வுத் துறையால் ஏற்பட்ட இந்தச் சேதம் 'ஒரு தேசிய இழப்பு' என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


துறை சார்ந்த வல்லுநர்களின் நேரடி மேற்பார்வையில் இப்பணி நடைப்பெறாததால் இராசராசனின் பல கல்வெட்டுகள் முர்றிலுமாக அழிந்துவிட்டன. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்களின் முன்புள்ள அறிவிப்புப் பலகையில், அச்சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



அத்தகைய அறிவிப்பு வெளியிட்ட தொல்லியல் ஆய்வுத் துறையினரே வரலாற்றுச் சின்னத்தின் கல்வெட்டுகளை அழித்தால் அவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? இனியாவது தொல்லியல் ஆய்வுத் துறையின் உயர்நிலை அலுவலர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மேலும் அழிவுகள் ஏற்படாத வகையில் இக்கோயிலைக் காப்பாற்ற வேண்டும் என்பதே கலை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு. புலம்பெயர் தமிழர்களான மலேசியத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பும் அதுதான் என நம்புகிறேன்.

இப்பதிவைப் படிப்பவர்கள் தயவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டு கடிதத்தையும், பதிவில் உள்ள படங்களையும், கொடுக்கப்பட்டுள்ள முகவரிகளுக்கு அஞ்சல் மூலமோ அல்லது மின்மடல் மூலமோ அனுப்பி வைத்து, சம்பந்தப்பட்டவர்களை உரிய நடவடிக்கை எடுக்கக் கூறலாம்.

Dear Sir/Madam,

I write in respond to the plea by G.P.Srinivasan in his article “Imminent Danger to Thanjavur Big Temple” as published in the Haindava Keralam website, i.e http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=6999&SKIN=B on 21st August 2008. Please see the attachment enclosed for reference.

The article clearly explains the appalling renovation works supposedly being carried out to restore/conserve a World Heritage Monument as declared by UNESCO. It also depicts the lack of awareness, respect and sensitivity by the named responsible body i.e ASI (Archeological Survey of India ) into the preservation of such an ancient, sacred, religious and cultural shrine.

Therefore, I am appealing to the UNESCO and relevant Indian Authorities to promptly intervene to stop such an atrocious dilapidation and insult of our Ancestral Testimony. I urge you to respond and rely on your compassionate understanding of this very sensitive matter.

Yours Sincerely,

உங்கள் பெயர்
( A Malaysian of Indian Origin and Devoted Hindu Practitioner).

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரிகள் :-

Hon'ble Smt. Ambika Soni,

Union Minister for Culture,
Govt. of India, New Delhi TEL. -26499332, 26494199, 26494652Fax 26494652, 9868181830(M)22, Akbar Road, New Delhi

Hon'ble Smt. Sonia Gandhi,
UPA Chairperson,
New Delhi
soniagandhi@sansad.nic.in
Fax: +91 (0)1123017047

Hon'ble Dr. Manmohan Singh,
Prime Minister of India, New Delhi
manmohan@sansad.nic.in pmosb@pmo.nic.in
Tel.Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857 Tel. 23018939, 23011156, 23018907, 23019334, 23015470

Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru Kalaignar Mu. Karunanidhi,
Chennai. cmcell@tn.gov.in

The World Heritage Centre, UNESCO
Attention:
Mr Francesco Bandarin, Director, F.Bandarin@unesco.org
United Nations Educational, Scientific and Cultural Organization
7, place de Fontenoy
75352 Paris 07 SP, France
Tel: +33-(0)1-45 68 15 71 / +33-(0)1-45 68 18 76
Fax: +33-(0)1-45 68 55 70
E-Mail: wh-info@unesco.org
Technical support: wh-support@unesco.org

Mme Zohra Nidaye,
Secretary, Central and South Asia Unit z.ndiaye@unesco.org

Mme Anne Lemaistre,
Chief of Policy and Statutory Implementation Unit A.Lemaistre@unesco.org

Mme Minja Yang,
Director and UNESCO Representative to Bhutan, India, Maldives and Sri Lanka
m.yang@unesco.org

மலேசிய இந்திய தூதரகம்

High Commission Of India
No. 2, Jalan Taman Duta,
Off Jalan Duta,
50480 Kuala Lumpur

Tel: (00-603) 20933510
Fax: (00-603) 20933507, 20925826

E-mail: hc.kl@streamyx.com

தமிழ் நாடு அரசு

tourism and culture tamil nadu
Dr. V. Irai Anbu IAS
Secretary to the Government,
Secretariat, Chennai - 600 009

Phone : 25670820 (O), 25384990 (R)
Fax : 25670820, 25670716, 25676287
E-Mail : toursec@tn.gov.in

Department of Archaeology,
Tamil Valarchi Valaagam,
Halls Road, Egmore,
Chennai – 600 008.

மின்மனுவில் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.

http://www.ipetitions.com/petition/tanjavurtemple/

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

8 கருத்து ஓலை(கள்):

Anonymous August 29, 2008 at 6:13 PM  

hi,

This is a very nice blog!

i can see your dedication to our culture and ofcourse our Beloved Great Temple and Raja Raja Cholan!

Shriram

Sathis Kumar August 29, 2008 at 7:04 PM  

நன்றி சிறீராம், மின்மனுவில் கருத்தைப் பதிந்து விட்டமைக்கு எனது நன்றிகள்.. :)

சுப.நற்குணன்,மலேசியா. August 29, 2008 at 11:51 PM  

தமிழரின் மரபுவழிச் சிறப்புகள் அத்தனைக்கும் ஆவணமாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்போமாக! தஞ்சைப் பெரிய கோயில் பத்தோடு பதினொன்றாக எண்ணத்தக்க கோயில் அல்ல! அது தமிழரின் வாழ்வையும் வரலாற்றையும், கலையையும் கடவுளையும், அறிவாண்மையையும் ஆன்மிகத்தையும் பறைசாற்றும் கற்கோயில்.. தமிழரின் தாய்க்கோயில்!!

தஞ்சைப் பெரிய கோயிலில் நிகழும் ஆபத்தை அறியச்செய்த ஐயா.சதீசுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்!

சுரேஷ் ஜீவானந்தம் August 30, 2008 at 2:46 AM  

வேதனைதான். எதைத்தான் உருப்படியாகச் செய்வார்களோ...

Anonymous August 30, 2008 at 4:02 AM  

மிக அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு.

திறமையற்றவர்களின், பொறுப்பற்றவர்களின் கையில் இதுபோன்ற மகாபெரிய பொறுப்புகளை ஒப்படைத்தால் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? குரங்குகயில் கையில் கிடைத்த பூமாலை கதைதான் போங்கள். வசதிபடும்போது தக்க சமயத்தில் மின்னஞ்சல் செய்வேன். பகிர்ந்தமைக்கும் உங்கள் பணிக்கும் மிக்க நன்றி.

Sathis Kumar August 30, 2008 at 8:25 AM  

//தஞ்சைப் பெரிய கோயில் பத்தோடு பதினொன்றாக எண்ணத்தக்க கோயில் அல்ல!//

நற்குணன் ஐயா, சரியாக சொன்னீர்கள்... ராசராசன் எழுப்பிய கற்றளியல்லவா இது, இந்த வரலாற்று ஆவணைத்தைக் காப்பது நம் கடமையல்லவா..

Sathis Kumar August 30, 2008 at 8:27 AM  

//வேதனைதான். எதைத்தான் உருப்படியாகச் செய்வார்களோ...//

எதையாவது உறுப்படியாக செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சிறு முயற்சி சுரேஷ்..

வருகைக்கு நன்றி...

Sathis Kumar August 30, 2008 at 8:28 AM  

//வசதிபடும்போது தக்க சமயத்தில் மின்னஞ்சல் செய்வேன். //

மிக்க நன்றி மாசிலா...

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP