இண்ட்ராஃப் குரல் 17/10/2008
>> Friday, October 17, 2008
ஊடக அறிக்கை 17/10/2008
கரு: பாரிசான் பங்காளிக் கட்சிகளனைத்தும் குரலெழுப்ப இதுவே தக்கத் தருணம்.
இண்ட்ராஃபின் உண்மைப் போராட்டத்தையும், மலேசிய இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் குறித்து பாரிசானின் உறுப்புக் கட்சிகளனைத்தும் ஒருங்கே குரலெழுப்ப வேண்டும் என இண்ட்ராஃப் அழைப்பு விடுக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்து 51 ஆண்டுகளாக அம்னோ அரசாங்கத்தின் ஆட்சியின்கீழ் மலேசிய இந்திய சமுதாயத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வந்ததோடுமட்டுமல்லாது, ஒட்டு மொத்த மலேசிய இந்திய சமுதாயமும் பலவகையில் அடக்கப்பட்டு, தடுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு நிரந்தர காலனித்துவத்தின்கீழ் அடிமைப்பட்ட சமுதாயமாக புறந்தள்ளப்பட்டு வந்துள்ளது. இவ்வநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியில் இண்ட்ராஃப் முற்போக்கான நடவடிக்கைகளில் இறங்கி பலவிதமான இழப்புகளையும் தாங்கிக் கொண்டு வந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டங்கள் ஆவணச் செய்யும் சனநாயகக் குரலை ஒடுக்கும் ஒரு முயற்சியாக தற்போது இண்ட்ராஃப் இயக்கம் தடைச் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பாரிசானின் அனைத்து உறுப்புக் கட்சிகளும் தன்நிலையோடு முன்வந்து மலேசிய இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும், இண்ட்ராஃப் இயகத்தின் உண்மைப் போராட்டத்தினையும் அதனைத் தடைச் செய்வதன் வழி அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அவநம்பிக்கையையும் குறித்து ஒருங்கே குரலெழுப்ப வேண்டும் என இண்ட்ராஃப் இயக்கம்கேட்டுக் கொள்கிறது. தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்றும் மேற்கோள்காட்டி அடிப்படையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, மக்களின் சனநாயகக் கருத்துகளை அம்னோ நிரந்தரமாக அடக்கிவிட முடியாது. தேசிய நலனையும், சட்ட ஒழுங்கினையும் பாதுகாத்திடவும்,பரிபாலிக்கவும் குரலெழுப்ப பாரிசானின் உறுப்புக் கட்சிகளுக்கு முக்கிய கடப்பாடு உண்டு. பாரிசான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல்லின உறுப்புக் கட்சிகளுக்கு ஆதரவாக ஓட்டு போட்ட மக்கள் தற்போது பொறுமை இழந்துவருவதோடு அவநம்பிக்கையும் அடைந்து வருவதால் நாளடைவில் இக்கட்சிகள் மக்களால் மறக்கப்பட்டுவிடலாம்.
அம்னோவின் அதிகாரத்துவ கர்வத்தையும், இண்ட்ராஃப்பை கேலிக்குள்ளாக்கும் பொறுப்பற்றச் செயலையும் கண்டனத்திற்குள்ளாக்க, நிதர்சன உண்மைகளின் அடிப்படையில் அனைத்து பாரிசான் உறுப்புக் கட்சிகளும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இண்ட்ராஃப் தலைவர்
பொ.வேதமூர்த்தி,
இலண்டன்.
இண்ட்ராஃப் ஊடக அறிக்கை ஆங்கிலத்தில் இங்கே : ஊடக அறிக்கை 17/10/2008
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment