இண்ட்ராப் ஆதரவாளர்களின் உண்ணா நோன்புப் போராட்டம்..
>> Monday, August 11, 2008
நேற்று சுமார் 30 பேர்கள் அடங்கிய இண்ட்ராப் ஆதரவாளர்கள் குழு ஒன்று, கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் நுழைவாயிலில் உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர். இதேப் போன்ற போராட்டம் நாடு தழுவிய நிலையில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து இண்ட்ராப் தலைவர்களையும், பிரிட்டனில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள திரு.வேதமூர்த்தியையும் விடுவிக்கக் கோரும் போராட்டமே இது என திரு.ஜெயதாஸ் கூறினார். மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள திரு.உதயகுமாருக்கு உரிய சிகிச்சையை வெளிநாட்டில் அளிக்க வேண்டும் என மலேசிய அரசாங்கத்தைக் கோருவதாயும், உள்நாட்டு மருத்துவமனைகளின் மீது தாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் கூறினார். இவ்வுண்ணா நோன்புப் போராட்டம் இனி நாடு தழுவிய நிலையில் காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணிவரைத் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.
மலேசியா கினி படச்சுருள்
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment