விடுதலையே உதயம் ...

>> Friday, August 8, 2008விடியல்
ஒளிக்கற்றைகள்
உன் விழிகளில்
இளைஞர்
படையணியினர்
உன் வழிகளில் ...

வளர்ந்த
உன் தாடிக்குள்
ஞானம் தேடும்
ஆட்சியாளர்கள்
கிழிந்த
உன் கால்சிலுவாரில்
பாடம் படிக்கும்
காவலர்கள் ...

உன்
உதயம்
கொடுமதியாளர்
கண்களைக்
கூசச் செய்துள்ளது ...

உன் மூர்த்தி
அவர்களது கீர்த்திக்கு
அபாய சங்கு
ஒலித்துள்ளது ...

உனக்கு தினம்
கஞ்சி தந்து
எடைக் குறைத்தார்கள்
மக்கள் மனதில்
உன்
எடை கூடச் செய்தார்கள் ...உன் காலில் அணிவித்த
ஜப்பான் சிலிப்பரில்
அநீதியாளர்களின்
ஆணவம் நசுங்குகிறது ...

உன்னை
பித்தளை என
பல்லைப் பிடித்தார்கள்
நீ
சொக்கத் தங்கம்
என்றறிந்து
உடலைத் தேய்த்தார்கள் ...

உன்
சுதந்திரத்தைப் பறித்த
கொடுமதியாளர்
உன்
மருந்தையும் மறுப்பதில்
நியாயம் தேடுகிறார்கள்

அநீதி
ஆட்சி செய்யும்
இருண்ட நாட்டில்
உன் விடுதலை மட்டும்
மக்கள் ஏங்கும்
உதயமாகும்!


- கவிஞர் பிரான்சிஸ் ஆரோக்கியசாமி -
(தற்போது சுவீடனில்)

சுவீடன் முகவரி :

Serenadgatan 50.
21572 Malmo, Sweden.

தொலைப்பேசி எண்கள் : +0046762974385
மின்னஞ்சல் முகவரி : khileefrancis@yahoo.com

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Anonymous August 10, 2008 at 11:17 PM  

அன்று
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி....

இன்று
மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டத்திற்கு உதயக்குமார்....

ஈடுகட்ட இயலாத தியாகங்கள்....

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP