கைதானவர்கள் விடுதலை!
>> Monday, August 25, 2008
கடந்த 23-ஆம் திகதி, பண்டார் பெர்டா செபராங் ஜெயாவில் நடைப்பெற்ற மறியலில் கைதான ஒன்பது இந்துராப்பு ஆதரவாளர்களில் இரு பெண்மணிகள், நேற்று மதியம் 2 மணியளவிலும் மற்ற எழுவர் இன்று மாலை 6 மணியளவிலும் விடுவிக்கப்பட்டனர்.
சாந்தி 30, சாரதா 34 ஆகிய இருவரையும் பேராக் மாநில இந்துராப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.வேதமூர்த்தி பிணை கையெழுத்திட்டப் பின் விடுவித்தனர்.
இந்துராப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரனையும் மற்ற அறுவரையும் மத்திய செபராங் பிறை மாவட்ட காவல் நிலையத்திலிருந்து வட செபராங் பிறை மாவட்ட காவல் நிலையத்திற்கு இன்று காலையில் கொண்டு சென்றனர். அதன்பின் மாலை 6 மணியளவில் எழுவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பட்டவெர்த் காவல் நிலையத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் திரு.இராமசாமி, காப்பார் நாடாளுமன்றத் தொகுதி தலைவர் திரு.மாணிக்கவாசகம், ரூனி லியு போன்றோர் வருகை புரிந்திருந்தனர். காவல் நிலையத்தின் வெளியே சுமார் இருநூறு இந்துராப்பு ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர்.
பிணையிலிருந்து விடுவிக்கப்பட்ட திரு.தனேந்திரன், இந்துராப்பு ஆதரவாளர்களை நோக்கி உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட காவல்த் துறையினர் கூட்டத்தினைக் கலைக்க முயன்றனர். அவ்விடத்தில் பினாங்கு துணை முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், அவர்களை மதிக்காது காவல்த் துறையினர் அராஜகமாக நடந்துக் கொண்டனர். கலகத் தடுப்புப் படை முன்னிருத்தப்பட்டிருந்தது.
கலகத் தடுப்புப் படை முன்னிருத்தப்பட்டு தயார் நிலையில் இருத்தல்..
தமிழர்கள் மட்டும் இந்த நாட்டில் நியாயத்திற்காக ஒன்று கூடினால் தவறு..! ஆனால் மாரா பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தால் அது தவறு கிடையாதாம்...!
நமக்கொரு நியாயம், அவர்களுக்கோர் நியாயம்..!
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment