நான்கு இண்ட்ராப் ஆதரவாளர்கள் கைது!!
>> Thursday, August 7, 2008
இன்று மதியம் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தின் வெளியே அறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருந்த நான்கு இண்ட்ராப் ஆதரவாளர்கள் காவல்த் துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைதான நால்வரில் ஒரு பெண்மணியும் அடங்குவார் என டாங் வாங்கி ஓ.சி.பி.டி துணைத் தலைமைக் காவல்த்துறை அதிகாரி சூல்கார்னாயின் அப்துல் ரகுமான் நிருபர்களிடம் தெரிவித்தார்.
கைதானவர்களின் வழக்கறிஞரான திரு.சுரேந்திரன் கூறுகையில், 54-வது காமன்வேல்ட் மாநாட்டின்போது 30 இண்ட்ராப் உறுப்பினர்கள் அறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்நால்வரும் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். மாநாட்டில் கலந்துக் கொண்ட உலக சட்டவல்லுனர்களுக்கு, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் அராஜகமான முறையில் கைதான 5 இண்ட்ராப் தலைவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துரைக்கவே, இண்ட்ராப் ஆதரவாளர்கள் அறிக்கைகளை விநியோகித்துக் கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்தார்.
20 நிமிடங்கள் கால அவகாசம் கொடுத்த காவல்த் துறையினர், 15 நிமிடங்கள் கழித்து எஸ்.ஜெயதாஸ், எஸ்.பூபாலன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் பி.சுசிலா போன்றோரைக் கைது செய்து டாங் வாங்கி தடுப்புக் காவலில் அடைத்தனர். ஏழு ஆண்கள் அடைக்கப்பட்டுள்ள செல்லில் பி.சுசிலாவை அடைத்து வைத்தது தமக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுப்பதாக அவர் மேலும் கூறினார். அவர் இண்ட்ராப் ஆதரவாளர் என்பதற்காக இப்படி அவமானப்படுத்தலாமா என அவர் முறையிட்டார்.
காவல்த்துறை அதிகாரி சுல்கார்னாயின் கூறுகையில், சுசிலாவிற்குப் பாதுகாப்பாக ஒரு பெண் காவல்த்துறை அதிகாரி செல்லின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், கைதானவர்கள்மீது Section 27 (5) Police Act எனும் சட்டத்தின் கீழ் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"வெளிநாட்டினர் மாநாட்டிற்குக் கலந்துக் கொள்ள வந்துள்ளனர், அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்" என நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் சுல்கார்னாயின் கூறினார்.
சொந்த நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துக் கொண்டு, வெளிநாட்டினருக்கு பாதுகாப்புக் கொடுக்கிறார்களா.. வேடிக்கையாக உள்ளது..! உலகளவில் மலேசியத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி உரிமைகளையும் ஐவரையும் மீட்கும்வரை..
போராட்டம் தொடரும்...
அண்மைய கருத்துக் கணிப்பின் முடிவுகள்..
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment