மக்கள் சக்தியின் வெற்றி!
>> Wednesday, August 27, 2008
நேற்று விறுவிறுப்பாக நடைப்பெற்ற பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில், தேசிய முன்னனியின் வேட்பாளர் அரிப் ஷா ஓமார் மற்றும் அக்கிம் கட்சியின் வேட்பாளர் அனாஃபி அகமதுவை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அனுவார் இபுராகிம் 15,671 பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார்.
ஓட்டுகளின் என்ணிக்கை..
தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை : 58,459
அனுவார் இபுராகிம் (மக்கள் கூட்டணி) : 31,195
அரிப் ஷா ஓமார் (தேசிய முன்னணி) : 15,524
அனாஃபி அகமது (அக்கிம்) : 92
வாக்களித்தவர்கள் சதவிகிதம் : 81.01 %
பழுதான ஓட்டுகள் : 447
திரும்பப் பெறப்படாத ஓட்டுகள் : 98
கடந்த நாட்டின் 12-வது பொதுத் தேர்தலில் மக்கள் நீதிக் கட்சியின் வேட்பாளர் வான் அசிசா இசுமாயிலுக்கு கிடைத்த ஓட்டுகளைவிட இம்முறை அவரின் கணவர் அனுவார் இபுராகிமிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுவாரின் வெற்றி ஒரு தனிப்பட்ட மனிதரின் வெற்றி அல்ல. மாற்றத்தை விரும்பிய பெர்மாத்தாங் பாவ் மக்கள் கொடுத்த ஆதரவுதான் இன்று அனுவாரை வெற்றிப் பெறச் செய்துள்ளது.
விரைவில் அனுவாரின் புத்ரா ஜெயாவில் காலடி எடுத்து வைக்கும் கனவு நிஜமாகவேண்டும். அடுத்த கணமே கமுந்திங் தடுப்புக் காவல் கதவுகள் திறக்கப்பட்டு ஐந்து பறவைகள் சுதந்திரமாய் பறக்க வேண்டும்.
மக்கள் சக்தி மகத்தானது..!
வாழ்க சனநாயகம்..!
2 கருத்து ஓலை(கள்):
//விரைவில் அனுவாரின் புத்ரா ஜெயாவில் காலடி எடுத்து வைக்கும் கனவு நிஜமாகவேண்டும். அடுத்த கணமே கமுந்திங் தடுப்புக் காவல் கதவுகள் திறக்கப்பட்டு ஐந்து பறவைகள் சுதந்திரமாய் பறக்க வேண்டும்.//
ஆமாங்க..பலர் காணும் கனவிது, நினைவாகும் நாளும் விரைவில் வரும். இறைவனைப் பிரார்த்திப்போம்!
//மக்கள் சக்தி மகத்தானது..!//
நிரூபித்து கொண்டு தான் இருக்காங்க! வாழ்க வாழ்க! இனிமேல் 'தலைவர்களின்' பொய் பித்தலாட்டத்திற்கு மக்கள் பலியாகமாட்டார்கள்...
நல்ல பதிவு. நன்றி :))
"அடுத்த கணமே கமுந்திங் தடுப்புக் காவல் கதவுகள் திறக்கப்பட்டு ஐந்து பறவைகள் சுதந்திரமாய் பறக்க வேண்டும்"....
இந்த ஐவரும் மிக விரைவில் வெளியாக வேண்டும் என்பதே நம் இப்போதைய எண்ணம், முயற்சி , கனவு போராட்டம்....
டத்தோ ஸ்ரீ அன்வாரின் இந்த மகத்தான வெற்றி அதற்கு வழி வகுக்கும் என்று நம்புவோம்...
தொடர்ந்து பலத்த ஒற்றுமையோடு போராடுவோம்...
Post a Comment